Published:Updated:

மதுர மக்கள்: "யோகி பாபு 'நீதான்டா ஹீரோ'னு சொன்னார்!"- 'நவரசா' சக்திவேல்

மதுர மக்கள் | சக்திவேல்
News
மதுர மக்கள் | சக்திவேல்

"ஐஸ் கம்பெனி வேலை, ஸ்டூடியோ வேலை, பெட்ரோல் பங்க் வேலைன்னு என் முதல் படத்துக்கும், பள்ளிக்கூடத்துக்கும் இடையில பத்தொன்பது வேலைகள் பார்த்துட்டேன். எதுலயும் மனசு சரியா செட்டாகலை" - 'நவரசா' சக்திவேல்

" 'நவரசா' படத்துல நான் நடிச்ச கேரக்டருக்கும் என்னோட ரியல் வாழ்க்கைக்கும் பெரிய அளவு வித்தியாசம் இல்ல. 'நவரசா'வுல ஒன்பதாவது ஃபெயிலாகியிருப்பேன். நிஜத்துல ஒன்பதாவது பாஸாயிட்டு டிராப் அவுட் ஆகிட்டேன். அவ்வளவுதான் வித்தியாசம். வாழ்க்கை கைப்பிடிச்சு கூட்டிப்போயிட்டு இருக்கு. அது பின்னால நானும் பவ்யமா போயிட்டே இருக்கேன்!"
சக்திவேல்
'நவரசா' சக்திவேல்
'நவரசா' சக்திவேல்
நம்பிக்கையுடன் பேசத் தொடங்குகிறார் சக்திவேல். 'நவரசா'வில் பிரியதர்ஷன் இயக்கிய 'சம்மர் ஆஃப் 92'-ல் ஜூனியர் யோகிபாபுவாக கவனம் ஈர்த்தவர். 'நவரசா'வில் இவர் நடிப்புக்குக் கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பால் அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் மதுரைக்காரர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சக்திவேல் பற்றிய அறிமுகம் சொல்லுங்களேன்...

"பொறந்து வளர்ந்தது எல்லாம் இதே மதுரைதான். பசுமலைலதான் பள்ளிக்கூடம் முடிச்சேன். முடிச்சேன்னு சொல்றதைவிட பாதிலயே விட்டுட்டேன். ஐஸ் கம்பெனி வேலை, ஸ்டூடியோ வேலை, பெட்ரோல் பங்க் வேலைன்னு என் முதல் படத்துக்கும், பள்ளிக்கூடத்துக்கும் இடையில பத்தொன்பது வேலைகள் பார்த்துட்டேன். எதுலயும் மனசு சரியா செட்டாகலை. ஒரு நாள் 'கொடி' படத்துல உதவி இயக்குநரா இருந்த என் நண்பனோட நண்பர்கிட்ட, உங்க செல்வாக்கைப் பயன்படுத்தி படத்துல நடிக்க வைங்க பார்க்கலாம்னு நக்கலா கேட்டேன். ஆனா அவரோட முயற்சியால அங்கிட்டு இங்கிட்டுனு சுத்தி 'பள்ளிப்பருவத்திலே...'ங்கிற படத்துல முக்கியமான கேரக்டருக்கு வாய்ப்பு கிடைச்சது."

'நவரசா' சக்திவேல்
'நவரசா' சக்திவேல்

எப்படி இருந்துச்சு முதல் பட வாய்ப்பு?

"நடிப்புனா என்னான்னு தெரியாமலேயே கேமரா முன்னாடி போயி நின்ன ஆளு நானாத்தான் இருந்துருப்பேன். கே.எஸ்.ரவிகுமார் சார், தம்பி ராமைய்யா சார்னு எல்லாருமே சீனியர் ஆர்டிஸ்ட். நிறைய சொல்லிகுடுத்தாங்க. அதுபோக கூத்துப்பட்டறைல கொஞ்ச நாள் இருந்தேன். எனக்கு கேமரா கூச்சம் உடைஞ்சதே அங்க இருந்துதான். அப்படியே படிப்படியா 'தட்றோம் தூக்குறோம்'னு ஒரு படவாய்ப்பு, அப்போதான் 'நவரசா'வுல யோகி பாபு சார் மாதிரி ஆள் எடுக்குறாங்கன்னு கேள்விப்பட்டு போட்டோ அனுப்புனேன். எந்த ஆடிஷனும் இல்லாம செலக்ட் பண்ணிட்டாங்க."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்படி இருந்துச்சு 'நவரசா' அனுபவம்?

"என்ன கதை, எப்படி நடிக்கபோறோம் எதுவே தெரியாது. ஸ்பாட்டுக்கு போன, அன்னைக்கு எடுக்குற சீன் சொல்லுவாங்க. அப்படியே பண்ணுவேன். ஆனா டைரக்டர் பிரியதர்ஷன் சார் என்மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தாங்க. யோகி பாபு சார்தான் படத்துல 'நீதான்டா ஹீரோ'ன்னு சொல்லி சொல்லியே என்னய நடிக்க வச்சாரு!"

யோகி பாபு வேற என்ன சொன்னாரு?

'நவரசா' யோகி பாபு
'நவரசா' யோகி பாபு

"எனக்கும் அவருக்கும் காம்பினேஷன் கிடையாது. ஆனாலும் அவரு நடிக்கும்போது அவர் எப்படியெல்லாம் பெர்ஃபாம் பண்றாருன்னு பார்க்குறதுக்காகவே அங்கேயே உட்கார்ந்துருப்பேன். படம் பார்த்துட்டு யோகிபாபு சார் என் நம்பர் கேட்டதா சொன்னாங்க. கூப்பிடுவார்னு நினைக்கிறேன்."

மதுரைக்காரரா மதுரைல ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன?

"வேறென்ன மதுரை சாப்பாடு எங்கயும் அடிச்சுக்க முடியாது. மதுரை புரோட்டாவும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் ரோஸ் மில்க்கும் தான் வெளியூர் போறப்பெல்லாம் மிஸ் பண்ணுவேன்."

Navarasa
Navarasa

அடுத்து என்னென்ன படங்கள்?

"நாலு கம்பெனிவரை பேசிருக்காங்க. இந்த லாக்டௌன் சூழல் சரி ஆனதும் ஷூட்டிங் போவேன்னு நினைக்கிறேன். நீங்களும் வாழ்த்துங்க பாஸ்!"

வாழ்த்துகள் 'நவரசா' சக்திவேல்!