``ஒருநாள் டீச்சரா இருந்தது பெருமையா இருக்கு!'' - நடிகை ப்ரணிதா! | Actress Pranitha feels proud for her role as a teacher

வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (31/08/2017)

கடைசி தொடர்பு:11:12 (31/08/2017)

``ஒருநாள் டீச்சரா இருந்தது பெருமையா இருக்கு!'' - நடிகை ப்ரணிதா!

'உதயன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. நடிகர் கார்த்தியுடன் 'சகுனி' படத்தில் நடித்ததன் மூலமாகப் பிரபலமான இவர், 'மாஸ்' படத்தில் நடிகர் சூர்யாவுடனும், 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தில் அதர்வாவுடனும் நடித்தார். கன்னட மற்றும் தெலுங்கில் அதிக படங்கள் நடித்திருக்கும் இவர், தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். இந்நிலையில் பெங்களூருவில் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு ஒரு நாள் டீச்சராக கிளாஸ் எடுத்திருக்கிறார் நடிகை ப்ரணிதா. ஒரு நாள் ஆசிரியர் அனுபவம் பற்றி அவரிடம் கேட்டோம்.

ப்ரணிதா

''பொதுவாக பெங்களூரு அரசுப் பள்ளிகளில் அதிகமான டீச்சர்கள் இருக்க மாட்டார்கள். கல்வித் தரம் சற்று குறைவுதான். நல்லா படிக்கிற பசங்க இருப்பார்கள். ஆனால், அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள். அதனால்தான் ஒரு புதிய முயற்சி எடுத்தோம். டாக்டர்ஸ், இன்ஜினீயர்ஸ், ஐ.டி கம்பெனியில் இருப்பவர்கள் எனச் சிலர் அரசுப் பள்ளியில் படிக்கும் பசங்களுக்கு கிளாஸ் எடுத்தால் நன்றாகயிருக்கும். ஏனென்றால், அரசுப் பள்ளியில் படிப்பவர்களுக்கு இங்கிலீஷ் அவ்வளவாகத் தெரியாது. அதை நம் போன்று இருப்பவர்கள் சொல்லிக் கொடுத்தால் நன்றாகயிருக்கும். அதிலும் ஒரு நடிகை இதை முன்னின்று செய்யும்போது பலரும் அதை ஃபாலோ பண்ணுவார்கள். அதனால்தான் 'Teach for change' என்கிற ஒன்றை நானே ஆரம்பித்து வைத்தேன். நாம் ஒரு மணிநேரம் டீச்சராகயிருந்து அவர்களுக்கு கிளாஸ் எடுத்தால் அது படிக்கிற பசங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகயிருக்கும். ஏழாம் வகுப்பு படிக்கிற பசங்களுக்குதான் இந்த கிளாஸ் எடுத்தேன். 

ப்ரணிதா

கிளாஸ் எடுக்கும்போது நான் படிப்பேன். அதை அந்தப் பசங்களை எழுதச் சொல்லுவேன். பல பேர் எழுதாமல் என்னையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஏன், எழுதாமல் இருக்கீங்கன்னு கேட்டால், பென்சில் இல்லை, ப்ரெண்ட் எழுதிவிட்டு பென்சில் கொடுத்தால்தான் நான் எழுத முடியும் என்று சொல்வார்கள். கேட்கும்போதே கஷ்டமாகயிருக்கும். அந்த அளவுக்கு கஷ்டப்படுற ஒரு குடும்ப சூழ்நிலையில் இருக்கும் பசங்கதான் அந்த கவர்மென்ட் ஸ்கூல் பசங்க. எல்லா வகுப்புக்கும் சேர்த்து அங்கே ஒரு டீச்சர்தான் இருக்கிறார். அதனால்தான், வாரத்தில் ஒருநாள் நாம் கிளாஸ் எடுக்கலாம் என்று தோன்றியது'' என்றவரிடம் தமிழ்நாட்டில் கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கும் பசங்களுக்கு கிளாஸ் எடுக்கும் ஐடியா இருக்கா என்றால், ''கண்டிப்பாக இருக்கு, யாராவது என்னை அணுகிக் கேட்டால், எடுப்பேன்'' என்றார் நடிகை ப்ரணிதா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close