Published:Updated:

‘எங்களுக்கு சேலை ஏன் ஸ்பெஷல்?’ ராதிகா, நளினி, அஞ்சனாவின் சேலை காதல்

வே.கிருஷ்ணவேணி
‘எங்களுக்கு சேலை ஏன் ஸ்பெஷல்?’ ராதிகா, நளினி, அஞ்சனாவின் சேலை காதல்
‘எங்களுக்கு சேலை ஏன் ஸ்பெஷல்?’ ராதிகா, நளினி, அஞ்சனாவின் சேலை காதல்

'சுடிதாரில் இருந்து ஜீன்ஸ்வரை ஆயிரம் டிரெஸ் இருந்தாலும், என் ஃபேவரைட் சேலைதான்” என்று சொல்லும் இந்த சேனல் செலிப்ரிட்டிகள், சேலையுடனான தங்களின் பெர்சனல் ஷேரிங்ஸ் சொல்கிறார்கள்! 

‘வாணி ராணி’ ராதிகா


 

“நமக்கு உடுத்த வசதியா இருக்கணும், நம்மை அழகா காட்டணும்... அதுதான் நமக்குப் பொருத்தமான டிரெஸ். எனக்கு இந்த ரெண்டு அம்சங்களும் புடவையில் அடங்கிப்போகும். நம்மை ஸ்டைலிஷா காட்ட மாடர்ன் டிரெஸ்தான் போடணும்னு இல்லை. சொல்லப்போனா, புடவையைவிட வசீகரமான உடை உலகத்தில் இல்லை. நம்ம ஊரைப் பொறுத்தவரைக்கும் எல்லா வயதுப் பெண்களும் புடவையில்தான் என் கண்களுக்கு கூடுதல் அழகா தெரிவாங்க. பெண்கள் தங்களின் உயரம், எடை போன்ற அம்சங்களுக்கு ஏற்ப சில்க், காட்டன், ஜார்ஜெட், ப்ளைன், ஃபுல் டிசைன்னு புடவைகளைத் தேர்ந்தெடுத்துக்கலாம். நான் மாடர்ன் டிரெஸ்ல இன்ட்ரஸ்டடா இருக்கிற ஆள்தான் என்றாலும், என்னோட ஆல்டைம் ஃபேவரைட் புடவைதான். அதுவும் பட்டுப்புடவைன்னா... ராதிகா அவுட்!” 

‘தெய்வமகள்’ ரேகா குமார்

“ 'தெய்வமகள்' சீரியல்ல நான் நடிச்சு பெயர் வாங்கிறதுக்கு முன்னாடியே நான் அதில் உடுத்திட்டு வந்த புடவைகள் என்னை கவனிக்க வெச்சிடுச்சு. அந்தப் புடவைகள் எல்லாம் பெரும்பாலும் காட்டன்தான். அதுக்காக நான் உடுத்தின மேட்சிங் பிளவுஸ்கள் மற்றும் குட்டி குட்டி ப்ளீட்களில் நான் அதை நேர்த்தியா உடுத்தின விதம்னு எல்லாமும் சேர்ந்து அந்த காஸ்ட்யூம் பேட்டர்னை ஹிட் ஆக்கிருச்சு. ஒவ்வொரு நாளும், 'இன்னைக்கு 'காயத்ரி' என்ன சாரி..?'னு மக்களை எதிர்பார்க்க வெச்சது. ஃபேஸ்புக், ட்விட்டர்ல எனக்கு எக்கச்சக்க ஃபாலோயர்ஸ் கிடைச்சதுக்கும் அதுதான் அடிப்படைனு நினைக்கிறேன். மாடர்ன் டிரெஸ் மட்டுமே போடுற ஆள் நான். 'தெய்வமகள்' ஷூட்டிங் வர ஆரம்பிச்சதில் இருந்துதான், 'அட, புடவையில் நாம அழகாயிருக்கோமே'னு இப்போ அதுக்கு அடிக்ட் ஆகிட்டேன். எவ்ளோ விலை போட்டு புடவை எடுக்கிறோம் என்பதைவிட, அதை எவ்வளவு நேர்த்தியா கட்டுறோம் என்பதில்தான் வெளிப்படும் புடவையோட அழகும், நம்மோட அழகும். ஸோ, புடவை கட்டப் பழகுங்க கேர்ள்ஸ்!”

நளினி - ‘டார்லிங் டார்லிங்’


“பட்டுப்புடவைகள் மட்டுமே என்கிட்ட 400க்கும் மேல இருக்கும். அந்தளவுக்கு பட்டுப் ப்ரியை நான். குறிப்பா, காஞ்சிபுரம் புடவைன்னா, எனக்கு அவ்வளவு பிடிக்கும். ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை காஞ்சிபுரம் போய் பட்டுப்புடவைகள் எடுத்துட்டு வர்றது என் வழக்கம். ஆனா இனி வாங்குற புடவைகளை எங்கே வைக்கிறதுனு தெரியாத அளவுக்கு என் வார்ட்ரோப் எல்லாம் ஃபுல். புடவைகளை வாங்கிக் குவிக்கிற அதே ஆர்வத்தை அவற்றைப் பராமரிப்பதிலும் காட்டுவேன். 'பட்டுப்புடவையா..? ஸோ வெயிட்பா...'னு ஒதுங்கிற இன்றைய தலைமுறைப் பெண்கள், ஒருமுறை அதைக் கட்டி உங்களை நீங்களே கண்ணாடியில் பாருங்க... அதுக்கப்புறம் பட்டோட ஒட்டிப்பீங்க!”
 

‘குலதெய்வம்’ ஸ்ருதிகா  

‘நாதஸ்வரம்’ சீரியல்ல நான் கட்டின புடவை கலெக்‌ஷன் மக்களுக்குப் பிடிச்சிருந்தது. காஸ்ட்யூம் கொடுக்கிறது யூனிட்தான் என்றாலும், அதை அழகா உடுத்தி வெளிப்படுத்துறதில் என் பங்கும் இருக்கு. என் ரோலுக்கு மிடுக்கா இருக்கணும் என்கிற காரணத்துக்காக காட்டன் புடவைகளையே அதிகமாக கொடுப்பாங்க. அவற்றில் என் ஸ்கின் டோனுக்கு ஏற்ற நிறங்களைத் தேர்ந்தெடுத்துக்குவேன். பொதுவா எல்லோரும் முந்தானைக்கு ஐந்து ப்ளீட்ஸ்தான் வைப்பாங்க. ஆனா நான் ஏழு ப்ளீட்ஸ் வரை சின்ன சின்ன மடிப்புகளா வைப்பேன். அது நீட் லுக் கொடுக்கும். 'நாதஸ்வரம்' சீரியல் முடிஞ்ச பின்னாடியும், 'சேலை கட்ட டிப்ஸ் சொல்லுங்க'னு என்கிட்ட பலரும் கேட்கிற அளவுக்கு புடவையில் ஒரு ட்ரெண்ட் செட் செய்திருக்கேன் என்பதில் மகிழ்ச்சியா இருக்கு!”

'லட்சுமி வந்தாச்சு' வாணி போஜன் 

“புடவை, சேலை, சாரி... எந்த வார்த்தையில் சொன்னாலும் எனக்கு ரொம்பப் பிடிக்கிற உடை அது. நான் ஒரு புடவை பைத்தியம். நல்லிக்குப் போனா எப்படியும் ஒரு ஆறேழு புடவையாவது வாங்கிடுவேன். டிசைனர் புடவைகள் வாங்குறதா இருந்தா என் கார் நேரா 'மன் மந்திர்’ போகும். மாடர்ன் ஆடைகளுக்கு பெரும்பாலும் 'ஷாரா ஷாப்’. மேக்கப் பொருட்களுக்கு ‘மேக்’. இப்படி ஒவ்வொரு அயிட்டத்துக்கும் சென்னைக்குள்ள சிறந்த இடங்களா குறிச்சு வெச்சிருக்கேன்ல! புடவைகளுக்கு அழகூட்டுவதில் ஆபரங்களின் பங்கும் இருக்கு. நான் களிமண், மெட்டல், ஆன்டிக், கோல்டுனு எல்லாவற்றிலும் ஜிமிக்கிகள் வாங்கிச் குவிச்சிடுவேன். கழுத்துக்குக் குட்டிகுட்டி ஆக்சிடைஸ்டு ஜூவல்ஸ், மெல்லிசான செயின் போட பிடிக்கும். பொருத்தமான பிளவுஸ் அமைந்து, கச்சிதமா புடவை கட்ட தெரிஞ்சுட்டா... பிரின்சஸ், க்வீன் எல்லாமே நீங்கதான்!”  

அஞ்சனா, சன் மியூசிக்

“அழகா புடவை உடுத்துற விஜேக்களில் எனக்கும் இடமுண்டுனு நீங்க சொல்றது சந்தோஷமா இருக்கு. பொதுவா நிகழ்ச்சிகளுக்கு மாடர்ன் டிரெஸ்தான் என் விருப்பமா இருந்தது. திருமணத்துக்குப் பிறகு புடவை கட்டி ஷோ பண்ண ஆரம்பிச்சப்போ, நிறைய பேர் 'சூப்பர்'னு சொன்னாங்க. என் மாமியாரோட கபோர்ட் ஃபுல்லா இருக்கிற புடவைகளை, 'தினமும் ஒண்ணா எடுத்து கட்டிக்கோ'னு சொல்லி அவங்க அன்பு ஆஃபரும் கொடுத்திருக்காங்க. குறிப்பா, அவங்களோட காட்டன் புடவை கலெக்‌ஷன் சூப்பரா இருக்கும். இனி வெள்ளிக்கிழமைகளில் ஒன்லி புடவைனு இப்போ முடிவெடுத்திருக்கேன். அப்புறம்... என் மாமியாரை கண்ணு வெச்சுடாதீங்கப்பா!” 

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.