Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 9

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

ஒவ்வொரு ஜனவரி முதல் தேதி அன்னிக்கும் நான் மௌன விரதம்...

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 9

ஒவ்வொரு ஜனவரி முதல் தேதி அன்னிக்கும் நான் மௌன விரதம்...

Published:Updated:
Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

நான் சின்ன வயசில் ஒரு வைராக்கியத்தோட ஊரை விட்டுக் கிளம்பி வந்து கோவை, சேலம் எல்லாம் சுத்தி மெட்ராஸ்ல செட்டில் ஆகிற வரைக்கும் சில வருஷங்கள் என் அம்மாவோட எந்த காண்டாக்ட்டும் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்துல எந்த கம்யூனிகேஷனும் இல்லாததால நான் செத்துப்போயிட்டேன்னே எங்க அம்மா நினைச்சிருந்திருக்கிறாங்க... கொஞ்ச நாள் கழிச்சு ஒரு நல்ல நிலைமைல என்னைப் பார்த்ததும் 'ஓ'ன்னு அழுதாங்க. அவங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டு, அம்மா, தாத்தா எல்லாரையும் மெட்ராஸுக்குக் கூட்டி வந்து சாந்தோம் வீட்டில குடியேறினோம்.

அப்பத்தான் அம்மா ஒரு நாள் சொன்னாங்க, 'உன்னை இப்படி ஒரு நல்ல நிலைமைல பார்க்கணும்கிற ஆசையிலதான். சின்ன வயசிலிருந்தே உன்னைத் திட்டினேன்.. வெறுத்த மாதிரி அடிச்சேன்... ஒரு தடவை உன் வலது கைல சூடுகூடப் போட்டிருக்கேண்டா... அதையெல்லாம் சகிச்சுக்கிட்டு என்னோட எண்ணத்தை நிறைவேத்திட்டா...'னு என்னோட வலது கையை (சூடு போட்டத் தழும்பு இன்னமும் இருக்கு) பாசத்தோட வருடிக் கொடுத்து ஆனந்தக் கண்ணீர் விட்டாங்க.

என்னோட சின்ன வயசிலே மகன் மேல காட்ட வேண்டிய அன்பு, பாசம்கிற எல்லா உணர்ச்சிகளையும் தன் மனசுக்குள்ளேயே அடக்கி வெச்சுக்கிட்டு, மகன் நல்லா வரணுமேன்னு எரிச்சல், விரக்தி.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோபம் எல்லாத்தையும் என் மேல அம்மா காட்டி வந்திருக்காங்கங்கறது அன்னிக்குத்தான் எனக்கு உறைச்சது. பூர்வ ஜென்மத்தில நான் செய்த புண்ணியம்தான் இப்படி பொறுப்பான ஒரு தாய் எனக்குக் கிடைச்சுதுனு நெனச்சுப் பூரிச்சுப் போனேன். இதற்குப் பிறகு அவங்களை ஒசந்த ஸ்தானத்தில வெச்சுப் பார்த்தேன். இதனால அவங்க மேல எனக்கிருந்த பயமும் பக்தியும் இன்னும் அதிகமாயிடுச்சு.

எனக்குக் கல்யாணமாகி, குழந்தைகள் பிறந்து, ஏற்காடு பங்களாவில் அம்மா இருந்தாங்க. 'நம் நாடு' பட வெற்றி விழாவுக்காக நான், எம்.ஜி.ஆர்., நாகேஷ், கவிஞர் வாலி எல்லாம் போயிருந்தோம். எம்.ஜி.ஆர் - கிட்ட பர்மிஷன் வாங்கிக்கிட்டு அம்மாவைப் பார்க்கப் போனேன். நான் அம்மாகிட்ட ஏதோ பேசிக்கிட்டேயிருந்தேன். அப்போ நான் ஏதாவது தப்பா பேசிட்டேனோ என்னவோ, 'பளார்'னு என்னை அறைஞ்சிட்டாங்க அம்மா. என்னை அடிச்சதை நாகேஷும் வாலியும் பார்த்துட்டாங்க. இருந்தாலும், நான் வெளியே வரும்போது அடி வாங்கினதைக் காட்டிக்காம சிரிச்சுக் கிட்டே வந்துட்டேன். அப்ப எனக்கு 26 வயசிருக்கும். 'இந்த வயசுலகூட இவரு அம்மாகிட்ட பயப்படறாரே..'னு என்னைப் பார்த்து நாகேஷும் வாலியும் திகைச்சுப் போயிட்டாங்க.

இதுல இன்னொரு விஷயம் எம்.ஜி.ஆர்., சிவாஜி, நாகேஷ், கண்ணதாசன், வாலி - இப்படி எல்லாருக்குமே உண்டு. இதனாலேயே நான் எப்பவாவது சின்ன குறும்பு, தப்புப் பண்ணா, அப்படியா சேதி... இரு.. இரு... உடனே அம்மாவுக்கு போன் பண்றேன்'னு எல்லாருமே என்னை மிரட்டற அளவுக்கு அம்மாகிட்ட அவங்களுக்கு உரிமை. ஆனா, எனக்குப் பயம்.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

அம்மா இருக்கிற வரைக்கும் நான் அம்மா பிள்ளையாவே இருந்துட்டேன். அரிசி என்ன விலை விக்குது? நான் கட்டியிருக்கிற வேட்டி சட்டை என்ன விலை?'ங்கற விஷயமெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது . நாம் சம்பாதிக்றதை அவங்க கையில கொடுத்துடுவன். வீட்டு நிர்வாகம் முழுக்க அவங்க பார்த்துப்பாங்க (இப்ப என் மனைவி பார்த்துக்கறாங்க). இதை ஏன் குறிப்பா சொல்றேன்னா, எந்தக் கஷ்டமும் நஷ்டமும் என்வரைக்கும் தெரியவிடாம , மீயூஸிக் டைரக்ஷன்ல என் கவனம் எழுவதையும் செலுத்தறதுக்கு முக்கிய பரணமா அம்மா இருந்தாங்க .

இப்படி இருக்கையிலே, 89-ம் வருஷம் திடீர்னு ஒரு நாள் அவங்களுக்கு உடல் நிலை சரியில்லாம போச்சு பயந்துட்டேன். என் வாழ்நாள்ல எந்த ஜோசியர் கிட்டேயும் ( என் எதிர்காலத்தைப் பத்திக் கூட நான் கேட்டதில்லை....) போகாத நான், பார்த்தசாரதிங்கற ஜோசியர்கிட்ட போய் ஜாதகத்தைக் காண்பிச்சேன். அதைப் பார்த்துட்டு அவரு, "தைரியமா இருங்க... இந்த வருஷம் முடியறதுக்குள்ளே நீங்க கர்மா செய்ய வேண்டி வரும்..."னு சொல்லிட்டாரு... இதைக் கேட்டு நான் 'அப்செட்’ ஆயிட்டேன். அம்மாவுக்கு 'ஹார்ட் ட்ரபுள்' வந்தது.

89 - டிசம்பர் மாதம் 26-ம் தேதி அன்னிக்கு ரிக்கார்டிங் வேலையெல்லாம் முடிஞ்சு சாயங்காலம் சீக்கிரமாவே வந்துட்டேன். வீட்டு ஹால்லே படுத்திருந்த அம்மா என்னைக் கூப்பிட்டுப் பக்கத்தில் உட்காரச் சொன்னாங்க. சின்ன வயசுலே என் அப்பா இறந்தது, என்னைப் பெத்து வளர்த்தது. வறுமையினால பட்ட கஷ்டங்கள், தாத்தா செத்துப் போனதுனு எல்லாத்தையும் ஃப்ளாஷ்பேக் மாதிரி ராத்திரி ஏழரை மணியிலிருந்து பன்னிரண்டரை வரை பேசிக்கிட்டே இருந்தாங்க. அப்ப நான், 'அம்மா... உங்களுக்கு உடம்பு சரியில்லை.... ரொம்பப் பேசாதீங்க..... பேசாம படுத்துக்குங்க.... நாளை காலைல பார்த்துக்கலாம்’னு சொன்னேன். 'அதுக்கில்லைடா.... ஏழைகளுக்கு உதவனும்... குடும்பத்தை நல்லா காப்பாத்தணும் . . . முக்கியமா எல்லார் கிட்டயும் நன்றி உணர்ச்சி, மரியாதை காட்டறதில் மத்தவங்களுக்கு நீ ஒரு உதாரணமா வாழணும்னுதான் சொல்றேன்'னாங்க. 'நீங்க சொல்றபடியே நடக்கிறேம்மா . . . . இப்ப பேசாம படுத்துத் தூங்குங்க . . . ' னு சொல்லி அவங்களைத் தூங்கச் சொல்லிட்டு. பக்கத்துல என் பெட்ரூமுக்குள்ளே நான் படுக்கப் போயிட்டேன். அம்மா அன்னிக்குப் பேசினதுதான் கடைசிப் பேச்சு.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

விடியற்காலை நாலு மணி இருக்கும். என் மகள் கதவைத் தட்டி, 'இன்னம்மா பேச முடியாம படுத்துக் கிடக்காங்க’னு சொன்னா (என் அம்மாவை எல்லாரும் ' இன்னம்மானுதான் கூப்பிடுவாங்க). தூக்கிவாரிப்போட்டு எழுந்தேன். உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போக அரேஞ்ச் பண்ணினேன்.

அப்போ என குடும்ப டாகம் லட்சுமிகாந்தன் - மந்தைவெளி ஆஸ்பத்திரி - டாக்டருக்கு அம்மாமேல தனி பிரியம் உண்டு. அதனால நான் தைரியமாவே இருந்தேன். அவர்கிட்டு 'நான் இறந்த பிறகுதான் அம்மா இறக்கணும்னு ஆசைப்படறேன். அவங்களை சரியாக்கி வீல் சேர்லயாவது வீட்டுக்கு அழைச்சுட்டுப் போகும்படியா காப்பதித்தரணும்னு அழுது கெஞ்சினேன். 27-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை அஞ்சு நாட்களும் எங்கேயும் போகா ஆஸ்பத்திரியிலே அம்மா பக்கத்திலே கவலையோட உட்கார்ந்திருந்தேன்.

31 - ம் தேதி ராத்திரி எட்டு மணி இருக்கும். எங்க அம்மாவைச் சுத்திச் சொந்தக்காரங்க எல்லாரும். அவங்க தலைமாட்டிலே ராமாயணம் படிச்சிக்கிட்டிருந்தாங்க. அந்தச் சமயத்துல டாக்டர் என்னைக் கூப்பிட்டு ‘அவர்’ உனக்கு மட்டும் அம்மா இல்லை... எல்லாருக்கும் அம்மாதான்.... எல்லாரும் ஒரு நாளைக்கு செத்துதான் போவாங்க அதுமாதிரி உங்க அம்மாவும்...' கொஞ்சம் இதமா பதமா சொல்ல ஆரம்பிச்சாரு. நான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, ‘என் அம்மாவைக் காப்பாதாற்தா வாக்குக் கொடுத்துட்டுறிட்டீங்களே டாக்டர்‘னு கொஞ்சம் ஆத்திரப்பட்டேன்.

அம்மா பன்னிரண்டு மணிக்கு இறந்து போனாங்க . அந்த நேரத்துல கரெக்டா வருஷம் ( 1990 ) பிறந்ததுக்கான அடையாளமா எல்லா கோயில்லேயும் மணி அடிக்கற சத்தம் கேட்டது...

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

ஆஸ்பத்திரியிலேருந்து அம்மாவோட உடலை என் கார்ல கொண்டு வந்துக்கிட்டிருந்தேன். நான் இருக்கிற சாந்தோம் வீதியில் கிறிஸ்துவ நண்பர்கள் அதிகம் இருக்கிறாங்க. அவங்கள்லாம் என்னைப் பார்த்துட்டு ' ஹாப்பி நியூ இயர்'னு வாழ்த்திக்கிட்டே வந்தாங்க... நானும் சொன்னேன். என் அம்மாயோட உடல் கார்லருந்து இறங்கினதைப் பார்த்த பிறகு அவங்கள்லாம் ஷாக் அயிட்டாங்க. அன்னிக்கு முழுவதும் சாந்தோம் ஏரியா சைலண்ட்டா இருந்தேன். என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த மக்களெல்லாம் திரண்டு வந்தாங்க. அவங்களுக்கெல்லாம் என் அம்மான்னா ஒரு பிரியம் . அம்மா அவங்களுக்கெல்லாம் நிறைய உதவி செஞ்சிருக்காங்க.

என் அம்மா இறந்த அந்த வருஷத்திலேர்ந்து ஒவ்வொரு ஜனவரி முதல் தேதி அன்னிக்கும் மௌன விரதம் அனுஷ்டிச்சு வர்றேன்.... அன்னிக்கு அம்மாக்குக் கூறிய அட்வைஸ் ‘ஃப்ளாஷ் பேக்' மாதிரி வந்து போய்க்கிட்டிருக்கும். நன்றி உணர்ச்சியை அவங்க வலியுறுத்தினதை நான் மறக்கவே மாட்டேன்.

நன்றி உணர்ச்சி என்கிறபோது எனக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்தான் உடனே நினைவுக்கு வருகிறார். அவர் நடிச்ச படங்கள்ல பாட்டுக்கள் 'ஹிட்'ஆகணும், தான் மட்டும் புகழ் பெறாமல் சுற்றி உள்ளவர்களும் புகழ் பெறணும்ங்கிற நல்லெண்ணத்தோடு வாழ்ந்து காட்டிய அண்ணன் எம்.ஜி.ஆர்., பாட்டுகளுக்காக என்னைப் பாசத்தோடு பிழிந்தெடுத்த சம்பவங்கள்.

(02.01.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)