என் மனைவி கொஞ்சம்கூட முகத்தைச் சுளிக்காமல் , வெறுப்பைக் காட்டாமல் , பரிவோடு நாயுடுவின் மனைவிக்குப் பணிவிடை செய்தாள் . அதை நான் ஒரு பெரிய பாக்கியமாக நினைக்கிறேன் . . . .
நான் முன்னுக்கு வந்து ஒரு வசதியான நிலையில் இருந்ததைப் பார்க்க என் அப்பா உயிரோடு இல்லை . ஸ்கூல்ல ஃபீஸ் கூட வாங்காம எனக்குச் சங்கீதம் கத்துக் கொடுத்த குரு நீலகண்ட பாகவதர் - உயிரோடு இல்லை . எனக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து ஒரு அசோஸியேட் டாகவே என்னை ஏத்துக்கிட்ட சுப்பராமன் சாரும் ரசிகர்கள் என்னை மெல்லிசை மன்னராக அங்கீகரிச்சதைப் பார்த்து மகிழ்ச்சியோடு வாழ்த்த இல்லை .
இப்படியெல்லாம் ஏணிப்படிகளாக இருந்து என்னை உயர்த்திவிட்ட இந்த மேதைகளுக்கெல்லாம் நாம் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் என் மனசில் ரொம்ப நாட்களாகவே இருந்து வந்தது .
கோவையிலிருந்த என் ஆசான் எஸ் . எம் . சுப்பையா நாயுடு மெட்ராஸுக்கு ' செட்டி லாக ' வந்தார் . வளர்ச்சி அடைந்திருந்த என்னைப் பார்த்து அவருக்கு ரொம்ப சந்தோஷம் . "இன்னும் மேலே மேலே வரணும்"னு என்னை வாழ்த்தினார்.' மலைக்கள்ளன் 'படத்தில்' எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' ‘நாடோடி மன்னன்' படத்தில் 'தூங்காதே தம்பி தூங்காதே...' பாட்டிலிருந்து எல்லாமே ஹிட் ! ' அன்னையின் ஆணை ' படத்தில் ' அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை . . . ' இப்படிப் பல படங்களில் பாப்பு லர் பாட்டுக்களைத் தந்தார் . இருந்தாலும் , அவருடைய இறுதிக் காலத்தில் வறுமை நிலையில் வாடினார்.
'சுப்பராமன் சாரிடம் என்னைச் சேர்த்துவிட்டு எனக்கு வாழ்வு தந்த நாயுடு சார் வறுமையில் வாடுவதா?' என நான் துடித்துப் போனேன். என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கெல்லாம் * நன்றிக்கடன் செலுத்த முடியவில்லையே என்ற ஆதங்கத்தைத் தணித்துக் கொள்ளும் வாய்ப்பாக அண்ணன் சுப்பையா நாயுடுவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். கலையுலகப் பிரமுகர்களிடம் நிதி திரட்டி அவருக்குப் பெரிய பாராட்டு விழா நடத்திக் கௌரவிக்க உடனே செயலில் இறங்கினேன் . திருவாளர்கள் எஸ் . எஸ் . வாசன் , ஏவி . மெய்யப்பச் செட்டியார் , வாசு மேனன், டி.ஆர். சுந்தரம் போன்றவர்கள் பெரிய மனதுடன் கணிசமான நிதி அளித்து உதவினார்கள் .
எம் . ஜி . ஆர் . தலைமையில் பாராட்டு விழா . . . அந்தக் காலத்தில் ஜூபிடர் ஃபிலிம்ஸில் இருக்கும்போதிலிருந்தே எம்.ஜி. ஆர்., சுப்பையா நாயுடு , நான் எல்லோரும் மாசச் சம்பளத்தில் வேலை பார்த்தவர்கள். அதனால் நெருக்கமான பழக்கம் உண்டு. இந்த விழாவுக்கு சிவாஜி கணேசனையும் அழைத்திருந் தேன். சிவாஜி படங்களுக்கு நாயுடு அதிகம் பணிபுரிந்திராவிட்டாலும், எனக்காக சிவாஜி வந்ததை நன்றியோடு இப்போது நினைத்துப் பார்க்கிறேன் .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"விஸ்வநாதன் நன்றி உள்ளவர் - அதனால்தான் அவர் நன்றிக்கடனாகத் தன் குருநாதருக்குச் சரியான நேரத்தில் செய்திருக்கிறார் " னு எம் . ஜி . ஆர் . பேசினாரு. அவர் சொன்னது போல , நாயுடு சாருக்கு விழா எடுத்து ஓரளவுக்கு வறுமையைப் போக்கியதில் என் மனதில் ஒரு நிறைவு . இந்த விழாவுக்குப் பிறகு எங்க குடும்பத்தோட ரொம்ப நெருங்கிய உறவுக்காரர் மாதிரி ரொம்ப பாசத் தோடு இருந்தார் சுப்பையா நாயுடு அடிக்கடி நாங்கள் சந்தித்து சந்தோஷமாகப் பேசிக் கொள்வதுண்டு.
ஆனால், இந்த மகிழ்ச்சியைக் குறைப் பதற்கென்றே ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு அந்த போன்கால் வந்தது . 'சுப்பையா நாயுடுவுக்குக் காலையில் மார்வலி'.
திடுக்கிட்டுப் போன நான் பரபரப் போட டிரைவரைத் தேடி காரில் ஏறி ராயப்பேட்டையில் இருக்கிற அவர் வீட்டுக்குப் போறதுக்குள்ள. ஆசான் நாயுடு என்னை அநாதையாக்கிட்டு இறந்து போயிட்டார். அதுவரைக்கும் யார் செத்ததுக்கும் நான் அப்படி அழுததில்லை . பீறிட்டு வந்ததுக்கத்தை என்னால் அடக்க முடியலை . வாய்விட்டு 'ஓ' னு அழுதேன். அப்போ வந்த எம்.ஜி.ஆர்., கண்ண தாசன் , வாலி எல் லாரும் எனக்கு மாத்தி மாத்தி ஆறுதல் சொன்னாங்க.... சுப்பையா நாயுடு தம்பதிக்கு வாரிசு கிடையாது . அதனால் , நான் வறுமையில் இருந்தபோது சோறு போட்டு வளர்த்து என்னை ஆளாக்கின அவருக்கு - என் அப்பாவுக்குச் சமமான நாயுடு அவர்களுக்கு - நான்தான் ஒரு மகனாக நினைத்துக் கொள்ளி வெச்சேன் . அதை ஒரு பாக்கியமா நினைச்சேன் . தினமும் ஃப்ளாஷ்பேக்ல வந்து போகும் அளவுக்கு இந்தச் சோக நிகழ்ச்சி மனசில ஆழமா பதிஞ்சிடுச்சு . அவருடைய காரியங்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு... என் பெயருக்குச் சுப்பையா நாயுடு ஒரு உயில் எழுதி வைத்திருப்பதாக என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள் . அந்த உயிலில் இருந்த வாசகங்கள்...
"நீ எனக்கு கலெக்ட் பண்ண பணத்தையெல்லாம் என் மனைவி பெயரில் பாங்க்ல போட்டிருக்கேன். என் மனைவிக்கு என்ன தேவையோ அதை நீதான் கடைசிவரை செஞ்சு கொடுக்கணும்...”
இதைப் படிச்ச பிறகு நாயுடுவின் மனைவியை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே மதித்து நாங்கள் எங்கள் குடும் பத்துடன் சேர்த்துக் கொண்டோம் . கடைசிவரை கண்ணும் கருத்துமா கவனிச்சோம் . அவங்களுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது . படுத்த படுக்கையா கிடந்தபோது அவங்களோட மலஜலத்தைக்கூட எடுத்துச் சுத்தம் செய் தோம் . இந்த விஷயத்தில் என் மனைவி கொஞ்சம் கூட முகத்தைச் சுளிக்காமல் , வெறுப்பைக் காட்டாமல் , பரிவோடு நாயுடுவின் மனைவிக்குப் பணிவிடை செய்தாள் . அதை நான் ஒரு பெரிய பாக்கியமாக நினைக்கிறேன் . இறுதியில் நாயுடுவின் மனைவி மறைந்தபோது இவருக்கும் நான்தான் கொள்ளி வைத்தேன்...
குருநாதருக்கும் அவர் மனைவிக்கும் செய்த பணிவிடை மனதுக்கு திருப் தியைத் தந்தது . அதுவும் கொஞ்ச நாட்கள்தான்.
'ஹாப்பி நியூ இயர் ' என எல்லோரும் குஷியாகக் கொண்டாடும் (ஜனவரி 1) அந்த நாளில் எனக்கு ஏற்பட்ட அந்தச் துயரச் சம்பவம்...
(26.12.1993 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)