Published:Updated:

`ஜெர்ஸி' ரீ-மேக் மூலம் தமிழில் தயாரிப்பாளராகும் ராணா டகுபதி!

நானி நடிப்பில் வெளியான 'ஜெர்ஸி' படம் தமிழில் ரீமேக் ஆகவிருக்கிறது. இப்படத்தை ராணா டகுபதி தயாரிக்க இருக்கிறார்.

விஷ்ணு விஷால் - ராணா டகுபதி
விஷ்ணு விஷால் - ராணா டகுபதி

சமீபத்தில் நானி நடிப்பில் வெளியான 'ஜெர்ஸி' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது இப்படம் தமிழில் ரீமேக் ஆகவிருக்கிறது. இதில், விஷ்ணு விஷால் நானி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் டோலிவுட் நடிகரான ராணா டகுபதி, இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

நானி
நானி
ஜெர்ஸி

கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான படம், 'ஜெர்ஸி'. ஷ்ரதா, ஹரீஷ் கல்யாண் ஆகியோர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சனு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ராணா பெற்றிருக்கிறார். அவரது பேனரில் உருவாகவிருக்கும் இப்படத்தில், விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராக நடித்த 'ஜீவா' படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் இவர் நடிக்கிறார்.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

மேலும், தெலுங்கில் சில படங்களைத் தயாரித்து வரும் ராணா டகுபதி, முதன் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் தயாரிப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். படத்தின் இயக்குநர் பற்றியும், மற்ற நடிகர்கள் பற்றியும் விரைவில் அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.