’சுமார் மூஞ்சி குமாரு’ இஸ் பேக்..!? | Is Sumar moonji kumar back?

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (28/08/2017)

கடைசி தொடர்பு:17:47 (28/08/2017)

’சுமார் மூஞ்சி குமாரு’ இஸ் பேக்..!?

'சீதக்காதி' ,'96', 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்',’அநீதிக்கதைகள்’ என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, அடுத்ததாக மணிரத்னம் படத்திலும் நடிக்கப்போகிறார் என்கிற செய்தி அண்மையில் வந்தது. ஆனால், இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஆரம்பமாகும் என்று கூறப்படும் நிலையில், தற்போது, இவர் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகிவுள்ளார்.

vijay sethupathi

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் இயக்குநர் கோகுல், 'காஷ்மோரா' படத்துக்குப் பிறகு இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி கமிட்டாகியுள்ளார். படத்தின் ஷூட்டிங் ப்ளான் பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் கோகுலிடம் பேசினோம்.

''என்னுடைய அடுத்தப்படத்தில் விஜய் சேதுபதிதான் ஹீரோ, 'வனமகன்' படத்தில் நடித்த சயீஷாதான் ஹீரோயின். இந்தப் படத்தின் கதைப்படி ஷூட்டிங் 60 சதவிகிதம் பாரிஸில் நடக்கும். மிச்சமிருக்கும் 40 சதவிகிதம் சென்னை, ராமநாதபுரத்தில் நடக்கும். காமெடி ப்ளஸ் ஆக்‌ஷன் படமான இதில், நான்கு பெரிய ஆக்‌ஷன் காட்சிகளை எடுக்க ப்ளான் பண்ணியிருக்கோம். ஆனால், காமெடிதான் பிரதானம். 

படத்தின் ஷூட்டிங் அக்டோபர் முதல் வாரத்தில் ஆரம்பமாகும். படத்தில் காமெடி ரோலில் யோகி பாபு நடிக்கிறார். விஜய் சேதுபதி, சயீஷா இருவரையும் சுற்றிதான் படம் நகரும்’’ என்றவரிடம் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் இருக்குமா என்று கேட்டதற்கு, ‘’கண்டிப்பாக இருக்காது. 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'  படம் வேறொரு ஸ்டைல், இந்தப் படம் வேறு ஒரு ஸ்டைல். இந்தப் படத்தின் பெயர் ஜுங்கா’’ என்று முடித்தார் இயக்குநர் கோகுல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close