Published:Updated:

23ம் தேதி நடிகர் சங்கத்தேர்தல் நடைபெறுவதில் சிக்கலா!

அலாவுதின் ஹுசைன்

உறுப்பினர்கள் நீக்கியதில் விளக்கம் கேட்டு புகார்!

23ம் தேதி நடிகர் சங்கதேர்தல் நடைபெறுவதில் சிக்கல்
23ம் தேதி நடிகர் சங்கதேர்தல் நடைபெறுவதில் சிக்கல்

வருகிற ஜூன் 23ஆம் தேதி நடக்கவிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால் தலைமையில் பாண்டவ அணியும், பாக்யராஜ், ஐசரி.கே.கணேஷ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி என இரு அணியாக தேர்தலை எதிர்கொள்கின்றனர். இதற்காக இரு அணியினரும் மூத்த நடிகர்களையும், தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

விஷால்
விஷால்

இந்நிலையில், நாசர் அணி நிர்வாகத்தால் முறையான காரணமின்றி நீக்கப்பட்டதாகக் கூறி 61 சங்க உறுப்பினர் பட்டியலை இணைத்து பாரதி பிரியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அடிப்படையில் நடிகர் சங்கத்தை விளக்கம் கேட்டுள்ளது சங்கங்கள் பதிவாளர் அலுவலகம்.

மேலும், நீக்கிய உறுப்பினர்களை மீண்டும் சங்கத்தில் இணைத்த பின்னரே தேர்தல் நடைபெறும் சூழ்நிலையும் தற்போது உருவாகியுள்ளது.

முன்னதாக நடிகர் சங்க தேர்தலை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரிக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் உள்ளதாகவும் தெரிவித்திருப்பதால், இந்த இடமாற்றமும் தேர்தலை 23ம் தேதி நடத்துவதில் சாத்தியங்களை குறிக்கிறது.