சுடசுட அஜித் இட்லி ரெடி!

 

சிவா, அஜித் கூட்டணியில் ஹாட்ரிக் வெற்றியைக் கொண்டாட அஜித் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். வீரம், வேதாளம் படத்துக்குப் பிறகு, இவர்கள் கூட்டணியில் நாளை 'விவேகம்' திரைப்படம் வெளியாகயிருக்கிறது. அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தில், அஜித்தை இன்டர்நேஷனல் ஹீரோவாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சிவா. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகயிருக்கும் நேரத்தில், அஜித்தின் மீது வைத்திருக்கும் அலாதி பிரியத்தால் சமீபத்தில் கும்பகோணத்தில் அஜித்துக்காகச் சிலை திறந்தனர். 

அஜித் இட்லி

தற்போது, வடசென்னையில் உள்ள வீர சென்னை அஜித் நண்பர்கள் சார்பாக 57 கிலோ எடை கொண்ட இட்லியில் அவர் உருவம் பொறித்து அதை பாரத் திரையரங்க முகப்பில் வைக்க இருக்கிறார்கள். இது தொடர்பாக, இந்த இட்லியை செய்த இனியவனிடம் பேசினோம்.

''அஜித் ரசிகர்கள், விவேகம் படத்தை முன்னிட்டு வித்தியாசமாக இதை செய்யலாம் என்று கூறினார்கள். இதுவரை எந்த நடிகருக்கும் இதுமாதிரி இட்லி வடிவத்தில் அவர்களின் உருவத்தைப் பொறித்தது இல்லை. இதுதான் முதல் முறை. பாரத் திரையரங்க முகப்பில் இந்த அஜித் இட்லியை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க உள்ளோம். அதுமட்டுமன்றி அஜித்தின் வீட்டுக்கும் எடுத்து செல்லலாம் என்ற எண்ணமும் உள்ளது. முதலில் அஜித் உருவம் போன்று ஒரு மாடல் வரைந்து அதற்கு மேல் இட்லி மாவை ஊற்றி இந்த இட்லியைச் செய்யவுள்ளோம். இட்லி வெந்த பிறகு, அதன் மேல் கைவேலைப்பாடுகளும் உண்டு. அஜித் இந்த இட்லியைப் பார்ப்பர் என்று நம்புகிறோம்'' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!