Published:Updated:

`என்ன அவசரம் கிரேஸி மோகன்?’ - நெட்டிசன்களின் உருக்கமான பதிவு

கலிலுல்லா.ச

அவரது இன்மை குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

90'களில் தூர்தர்ஷன் சேனல் மூலமாக இன்றைய இளைஞர்களுக்கு அறிமுகமானவர் `கிரேஸி மோகன்’. மாது பாலாஜி, சீனு மோகன், சாம்ஸ் உள்ளிட்டவர்கள் அடங்கிய தன் குழுவுடன் இணைந்து அவர் நடித்த நாடகங்களைப் பார்க்க, அப்போதிலிருந்தே ஒரு கூட்டம் இருந்தது. இன்றளவும்கூட அதன் நீட்சி இருந்துகொண்டுதான் இருக்கிறது.

Crazy Kamal
Crazy Kamal

சென்னையில் `கிரேஸி மோகன்’ நாடகங்களை பார்க்கவே பலருக்கு இன்றும் `கிரேஸ்’ இருக்கிறது. வசனகர்த்தா , நாடக ஆசிரியர் , நடிகர் இப்படியாக பன்முகத்தைக்கொண்டவர் இன்று இல்லை. அவரது இன்மை குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

கிரேஸி
கிரேஸி

சோ

இனிமேலும் யாரும் இனி இப்படி ஒரு நடையில் நகைச்சுவை தந்துவிடப்போவதில்லை... அது நிச்சயம்... "ஏணில ஏறுனவனுக்கு இரங்கல் கடிதம் எழுத வெச்சுட்டியே"

இதுவும் அவர் எழுதுன டயலாக்... ஆழ்ந்த இரங்கல் கிரேஸி...

கார்த்தி

மூக்குப் பொடி போடாதிங்க தாத்தா கேன்சர் வருமாம்.. அடபோம்மா இப்ப இருக்குற பொடியைப் போட்டா தும்மலே வர்றதில்ல..

ரமேஷ்பாபு

அதுக்கு தானே கால மிதிச்சது " " மனமிருந்தால் மார்கபந்து " எனக்காக பரிட்சை எழுதிய பையன் உனக்காக எழுத மாட்டானா ?

எப்பிடித் தெரியும் அதான் இப்போ சொன்னிங்களே " எச்சக்கலை சிங்கம் " "பம்மல் உவே சம்பந்தம் "

கிரேஸி
கிரேஸி
நெட்டிசன்ஸ்
நெட்டிசன்ஸ்

கலிலுல்லா.ச