’காலா’வில் பாடுவதற்கும் வாய்ப்பு வரலாம்..! - ‘நெருப்புடா’ அருண்ராஜா..! | I may get chance to sing for Kaala movie, says Arunraja kamaraj

வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (31/08/2017)

கடைசி தொடர்பு:12:58 (31/08/2017)

’காலா’வில் பாடுவதற்கும் வாய்ப்பு வரலாம்..! - ‘நெருப்புடா’ அருண்ராஜா..!

’ராஜா ராணி' படத்தில் ஆர்யாவின் நண்பராக நடித்தவர் அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நண்பராகவும் நடித்துள்ளார். நிஜ வாழ்க்கையிலும் சிவகார்த்திகேயனின் நண்பராகயிருக்கும் அருண்ராஜா 'கபாலி' படத்தின் 'நெருப்புடா' பாடலின் மூலம் பிரபலமானார். இந்தப் பாடலை எழுதிப் பாடியவரும் இவர்தான்.

arunraka kamaraj

தற்போது பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் இயக்கப்போகிறார் என்று கேள்விப்பட்டு அவரிடம் பேசினோம். ''சினிமாவுக்கு வந்ததே இயக்குநராக வேண்டும் என்ற கனவோடுதான். ஆனால், காலச்சக்கரம் சுழன்று என்னை முதலில் காமெடியனாக, பாடலாசிரியராக, பாடகராக மாற்றிவிட்டது. என்னுடைய படத்துக்கான ஸ்க்ரிப்ட்டை எட்டு மாதத்துக்கு முன்பே எழுதிவிட்டேன். பெண்கள் கிரிக்கெட் பற்றிய படம்தான். பெண்கள் கிரிக்கெட் பற்றி இதுவரை எந்தப் படமும் வெளிவரவில்லை. ஹாட்ஸ்டாரில் மட்டும் நடந்து முடிந்த பெண்கள் கிரிக்கெட் விளையாட்டைப் பலர் பேர் ரசித்திருக்கின்றனர்.  உலகம் முழுக்க எந்தப் படமும் வெளிவரவில்லை. அதனால், இந்த ஒரு நாட் எடுத்தேன். இதில் சில உண்மைச் சம்பவங்களை எடுத்திருக்கேன். அதைப் படத்துக்கு ஏற்ற மாதிரி கொடுத்திருக்கிறேன். புதுமுகங்கள்தான் படத்தில் நடிப்பார்கள். கிரிக்கெட் விளையாடத் தெரிந்த பெண்ணாகயிருந்தால் நன்றாகயிருக்கும். தயாரிப்பும் புதிய நிறுவனமாகத்தான் இருக்கும். 

இப்போது படம் இயக்கப்போவதை நான் சொன்னதற்கு காரணமே, இதைப் பார்த்துவிட்டு கிரிக்கெட் பார்க்கத் தெரிந்த சில பெண்கள் கிடைப்பார்கள் என்பதால்தான். ஆடிஷன்ஸ் நடத்தி கதாநாயகியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று இருக்கிறேன். படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம் மட்டும்தான் நான் எழுதுவேன். பாடலாசிரியர், இசையமைப்பாளர் வேறு ஒருவர்தான். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும். டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும்'' என்றவரிடம், 'கபாலி' நெருப்புடா போல் ’காலா’விலும் உங்கள் பாடல் இருக்குமா என்று கேட்டோம். ''கபாலி படத்தின் வாய்ப்பே கடைசி நேரத்தில்தான் வந்தது. அதனால் 'காலா' படத்துக்கும் கடைசி நேரத்தில் வந்தாலும் வரலாம், தெரியவில்லை. வந்தா சந்தோஷம்'' என்றார் அருண்ராஜா காமராஜ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்