ராஜேஷ் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம்..!

காமெடி கதாபாத்திரங்களில் கலக்கிய சந்தானம், ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். தற்போது சந்தானம் நடிப்பில், 'சர்வர் சுந்தரம்', 'சக்கப்போடு போடு ராஜா', ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படங்கள் தயாராகி வருகிறது. இந்த மூன்று படங்களுக்கு அடுத்து சந்தானம் நடிக்கப்போகும் புதிய படத்தைப் பற்றிய தகவல்கள் தற்போது வரத் தொடங்கிவிட்டன.

rajesh new film

இயக்குநர் ராஜேஷின் 'சிவா மனசுல சக்தி' திரைப்படம்தான் சந்தானத்தின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. இந்தப் படத்தில் தொடங்கி ராஜேஷ் இயக்கிய அனைத்து படங்களிலும் சந்தானம் தவறாமல் அட்டடென்ஸ் போட்டுவிடுவார். ஆனால், சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு, ராஜேஷ் இயக்கிய 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் சந்தானம் நடிக்கவில்லை. 

தற்போது ராஜேஷின் அடுத்தப்படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்கிற தகவல் கேள்விப்பட்டு ராஜேஷை தொடர்பு கொண்டோம். ''புதிய படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன். படத்துக்கான ஒன்லைனை சந்தானத்திடம் சொன்னேன். அவருக்குப் பிடித்துவிட்டது. உடனே ஓகே சொல்லிவிட்டார். அதனால் முழு ஸ்க்ரிப்ட்டை தற்போது ரெடி செய்துகொண்டிருக்கிறேன். படத்துக்கான ஷூட்டிங் அக்டோபர்  15-ம் தேதிக்கு மேல் தொடங்கும். படத்தில் கண்டிப்பாக காமெடி இருக்கும். அதையும்தாண்டி படத்தில் புதிதாக என்ன சொல்லலாம் என்றுதான் ஸ்க்ரிப்ட் ரெடி செய்துகொண்டிருக்கிறோம். சந்தானமும் நானும் சேர்வதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகயிருக்கும். அதைக் கண்டிப்பாக ஸ்க்ரிப்ட் பூர்த்தி செய்யும். படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை'' என்றவரிடம், படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் காமெடி நடிகர் பற்றி கேட்டோம்.

''கண்டிப்பாக புதுமுக நாயகியாக இருக்காது. தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாக இருக்கும் ஒரு நடிகைதான் ஹீரோயின் ரோல் செய்வார். காமெடி கதாபாத்திரம் படத்தில் இருக்கும். அந்த வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்கிற பேச்சு வார்த்தை சென்றுகொண்டிருக்கிறது. தேனாண்டாள் பிலிம்ஸ்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!