வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (24/08/2017)

கடைசி தொடர்பு:12:12 (24/08/2017)

`` `நாம் சினிமாவில் நடித்தால், மக்கள் ஏத்துப்பாங்களா?'னு விஜய்யும் நானும் பேசி இருக்கோம்!'' - நினைவுகளை பகிரும் சஞ்சீவ்!

விஜய் ரசிகர்கள் அனைவரும் தீபாவளிக்கு ரீலிஸாகப் போகும் 'மெர்சல்' படத்தை அதிக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். விஜய் முதல் முறையாக மூன்று கெட்அப்பில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸை சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தியது படக்குழு. விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், சமந்தா, காஜல் அகர்வால், அட்லி என பலர் கலந்துகொண்ட இந்த விழாவை விஜய்யின் நண்பரும் சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ் தொகுத்து வழங்கினார். விஜய்யுடன் நட்பு குறித்து சஞ்சீவிடம் பேசினோம்.

mersal

''எனக்கும் விஜய்க்குமான நட்பு 25 ஆண்டுகளாக தொடர்ந்துட்டு இருக்கு. எங்கள் நட்பு வட்டாரத்தில் ஒரு எட்டு பேர் இருப்போம். நாங்கள் அனைவரும் கல்லூரியில் படிக்கும்போது ஒன்றாக அரட்டையடித்து, ஆடிப் பாடி கொண்டாடிய நண்பர்கள்தான். எங்கள் ஒவ்வொருவர்க்குள்ளும் கனவுகள் இருந்தது. நானும் விஜய்யும் எத்தனையோ நாள்கள் கல்லூரி கார் பார்க்கிங்கில் நடந்துகொண்டு, 'நாமெல்லாம் சினிமாவில் நடிப்போமா, நம்மை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா, ஒரே ஸ்டூடியோவில் நம்ம இருவரின் படப்பிடிப்புகள் எல்லாம் நடக்குமா, ஒரே மேடையில் நாமெல்லாம் இருப்போமா'  என்றெல்லாம் பேசி இருக்கிறோம். இப்போது விஜய்க்கு இருக்கும் பேன் ஃபாலோவர்ஸைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

விஜய்யின் ஒவ்வொரு திரைப்படமும் ரிலீஸாகும் போது நண்பர்கள் குடும்பம் மற்றும் விஜய்யின் மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து முதல் நாள் தியேட்டரில் படம் பார்ப்போம். விஜய்யால் வர முடியாது. 25 வருடங்களுக்கும் மேலாக எங்களின் நட்புகள் தொடர்வதற்கு முக்கிய காரணமே எங்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாததுதான். எதற்காகவும் நாங்கள் விஜய் பெயரை மிஸ்யூஸ் பண்ணியது கிடையாது. அவரிடம் சான்ஸ் கேட்டதும் இல்லை. அவரவர் வேலையை நாங்கள் சரியாகப் பார்க்கிறோம்'' என்றவரிடம் விஜய்யின் 'மெர்சல்' ஆடியோ லான்ச் பற்றி கேட்டோம்.

''என்னிடம் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த விழாவைத் தொகுத்து வழங்குவதற்காக ஒரு மாதத்துக்கு முன்பாகவே கேட்டது. அப்போது என்னால் தொகுத்து வழங்க முடியாது என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால், எதுவும் தப்பாகப் பேசிவிடக் கூடாது, நம்ம நண்பன் ஃபங்ஷன் என்று ஒரு பயம் இருந்தது. அதனால், வேண்டாமென்று சொல்லிவிட்டேன். பிறகு, ஒரு அரைமணி நேரம் கழித்து நானே போன் பண்ணி, ’நிகழ்ச்சியை நானே தொகுத்து வழங்குகிறேன்’ என்று சொன்னேன். விஜய் கடைசியில் பேசி முடித்த பிறகு, மேடையில் ரம்யா நன்றி, சஞ்சீவ் நன்றி என்று முதலில் சொல்லிவிட்டு, பின்பு, திரும்பி என்னை பார்த்து நன்றி என்று சொல்லியிருப்பார். அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் என்பது எனக்கு, என் மனைவிக்கு மற்றும் விஜய்க்கு மட்டும்தான் தெரியும். எங்கள் நட்புக்குள் ஒரு போலித்தனமோ சீன் போடுற எந்த ஒரு விஷயமும் இருக்காது. எங்கள் நட்பு பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும்'' என்று கூறினார் நடிகர் சஞ்சீவ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்