Published:Updated:

இரண்டாவது முறையாக அஜித்துக்கு வில்லனாகும் ஹீரோ!

இரண்டாவது முறையாக அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் பிரபல ஹீரோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் `என்னை அறிந்தால்'. இதில் அஜித்துக்கு வில்லனாக நடித்த அருண் விஜய்யின் விக்டர் கதாபாத்திரம், மக்கள் மத்தியில் பெரிதளவில் வரவேற்பினைப் பெற்றது. அதில், தனது கெட்அப், ஹேர் ஸ்டைல் என எல்லாவற்றையும் மாற்றியதோடு தனது உடல் மொழி, டயலாக் டெலிவரியில் மெறுகேற்றி அந்தக் கதாபாத்திரத்துக்குப் பக்காவாகப் பொருந்தியிருந்தார். தியேட்டரிலிருந்து வெளியே வரும்போது ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்த அருண் விஜய், அழுதுகொண்டே வந்த வீடியோ அந்தச் சமயத்தில் வைரலானது.

Arun Vijay
Arun Vijay

தற்போது, அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை'. அஜித் - வினோத்- போனி கபூர் கூட்டணி இப்படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்திலும் இணைகிறது. படம், ஆக்‌ஷன் ஜானரில் உருவாக இருக்கிறது. பரபர ஸ்டன்ட் காட்சிகளும் படத்தில் இடம்பெறுவதாகவும் தெரிகிறது. மேலும், `என்னை அறிந்தால்' படத்தைத் தொடர்ந்து, அருண் விஜய் அஜித்துக்கு வில்லனாக இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் மாத இறுதியில், பூஜையோடு படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கிறது.

`தடையற தாக்க' படத்தில் ஆரம்பித்து, `என்னை அறிந்தால்', `குற்றம் 23', `செக்கச் சிவந்த வானம்', `தடம்' என அருண் விஜய்யின் செகண்டு இன்னிங்ஸ் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வரிசையில், `அக்னி சிறகுகள்', `சாஹோ', `பாக்ஸர்', `மாஃபியா' ஆகிய படங்களும் அருண் விஜய்யின் கைவசம் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு