Published:Updated:

நயன் - விக்கி திருமணம்: ரஜினிகாந்த், அஜித் பங்கேற்பு; ஷாருக் கான் வருகை; 1 லட்சம் பேருக்கு விருந்து!

நயன் -விக்கி திருமணம்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள Sheraton Grand ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் படைசூழ கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருமண நிகழ்வின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ...

நயன் - விக்கி திருமணம்: ரஜினிகாந்த், அஜித் பங்கேற்பு; ஷாருக் கான் வருகை; 1 லட்சம் பேருக்கு விருந்து!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள Sheraton Grand ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் படைசூழ கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருமண நிகழ்வின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ...

Published:Updated:
நயன் -விக்கி திருமணம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள Sheraton Grand ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் படைசூழ கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருமண நிகழ்வின் அப்டேட்ஸ் இதோ...

* நயன்தாரா தன்னுடைய இரண்டாவது தமிழ் படத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் ஜோடியாக நடித்து விட்டார். அதன் பிறகு குசேலன், தர்பார், அண்ணாத்த என ரஜினிகாந்த்- நயன்தாரா காம்போ ரசிகர்களின் பேவரைட். நயன்தாராவின் திருமணத்தில் ரஜினி இல்லைன்னா எப்படி? அதான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லேடி சூப்பர் ஸ்டாரின் திருமணத்திற்கு வருகை தந்திருக்கிறார்.

* பாலிவுட் நடிகர் ஷாருக் கான் திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருக்கிறார்.

* விக்னேஷ் சிவனின் ஆஸ்தான கதாநாயகரான விஜய் சேதுபதி அவரது குடும்பத்தினருடன் திருமணத்தில் கலந்து கொள்கிறார்.

* `தனிஒருவன்' பட இயக்குனர் மோகன் ராஜா, ஜெயம் ரவி, எடிட்டர் மோகன், இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் திருமண நிகழ்வுக்கு வருகை தந்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி, நயன்தாரா
விஜய் சேதுபதி, நயன்தாரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* சென்னையின் காஸ்ட்டிலியான ரிசார்டுகளில் ஒன்று Sheraton Grand.

* இவர்களின் திருமண நிகழ்வுக்கான ஒளிபரப்பை Netflix ஓடிடி நிறுவனம் பெற்றிருக்கிறது. இதனை இயக்கப் போவது கௌதம் வாசுதேவ் மேனன்.

* நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இவர்களின் திருமணத்தில் பங்கேற்கிறார்.

* இவர்களின் திருமணத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் ஒரு இலட்சம் பேருக்கு கல்யாண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism