Published:Updated:

'பாசமலர், கிழக்குச் சீமையிலே லேட்டஸ்ட் வெர்ஷன்' -சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' டிரெய்லர்

பாண்டியராஜன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் `நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மிஸ்டர் லோக்கல் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் `நம்ம வீட்டுப்பிள்ளை’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சிவாவுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படத்தில் காமெடியில் மீண்டும் சிவாவுடன் சூரி இணைந்துள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக் கொண்டும், குடும்ப உறவுகளின் முக்கியதுவத்தை முன்வைத்தும் `நம்ம வீட்டுப்பிள்ளை’ உருவாகியுள்ளது. அண்மையில் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. படம் இம்மாதம் 27-ம் தேதி படம் வெளியாக உள்ளது.