’குப்பத்து ராஜா’வில் ஜி.வி.பிரகாஷ் ராக்கெட்..! - சீக்ரெட்ஸ் சொல்லும் பாபா பாஸ்கர் | Baba Bhaskar reveals about G.V. Prakash character in 'kuppathu raja' movie

வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (29/08/2017)

கடைசி தொடர்பு:18:31 (29/08/2017)

’குப்பத்து ராஜா’வில் ஜி.வி.பிரகாஷ் ராக்கெட்..! - சீக்ரெட்ஸ் சொல்லும் பாபா பாஸ்கர்

வெர்ஜின் பசங்களின் தலைவன் என்று பெயர் வாங்கிய நடிகர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவரது கையில் 'செம, நாச்சியார், அடங்காதே, 100 % காதல், ஐங்கரன், 4ஜி' எனப் பல படங்கள் இருக்கின்றன. இதுதவிர, தற்போது நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கும் 'குப்பத்து ராஜா' படத்திலும் நடிக்கிறார். படத்தின் அப்டேட்ஸூக்காக இயக்குநர் பாபா பாஸ்கரை தொடர்புகொண்டோம்.

g.v.prakash kumar

''வாழ்க்கையில் எதுவும் ப்ளான் பண்ணி நடக்கவில்லை. எனக்கு சினிமா பிடிக்கும், சினிமாவில் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டுதான் இருப்பேன். இந்தப் படத்தின் ஒன் லைன் எனக்கு தோற்றியதும், என்னைச் சுற்றியிருப்பவர்களிடம் சொன்னேன். ’நல்லாயிருக்கே, டைரக்ட் பண்ணலாம்’னு சொன்னாங்க. உடனே உட்கார்ந்து ஃபுல் ஸ்க்ரிப்ட்டாக ரெடி பண்ணினேன். ஜி.வி.கிட்ட சொன்னேன், அவரும் ஓகே சொல்லிட்டாரு. அப்படியே படம் ரெடியாயிருச்சு.

இந்தப் படத்துக்காக எனக்கு சிறிய வயது தோற்றமுடைய ஒரு பையன் தேவைப்பட்டார். அதனால்தான் ஜி.வி.பிரகாஷ் ஸ்க்ரிப்டுக்குள் வந்தார். அதுமட்டுமல்லாமல் படம் லோக்கல் ஏரியாவில் நடக்குற மாதிரியிருக்கும். படத்தில் காதல், ஈகோ, க்ரைம் என எல்லாமே இருக்கும். 

இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் பார்த்திபன் நடித்திருக்கிறார். அவர் ஒரு ஏரியாவுக்கே தலைக்கட்டு. இந்த கேரக்டர் சின்ன வயதில் நான் பார்த்து ரசித்த ஒருவரின் நிஜ கேரக்டர். படத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக பார்த்திபன் வருவார். அதனால் பார்த்திபன் பெயரே படத்தில் எம்.ஜி.ராஜேந்திரன். அதே மாதிரி ஜி.வி.பிரகாஷ் பெயர் படத்தில் ராக்கெட். பார்த்திபன் கேரக்டர் படத்துக்குப் பெரிய ப்ளஸாகயிருக்கும். வண்ணராப்பேட்டைதான் என்னுடைய ஏரியா, அங்கேதான் வளர்ந்தேன். அந்த ஏரியாவின் மக்கள் வாழ்க்கையும் படத்தில் இருக்கும். அந்த மக்களின் நம்பிக்கை படத்தில் இருக்கும்’’ என்றவர் படத்துக்கு ஏன் 'குப்பத்து ராஜா' என்று பெயர் வைத்தார் என்பதைச் சொல்கிறார்.

''ரஜினி படத்தின் பெயர் வைத்தது, படம் ஹிட் ஆகுமென்பதால் இல்லை. ஆனால், பலபேர் அப்படி நினைக்குறாங்க. படத்துக்கு இந்தப் பெயர் இருந்தால் நன்றாகயிருக்குமென்று தயாரிப்பாளர் சொன்னார். இந்தப் படத்துக்கு மொத்தம் இருநூறு பெயர்கள் சொன்னேன். அதில் இந்தப் பெயர் எல்லோருக்கும் பிடித்திருந்தது. அதனால்தான் 'குப்பத்து ராஜா' ரெடியானார்'' என்றார் பாபா பாஸ்கர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close