Published:Updated:

`ஒருவழியாக நிறைவடைந்தது நடிகர் சங்கத்தேர்தல்’ - 1604 பேர் வாக்களிப்பு!

விஷால்
விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நாசர் தலைமையிலான, `பாண்டவர் அணி’ மற்றும் பாக்யராஜ் தலைமையிலான `சுவாமி சங்கரதாஸ் அணி’ ஆகிய இரு அணிகளும் மோதின. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

விக்ரம்
விக்ரம்

3100க்கும் அதிகமான உறுப்பினர்கள் நடிகர் சங்கத்தில் உள்ளனர். இதில் 1100- க்கும் மேற்பட்டோர் தபால் மூலமும் மீதமுள்ள அனைவரும் நேரிலும் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், தேர்தல் குறித்து தனக்கு கடைசி நேரத்தில்தான் அறிவிப்பு வந்ததென்றும், அதனால் வாக்களிக்க இயலவில்லை, இது நடந்திருக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

பாக்யராஜ் அணி
பாக்யராஜ் அணி

இதில் நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும், லதா, அம்பிகா, ராதா, குஷ்பு, சங்கீதா, வரலட்சுமி, மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகைகளும் வாக்குப்பதிவு செய்தார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

1604 பேர் இதுவரை வாக்குகளைப் பதிவு செய்தனர். நடிகர் சங்கத்தேர்தல் உடனே நடைபெற்றதால், தபால் ஓட்டுக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று இரு அணிகளும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி கால அவகாசம் நீட்டிக்கும்பட்சத்தில், ரஜினி உள்ளிட்ட விடுபட்ட நடிகர்களின் வாக்குகள் பதிவு செய்ய வாய்ப்பிருக்கிறது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

இந்த வாக்குப்பதிவுகள் பத்திரமாக வைக்கப்பட இருக்கிறது. 8ம் தேதி வெளியாகும் தீர்ப்பைப்பொறுத்து, வாக்கு எண்ணிக்கை எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படும்.சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் ஹார்டோஸ் சாலையில் உள்ள சௌத் இண்டியன் வங்கியில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு