பழைய ஃபார்முக்குத் திரும்பும் லாரன்ஸ்..! - ’முனி-4’ ஸ்டார்ட் | Raghava Lawrence reveals about Muni Part 4

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (29/08/2017)

கடைசி தொடர்பு:11:12 (29/08/2017)

பழைய ஃபார்முக்குத் திரும்பும் லாரன்ஸ்..! - ’முனி-4’ ஸ்டார்ட்

நடன இயக்குநராக நாம் அனைவருக்கும் பரிச்சியமானவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.  தமிழில் அவர் இயக்கிய முதல் படமான முனி பேய் ஹிட் அடித்தது. வழக்கமான பேய் படங்களில் இருக்கும் ஃபார்முலாவை மாற்றி, காமெடியோடு சேர்த்து கொடுத்திருப்பார். 

muni

இந்தப் படம் கொடுத்த வெற்றி ராகவா லாரன்ஸை முனி - 2, 3 என வரிசையாக படங்களை இயக்க வைத்தது. இந்த மூன்று படங்களும் ரசிகர்களுக்கு பிடித்துப்போக, எப்போது முனி-4 வரும் என ஆர்வமாக இருக்கிறார்கள் பேய் படப்பிரியர்கள். 

'மொட்ட சிவா கெட்ட சிவா’, ;சிவலிங்கா' படங்களுக்குப் பிறகு, ராஜமெளலியின் உதவி இயக்குநரான மகாதேவனின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படம் நடிக்கவிருந்தார் லாரன்ஸ். இந்தப் படத்துக்கான வசனத்தை மதன் கார்க்கியும், கதையை பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்தும் எழுதியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போவதால், அதற்கு முன்பாக ராகவா லாரன்ஸ் முனி படத்தின் நான்காம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். 

இதுபற்றி லாரன்ஸிடம் கேட்டபோது, ''மகாதேவன் படத்தில் நடிப்பது உறுதிதான். ஆனால், இந்தப் படத்தின் ஷூட்டிங் கொஞ்சம் தள்ளிப்போவதால், அதற்கு முன்பாக என்னுடைய கதை, திரைக்கதையில் 'முனி’ படத்தின் நான்காம் பாகத்தை இயக்கப்போகிறேன். என்னுடைய சொந்த தயாரிப்பில்தான் இந்தப் படம் தயாராகிறது. படத்தில் நடிப்பவர்கள் மற்றும் இதர தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்'’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்