வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (02/09/2017)

கடைசி தொடர்பு:10:29 (02/09/2017)

’கார்த்திக் நரேனுக்கு நான் செய்து கொடுத்திருக்கும் சத்தியம்!’’ - 'மீசைய முறுக்கு' நாயகி ஆத்மிகா

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இயக்கிய 'மீசைய முறுக்கு' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இந்தப் படம் கொடுத்த வரவேற்பின் காரணமாகத் தற்போது டபுள் சந்தோஷத்தில் இருக்கும் இவர், அடுத்தாக கார்த்திக் நரேன் இயக்கும் 'நரகாசூரன்' படத்தில் நடிக்கிறார். படத்தின் வாய்ப்பு எப்படி வந்தது என்பது பற்றி தெரிந்துகொள்ள ஆத்மிகாவை தொடர்புகொண்டு பேசினோம்.

ஆத்மிகா

''மீசைய முறுக்கு படத்துக்குப் பிறகு, நிறைய படங்களுக்காக என்னிடம் அப்ரோச் பண்ணியிருந்தார்கள். அதில் 'நரகாசூரன்' திரைப்படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிப் ஹாப் ஆதியுடன் முதல் படம் , இரண்டாவது படம் கார்த்திக் நரேனுடன் ரொம்ப ஹாப்பியாக இருக்கிறது. அவர் மிகவும் திறமைசாலியான ஒரு இயக்குநர். அவருடைய முதல் படமே நல்ல ஹிட்டான படம். ரொம்ப இளமையான வயதில் இப்படி ஒரு  ஹிட் கொடுக்குறது பெரிய விஷயம். 

அதுவும் இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, இந்திரஜித், சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண் என சீனியர்ஸ் பலர் நடிக்கின்றனர். இதில் எனக்கான ரோல் இருக்குங்குற விஷயமே சந்தோஷமாக இருக்கு. இந்தப் படத்தில் பாடல்கள்கூட இல்லை. செப்டம்பர் 15-ம் தேதிக்கு அப்புறம்தான் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. படத்துக்கான ஆடிஷன் நடந்து முடிந்திருக்கிறது. ஃபுல் ஸ்டோரியும் கார்த்திக் நரேன் என்னிடம் சொன்னார். சஸ்பென்ஸ் டிராமாதான் படம். அதனால் இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு சவாலான விஷயம். எனக்கு சஸ்பென்ஸ் மூவி என்றால் ரொம்பப் பிடிக்கும். அதற்காக இப்போதே சில ஹோம் ஒர்க்ஸ் எல்லாம் பண்றேன். இந்தப் படத்தைப் பற்றி எந்த சஸ்பென்ஸான விஷயமும் வெளியே சொல்லக் கூடாது. நானும் சொல்ல மாட்டேன்னு கார்த்திக் நரேனுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். அதனால் வேறு எந்த விஷயமும் சொல்ல மாட்டேன்'' என்று முடிக்கிறார் ஆத்விகா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்