Published:Updated:

`பேனருக்குப் பதிலாக அரசுப் பள்ளியில் சிசிடிவி கேமரா!' - மாத்தியோசித்த நெல்லை விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்துள்ள `பிகில்’ திரைப்படம் திரையிடப்படும் தியேட்டரில் ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பதைத் தவிர்க்க முடிவு செய்த விஜய் ரசிகர்கள், அதற்குச் செலவு செய்யத் திட்டமிட்டிருந்த பணத்தைக் கொண்டு அரசுப் பள்ளிகளுக்கு சிசிடிவி கேமரா அமைத்துக்கொடுத்தனர்.

பிகில்
பிகில்

நடிகர் விஜய் நடித்துள்ள`பிகில்’ திரைப்படம், தீபாவளியையொட்டி வெளியாக உள்ளது. திரை நட்சத்திரங்களின் படம் வெளியாகும்போதெல்லாம் அவரது ரசிகர்கள் தியேட்டர் முன்பாக கட்-அவுட் அமைத்தல், ஃப்ளெக்ஸ் பேனர் வைத்தல் போன்ற செயல்களைச் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

`` ‘பிகில்’ல 100 நாள் விஜய் சார்க்கூட நடிச்சேன்; அடுத்து ‘பொன்னியின் செல்வன்'..!’’ - நடிகர் ஆத்மா

இதற்கு முன்பு பைரவா, மெர்சல் போன்ற திரைப்படங்கள் வெளியானபோது நூறு அடி உயரத்தில் கட-அவுட் அமைத்திருந்தனர். அத்துடன், நெல்லை செல்லப்பாண்டியன் சிலை அருகில் உள்ள மேம்பாலத்தில் நீளமாக போஸ்டர்களை ஒட்டினார்கள். பேனர்கள் கட்டுவது, கட-அவுட் அமைப்பது போன்ற மனநிலை திரைப்பட ரசிகர்களின் மனதிலிருந்து மறையத் தொடங்கியிருக்கிறது.

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம், முன்னணி நட்சத்திரங்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் பேனர் வைப்பதைத் தவிர்த்துவருகிறார்கள். `காப்பான்’ திரைப்படம் வெளியானபோது நெல்லை மாவட்ட சூர்யா ரசிகர்கள் பேனருக்குப் பதிலாக 200 ஹெல்மெட்டுகளை வழங்கினார்கள்.

சிசிடிவி தொடக்க விழா
சிசிடிவி தொடக்க விழா

தீபாவளிப் பண்டிகைக்கு `விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் பேனருக்குப் பதிலாக எதையாவது ஆக்கபூர்வமாகச் செய்யத் திட்டமிட்டனர். அதன்படி, நெல்லை மீனாட்சிபுரத்தில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 4 அரசுப் பள்ளிகளுக்கு 12 சிசிடிவி கேமராவை வழங்க முடிவு செய்ததுடன், அதைப் பள்ளிகளில் பொருத்தவும் செய்தனர்.

இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நெல்லை மாநகர காவல்துறை துணைஆணையர் சரவணன் மாணவிகளிடம் பேசுகையில், ``விஜய் ரசிகர்கள் இத்தகைய நல்ல முயற்சியில் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியது. நெல்லையில் உள்ள விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்கள்.

``அந்த ஆட்டோ சீன்... ஒவ்வொரு விஜய் ரசிகரும் கொண்டாடணும்!’’ தேவதர்ஷினியின்`பிகில்’ சீக்ரெட்

சிசிடிவி கேமரா மூலம் மாணவிகளின் தேவையற்ற பிரச்னைகள் குறைந்து படிப்பில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியும். பெண் குழந்தைகளைப் பொறுத்தவரையிலும் எந்த நேரத்தில் காவல்துறையின் உதவி தேவைப்பட்டாலும் 1098 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு அழைக்கலாம்.

சிங்கப்பெண்களுக்குச் சிக்கல், நண்பேன்டா ராசி! `பிகில்' ஸ்கூப் #SneakPeek #MovieLine

அரசுப் பெண்கள் பள்ளியில் சிசிடிவி கேமரா பொறுத்திருப்பதால் மாணவிகளாகிய உங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உங்களின் பெற்றோரின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களை ஹெல்மெட் அணியச் சொல்லுங்கள். நீங்கள் உங்கள் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம், `எங்களைப் பாதுகாக்க சிசிடிவி கேமரா உள்ளது. அதுபோல, உங்களைப் பாதுகாக்க தலைக்கவசம் அணியுங்கள்’ என்று வலியுறுத்துங்கள்’’ என்று பேசினார்.

துணை ஆணையர் சரவணன்
துணை ஆணையர் சரவணன்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் சரவணன், ``தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகர வீதிகளில் 2,000 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சீருடை அணியாத காவலர்கள் மற்றும் 400 சிறப்பு போலீஸார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நடமாடும் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்படவுள்ளன’’ எனத் தெரிவித்தார்.