Published:Updated:

கொஞ்சமா சிரிச்சு... நிறையவே முறைச்சா... `நான் சிரித்தால்' ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்!

ஆதி - ஐஷ்வர்யா மேனன்

`நான் சிரித்தால்' ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்.

கொஞ்சமா சிரிச்சு... நிறையவே முறைச்சா... `நான் சிரித்தால்' ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்!

`நான் சிரித்தால்' ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்.

Published:Updated:
ஆதி - ஐஷ்வர்யா மேனன்

* சுந்தர்.சி தயாரித்திருக்கும் படமென்று போனால், ஆள் மாறி பேர் மாறி அட்ரஸ் மாறி சுத்துவது, உருட்டுக்கட்டை அடி - மயக்கம், காமெடி வில்லன், கல்யாண மண்டப கலாட்டா என சுந்தர்.சி-யின் டெம்ப்ளேட்டை அப்படியே 2கே கிட்ஸுகளுக்கான படமாக எடுத்துக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராணா.

* படத்தின் ஹீரோ `ஹிப் ஹாப்' ஆதிக்கு சிரிப்புதான் பிரச்னையே. சோகமோ, பயமோ வந்துவிட்டால் சிரிக்க ஆரம்பித்துவிடும் நரம்புக்கோளாறு. ஆனால், படத்தில் அவர் சிரிப்பு சில சமயங்களில் மட்டுமே ரசிக்க வைக்கிறது. பாடல்களில் செம எனர்ஜிட்டிக்காக இருக்கும் ஆதி நடிப்பிலும் இன்னும் பவர்ஃபுல் பர்ஃபாமராக மாற வேண்டும்.

* காமெடி வில்லன்களாக கே.எஸ்.ரவிக்குமாரும் ரவி மரியாவும் அசால்ட்டாக நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார்கள். ஆதியின் அப்பாவாக வரும் `படவா' கோபி சில `பட்பட்' ஒன்லைனர்களால் ரசிக்க வைக்கிறார்.

ஐஷ்வர்யா மேனன்
ஐஷ்வர்யா மேனன்

*ஹீரோயின் ஐஸ்வர்யா மேனனுக்கு கொடுத்த வேலையை முடித்துவிட்டு சத்தம் இல்லாமல் பறந்துவிடு கண்மணி ரோல். காதலனுக்கு அட்வைஸ் கொடுப்பது, செல்ஃபி எடுப்பது, டான்ஸ் ஆடுவது எனப் படத்துக்குள் வந்துவிட்டுப்போயிருக்கிறார்.

* காமெடிக்காக மட்டுமே யோகி பாபு, முனீஷ்காந்த், ஷாரா, 'எரும சாணி' விஜய், ராஜ் மோகன் எனப் படத்தில் பலபேர் வருகிறார்கள். ஆனால், காமெடி முழுமையாக வொர்க் அவுட் ஆகவில்லை. சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* ஹிப்ஹாப்பின் அதே வழக்கமான இசை. `எனக்கு பிரேக்கப்பு’ பாடலுக்கு தியேட்டரில் மொத்த இளைஞர் கூட்டமும் ஆர்ப்பரிக்கிறது. வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவும் ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பும் கச்சிதம்.

* தல, தளபதியை வைத்து செய்திருக்கும் மொமன்ட்டுகள் ரசிக்க வைக்கின்றன. அதேபோல் `பாட்ஷா' இன்டர்வெல் மொமன்ட்டும் சிறப்பு. ஆனால், மற்றபடி திரைக்கதையில் ஏகத்துக்கும் கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குநர் ராணா. குறும்படத்தை சினிமாவாக மாற்றும்போது திரைக்கதைக்கு இன்னும் கூடுதலாகக் காட்சிகள் யோசித்திருக்க வேண்டும். இவ்வளவு காமெடியன்கள் இருந்தும், காமெடிக்கான சூழல் இருந்தும் வெடித்து சிரிக்கக்கூடிய காட்சிகளைப் படம் முழுக்க கோர்த்திருந்தால் `நான் சிரித்தால்' இன்னும் கொண்டாட்டமான படமாக மாறியிருக்கும்.

ஆதி - ஐஷ்வர்யா மேனன்
ஆதி - ஐஷ்வர்யா மேனன்

* படத்தில் ஜோக்கராகவே வந்துகொண்டிருந்த ஆதி, க்ளைமாக்ஸில் மட்டும் மாடர்ன் சமுத்திரக்கனியாக மாறி கேமராவைப் பார்த்து கொஞ்சம் கருத்துகள் சொல்லியிருக்கிறார். கருத்துகள் ஓகே என்றாலும் அட்வைஸ் டோன் நம்ம 2கே கிட்ஸுக்குப் பிடிக்காதே ப்ரோ!