Published:Updated:

“விஜய் சேதுபதி எனக்கு அண்ணன் மாதிரி... சூரி எனக்கு லவ்வர் மாதிரி!” - கலகல சசிகலா

வெ.வித்யா காயத்ரி
“விஜய் சேதுபதி எனக்கு அண்ணன் மாதிரி... சூரி எனக்கு லவ்வர் மாதிரி!” - கலகல சசிகலா
“விஜய் சேதுபதி எனக்கு அண்ணன் மாதிரி... சூரி எனக்கு லவ்வர் மாதிரி!” - கலகல சசிகலா

நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகை எனப் பன்முகத்துடன் வலம்வருகிறார், சசிகலா. எவ்வித மீடியா பின்னணியும் இல்லாமல் தன் விடாமுயற்சியால் கலக்கல் வீஜேவாக இருக்கும் அவருடன் ஒரு ஃப்ரண்ட்லி சாட் 

“மீடியாவுக்குள் நுழைந்தது எப்படி?” 

“என் சொந்த ஊர் ராசிபுரம். என் அம்மாவுக்கு கவர்மென்ட் வேலை. என் சின்ன வயசிலேயே அப்பா இறந்துட்டாங்க. அண்ணன் ஆசிரியரா இருக்காங்க. நான் படிச்சு முடிச்சதும் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்துட்டிருந்தேன். சின்ன வயசிலிருந்தே டி.வியில் முகம் காட்டணும்னு ஆசை. சென்னை வந்ததும் அதுக்கான முயற்சி எடுத்தேன். கலைஞர் டிவிக்கு டிரை பண்ணினேன். ஆனால், செலக்ட் ஆகலை. அப்போதான் என் ஃப்ரெண்ட் கார்த்தி, டிவியில் தொகுப்பாளராக எப்படிப் பேசணும்னு கைடு பண்ணினார். உங்களுக்குக் கார்த்தி யாருனு தெரியுமா? 'சரவணன் மீனாட்சி' சீரியலில் பாண்டியாக நடிச்சவர்தான். காலேஜில் எனக்கு சீனியர். அவர் டிரைனிங்கில் ராஜ் டிவியில் செலக்ட் ஆனேன். அப்புறம், கேப்டன் டிவியில் பண்ணிட்டிருந்தேன். என் பெர்பார்மன்ஸ் பார்த்து கலைஞர் டிவியில் வாய்ப்பு கிடைச்சது. இப்போ கலைஞர் மற்றும் ஜீ தமிழில் ஷோ பண்ணிட்டிருக்கேன்.'' 

“உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை நடக்குமாமே..” 

“உங்க வரைக்கும் வந்துருச்சா (சிரிக்கிறார்) அவங்களுக்கு நான் மீடியாவில் இருக்கிறது பிடிக்கலை. அவங்களை மாதிரி அரசாங்க வேலைப் பார்க்கணும்னு நினைக்கிறாங்க. எனக்கு என்ன வேணுமோ அதை நான்தான் முடிவுப் பண்ணுவேன். அப்படி முடிவுப் பண்ணிட்டா யாருக்காகவும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். சின்ன வயசிலிருந்தே என் குணம் இது. அதனால், எனக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். இப்போ அவங்க என்னைப் புரிஞ்சுக்கிட்டாலும், அதை வெளிக்காட்டிக்காம, அம்மாவுக்கான கெத்தை மெயின்டன் பண்றாங்க. ஆனாலும், அவங்க சப்போர்ட் இல்லாமல் என்னால் இவ்வளவு தூரம் சர்வே பண்ணிருக்க முடியாது.” 

“ ‘பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் நடிகர் சூரிக்கு லவ்வரா நடிச்சது எப்படி?” 

“அது ரொம்ப ஸ்பெஷல் அனுபவம். நான் சூரி சாரை ஏற்கெனவே இன்டர்வியூ பண்ணியிருக்கேன். அந்தப் பழக்கத்தால், எந்தப் பயமும் இல்லாமல் செட்ல ஜாலியா பேசி நடிச்சேன். நிறைய விஷயங்களில் இப்படிப் பண்ணனும் அப்படிப் பண்ணனும்னு சொல்லிக் கொடுத்தார்.” 

“சின்னத்திரையில் நடிக்கிறதுக்கு வாய்ப்பு வந்துருக்காமே?” 

“ஆமா! ஒரு சீரியலில் மெயின் ரோல் பண்றதுக்கு வாய்ப்பு வந்திருக்கு. சீக்கிரமே சின்னத்திரையிலும் என்னைப் பார்க்கலாம்.” 

“விஜய் சேதுபதியைப் பார்க்கும் போதெல்லாம் சாக்லேட் கொடுப்பீங்களாமே?” 

“ஆமாம்! நான் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ஃபேன். அவரின் படங்களை ஃபர்ஸ்ட் ஷோவே பார்த்துடுவேன். ரொம்ப நல்ல மனிதர். எல்லாரிடமும் இயல்பா, அன்பாகப் பழகுவார். நாங்க எப்போ மீட் பண்ணினாலும் அவருக்கு நான் சாக்லேட் கொடுப்பேன். அவர் எனக்கு அண்ணன் மாதிரி.” 

“உங்க நெக்ஸ்ட் பிளான்?” 

“வெள்ளித்திரையில் ரெண்டுப் படங்கள் கமிட் ஆகிருக்கேன். நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவேன். சீரியலிலும் கலக்குவேன். ஆல்ரவுண்டா இருக்கணும். அதுதான் பிளான்!” 

“உங்க பிளஸ், மைனஸ் பற்றி...” 

“நான் ரொம்பவே போல்டான பொண்ணு. அதையே பிளஸா நினைக்கிறேன். ஒருத்தர்கிட்ட நெருங்கிப் பழகினதுக்கு அப்புறம் அவங்க சின்னதா ஒரு வார்த்தை சொல்லிட்டாலும் தாங்கிக்க முடியாமல் அழுதுருவேன். ரொம்ப சென்சிட்டிவ். அது என்னுடைய மைனஸ்!”

வெ.வித்யா காயத்ரி

எளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்! 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.