Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 7

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

பல ஸ்கூல்களுக்கு நிதி திரட்டயிருக்கேன். ஆனா என் பசங்க படிக்க ஸ்கூல்ல ஸீட் கிடைக்கலை...

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 7

பல ஸ்கூல்களுக்கு நிதி திரட்டயிருக்கேன். ஆனா என் பசங்க படிக்க ஸ்கூல்ல ஸீட் கிடைக்கலை...

Published:Updated:
Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

திபக்தி 'யில் ஆரம்பித்த 'ப' சீரிஸ் படங்களுக்குப் போறதுக்கு முன்னாடி என் வீடு, கல்யாணம் பத்தியெல்லாம் இந்த வாரம் சொல்லலாம்னு நினைக்கிறேன்.

நான் பிரம்மச்சாரியாக இருக்கும் போதே.

1955 - ல் சொந்தமாக முதல்ல ஒரு வீட்டை வாங்கினேன். (இப்போது முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளைய ராஜாவை அறிமுகப்படுத்திய ஜி.கே.வெங்கடேஷ், தபேலா சி.ஆர்.கோபாலகிருஷ்ணன், நான் எல்லாரும் இந்த வீட்டிலதான் ஒண்ணா இருந்தோம்.) இதுக்கு முக்கியக் காரணம் - என்னை வளர்த்து ஆளாக்க அரும்பாடு பட்ட என் அம்மா, தாத்தா கிருஷ்ணன் நாயர் இவங்களையெல்லாம் மெட்ராஸுக்கு வரவழைச்சு, இனிமேலாவது கஷ்டமே தெரியாம சந்தோஷமா அவங்களை வெச்சிக்கணும்னு ஆசைப்பட்டேன்.

அதனாலதான் சாந்தோம்ல, இதோ இப்ப இருக்கேனே இந்த வீட்டை வாங்கிப்போட்டேன்.

இந்த வீட்டை வாங்கறதுக்கு டி.ஆர். ராமண்ணா. கமால் பிரதர்ஸ், பி.எஸ். ரங்கா, மாகோபி ( தெலுங்கு ) ஜூபிடர் முதலாளிகள் சோமு, முகைதீன்,. 'ஜெனோவா' ஈச்சப்பன், வேலுமணி, பீம்சிங்... இவங்கள்லாம்தான் உதவி செஞ்சாங்க... வீட்டை வாங்கியவுடனே ஊர்ல இருந்த அம்மா, தாத்தா எல்லாரையும் வரவழைச்சு என்னோடயே அவங்களை 'செட்டில்' ஆகச் சொன்னேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் ஒரு சரியான பொஸிஷனுக்கு வர்றவரைக்கும் கல்யாணம் பண்ணிக்கிறதில்லைன்ற ஒருவைராக்கியமே வெச்சிருந்தேன் . சின்ன வயசிலே நான் பட்ட கஷ்டங்களி னால், உழைச்சு முன்னுக்கு வந்து என் சொந்தக் கால்லேயே நிக்கணும்னு மனசுக்குள்ளே ஒரு தீர்மானம். 'புதையல்' , 'குலேபகாவலி' போன்ற வெற்றிப் படங்களை அடுத்து, தமிழ்த் திரையுலகில் நிலையான ஒரு இடம் எனக்குக் கிடைக்கும், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உண்டு என்ற உற்சாகத்தோடும் தன்னம்பிக்கையோடும் இருந்த நேரம் அது. இதைப் புரிந்து கொண்ட என் தாத்தா கிருஷ்ணன் நாயர் எனக்கேற்ற பெண்ணைத் தேட ஆரம்பித்தார். தெரிஞ்சவங்ககிட்டயெல்லாம் சொல்லி வெச்சிருந்தார்.

எங்க தாத்தாவும் அம்மாவும் காட்டின பெண்களை எல்லாம் பிடிக்கலை பிடிக்க லைன்னு தட்டிக் கழிச்சிக்கிட்டுருந்தேன். ஒரு நாள் நான் ஏவி.எம். ஸ்டூடியோவில் பாட்டு ரிக்கார்டிங் பண்ணிக்கிட்டிருந்த சமயம். 'டைரக்டர்கள் கிருஷ்ணன் - பஞ்சு. டான்ஸ் மாஸ்டர் தண்டபாணிப் பிள்ளை, உடுமலை நாராயண கவியோட அசிஸ் டெண்ட் செல்லமுத்து - இவங்கள்லாம் சேர்ந்து என்கிட்ட வந்தாங்க. "ஏவி.எம். புரொடக்ஷன்ல வாசு மேனன்னு இருக்கார். அவரோட அண்ணனுக்கு ஒரு மகள் இருக்காளாம். வாங்க! போய்ப் பெண்ணைப் பார்த்துட்டு வரலாம்"னு என்னைக் கூப்பிட்டாங்க. வாசு மேனனும் (கைராசி' படம் எடுத்தவர்!) என் ஊர் தான். ஆனா, அவருக்குத் தெரியாது நான் ஒரு மலையாளின்னு. அப்புறமா தெரிஞ்சுது - நானும் வாசு மேனனும் பந்துக்கள் என்கிற விஷயம்.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

கேரளாவில் பட்டஞ்சேரி என்ற ஊரில் அந்தப் பெண் இருந்தாங்க. என் ஊரான எலப்புள்ளி கிராமத்திலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தி லிருந்தது பட்டஞ்சேரி பெண்ணைப் பார்த்தோம். எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு - எனக்கும்தான். ஸோ , கல்யா ணத்தை மெட்ராஸிலே வெச்சுக்கலாம்னு நிச்சயம் பண்ணோம்.

மவுண்ட் ரோடிலிருந்த ஆபட்ஸ்பரி மண்டபத்தில் எங்க கல்யாணம்... என் வாழ்க்கைத் துணையோட பெயர் - ஜானகி. (வீட்டுல் பேபி னுதான் கூப்பிடுவோம் ! )

நான் சொந்தமாக சாந்தோமில் வீடு வாங்க உதவிய கலையுலக நண்பர்கள், ஏவி . எம் . செட்டியார் ஆகியோர் எனக்கு ஒரு பைசாகூட செலவில்லாமல் என் கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்தினார்கள் . என் குருநாதர் எஸ் . எம் . சுப்பையா நாயுடு, ஜி.ராம நாதய்யர் , கோவிந்தராஜுலு நாயுடு. என் எஸ் . கே . , எம் . ஜி . ஆர் . சிவாஜி இவங்களும் வந்திருந்து எங்க கல்யா ணத்தை நடத்தி வெச்சாங்க . சி . எஸ் . ஜெயராமன் கச்சேரி... என் கல்யாணம் நடந்து இரண்டு வருஷத்துக்கு ' விஸ்வநாதன் கல்யாணம் மாதிரி கோலாகலமா இதுவரை நடந்ததேயில்லை ' என ஃபிலிம் இண்டஸ்ட்ரியில் பேசற அளவுக்கு கிராண்டா நடந்தது.

கோபி, லதா, முரளி, பிரகாஷ், மது, சாந்தி, ஹரி என எங்களுக்குப் பிறந்தவை சப்தஸ்வரங்கள்' மாதிரி ஏழு குழந்தைகள்.

'படிக்காமலேயே காமராஜர் முதலமைச்சரானாரே, படிக்காத சொத்தை விஸ்வநாதன் மியூஸிக் டைரக்டராகலியா?'னு ரொம்பப் பேர் படிக்க வேணாம்னு நினைக்கறாங்க. என் அனுபவத்தை வெச்சு சொல்றேன். சில சமயங்களில் வெளிநாடுகளுக்குப் போன போது எங்களைப் பாராட்டி இங்கிலீஷ்லே பேசுவாங்க . படிக்காததால் ஒண்ணுமே புரியாம ஏதோ ஒரு குரங்கு . நாய் போல முகத்தை வெச்சிக்கிட்டு விழிப்பேன் . அதனால் எல்லாரும் நிச்சயம் படிச்சே ஆகணும் .

பல ஸ்கூல்களுக்கு நிதி திரட்ட நான் நிறைய இசை நிகழ்ச்சிகளை இலவசமாகவே நடத்திக் கொடுத்திருக்கேன் . ஆனா என் பசங்க படிக்க ஸ்கூல்ல ஸீட் கிடைக்கலை .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

அன்பே வா ' படம் ரிலீஸாகி எல் லாப் பாட்டுக்களும் ஹிட் ஆகியிருந்த சமயம்... டான் பாஸ்கோ பள்ளிக்காக ஃப்ரீயா ஒரு புரொக்ராம் பண்ணிக் கொடுத்தேன் . எனக்கு ஆர்மோனியப் பெட்டி ஒன்றைப் பரிசாகக் கொடுத் தாங்க . அப்போ நான் எம் . ஜி . ஆர் - கிட்ட " எனக்கு இதெல்லாம் பெரிசில்லை... இதுமாதிரி நிகழ்ச்சி இலவசமாகவே நிறைய நடத்திக் கொடுத்திருக்கேன்... ஆனா என் பசங்களுக்கு படிக்க ஸ்ட் கிடைக்கலை.... நீங்க சொல்லி ஸீட் வாங் கிக் கொடுங்க...‘ னு சொன்னேன் .

அதுக்கு எம் . ஜி . ஆர்.," உனக்கு வாயில்லையா... நீயே பேசு...' ன்னு சிரிச்சுக்கிட்டே என்னைப் பேசும்படி பண்ணிட்டார்.

எனக்கு மேடையில் பேசிப் பழக்கமில்லை . துணிவுமில்லை . ஆனாலும் , எம் . ஜி . ஆர் . கொடுத்த தைரியத்துல என் பசங்களுக்கு ஸீட் கேட்டுப் பேசிட்டேன் . இதைக் கேட்டுட்டு , அடுத்த நாளே ஸ்கூல் ஃபாதர் ஒருத்தரை அனுப்பி சொல்ல வேண்டியவங்ககிட்ட சொல்லி ஏற்காடுலே மகன் கோபிக்கு ஸீட் வாங் கிக் கொடுத்தாரு . அப்படி எல்லாம் சீட் வாங்கிக் கொடுத்தும் பசங்க படிக்க முடியலை.... படிப்பு வரலை . ' நினைப்ப தெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை னு கவிஞர் முன்னாடியே கரெக்டாதான் சொல்லிட்டுப் போயிட்டாரு...

என் மனசுக்குள்ள ரொம்ப நாட்களாகவே நிறைய தாகங்கள் உண்டு ; சில ஆதங்கங்கள் உண்டு . அதுல ஒரு ஆதங்கம்....

(19.12.1993 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து..)