Published:Updated:

தமிழ் படத்துக்கு 'நோ' மலையாளத்துக்கு ' எஸ்' விஜய்சேதுபதி, நயன்தாரா - அதிரடி

எம்.குணா

இப்போது இந்தி சினிமாவில் மல்டி ஆர்டிஸ்ட் காம்பினேஷனில் நடிப்பது குறித்து பெருமையாகப் பேசுகிறார்கள்.

விஜய்சேதுபதி, நயன்தாரா
விஜய்சேதுபதி, நயன்தாரா

ஏற்கெனவே, பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபல நடிகர்கள் காம்பினேஷனில் நடித்து படங்கள் மலையாளத்தில் வெளிந்து இருக்கிறது. தற்போதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

தமிழில் அடுத்தடுத்து படங்கள் நடித்து வரும் விஜய்சேதுபதி, ஒன்றரை வருடத்துக்கு பிஸியாக இருக்கிறார். வேறு யாரும் தமிழில் தேதிகள் கேட்டால் யோச்சிக்கிறாராம், சிலநேரங்களில் ஸ்டிரிக்ட்டாக 'நோ' கூட சொல்கிறார். சமீபகாலமாக மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், விஜய்சேதுபதி. மலையாள நடிகர் ஜெயராமுடன் இணைந்து மார்கோனி மதாயி என்ற மலையாள படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

இதற்கிடையில் தமிழ் படங்களில் விஜய்சேதுபதியின் யதார்த்த நடிப்பைப் பார்த்து வியந்த மலையாளத்தில் உள்ள டைரக்டர் ஒருவர், நான் டைரக்‌ஷன் பண்ணப்போற மலையாள படத்துல நடிக்கிறீங்களா? ' என்று கேட்க மறுப்பே சொல்லாமல் உடனே ஒ.கே சொல்லிவிட்டாராம். தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்தாலும் தாய்பூமியான கேரளாவின் மீது தணியாத பாசம் கொண்டவர், நயன்தாரா. தனக்கு நெருக்கமான உதவியாளர்களாக இருப்பவர்கள் அத்தனைபேருமே அவ்விடபூமியைச் சேர்ந்தவர்களே.

நயன்தாரா
நயன்தாரா

நயனின் தேதி கேட்டால் ' மூணு வருஷத்துக்கு மேடம்கிட்டேயே வராதீங்க' என்று தலைதெறிக்க ஓடுகிறார்கள். ஆனால் விஜய்சேதுபதியிடம் கால்ஷீட் கேட்ட அதே டைரக்டர் நயன்தாராவிடமும் தேதிகள் கேட்டிருக்கிறார். டைரக்டரிடம் ' ஹீரோ யார்?' என்று கேட்க, 'மம்முட்டி..' என்று பதில் சொல்லி இருக்கிறார் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்துபோய் தாராளமாய் கால்ஷீட் தேதிகளை வாரி வழங்கி இருக்கிறார்.

மம்மூட்டி -நயன்தாரா
மம்மூட்டி -நயன்தாரா

ஆக மம்முட்டி, விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் புதிய படம் தயாராகிறது. தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

எம்.குணா