வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (04/09/2017)

கடைசி தொடர்பு:11:51 (04/09/2017)

’’உதயநிதி சாப்ட்வேர் இன்ஜினீயர், மஞ்சிமா புத்திசாலி பொண்ணு..!’’ - இயக்குநர் கெளரவ்

’தூங்கா நகரம்’, ’சிகரம் தொடு’ படத்தின் இயக்குநர் கெளரவ் நாராயணன், தற்போது இயக்கிவரும் திரைப்படம் 'இப்படை வெல்லும்'. உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாள்களுக்கு முன்பு ரிலீஸானது. ஃபர்ஸ்ட் லுக்கில் மிகவும் ஸ்மார்ட் பையனாக உதயநிதி காட்சியளித்துள்ளார். படத்தில் என்ன ஸ்பெஷல் இருக்கு என்பதைத் தெரிந்துகொள்ள இயக்குநர் கெளரவ் நாராயணனைத் தொடர்புகொண்டு பேசினோம்.

gowrav

''இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் மூவி. ஆக்‌ஷன் த்ரில்லர்னு சொல்றதைவிடவும் இன்டெலிஜென்ட் ஆக்‌ஷன் த்ரில்லர்னு சொன்னா சரியாகயிருக்கும். என்னுடைய 'சிகரம் தொடு' படத்தைப் பார்த்துவிட்டு உதயநிதி ஸ்டாலின் கால் பண்ணி, ’படம் நல்லாயிருக்கு. எனக்கு ஒரு ஸ்டோரி சொல்லுங்க’னு சொன்னார். நான், ’சார் இப்போதுதான் ஒரு ஸ்க்ரிப்ட் செய்துகொண்டிருக்கிறேன். முடித்துவிட்டு சொல்லுகிறேன்’ என்றேன். அதிலிருந்து ஸ்க்ரிப்ட் எழுத ஒரு ஏழு மாதம் ஆனது. முடிக்கும்போது இந்த ஸ்க்ரிப்ட்டுக்கு உதயநிதி சரியாகயிருப்பார் என்று தோன்றியது. அதுமட்டுமில்லாமல் இதுவரை உதயநிதி இதுவரை பண்ணாத ஒரு ஜானர். மிகவும் முதிர்ச்சியான கேரக்டர். 

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்துவிட்டு உதயநிதி லுக்ஸ் நல்லாயிருக்குனு சொன்னாங்க. ஸ்க்ரிப்ட் எழுதி முடித்தவுடனே இதில் உதயநிதி லுக் இப்படிதான் இருக்கணும்னு வரைந்துவிட்டேன். அதைத்தான் அப்படியே கொண்டு வந்தோம். இந்தப் படத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக நடித்திருக்கிறார். படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மஞ்சிமா மோகனுக்கு வலுவான கேரக்டர். இந்தப் படத்துக்காக மட்டுமே கிட்டத்தட்ட 50 நாள்களுக்கு மேலாக கால்ஷீட் கொடுத்திருந்தாங்க. அப்போ பாருங்க அவருக்கு எவ்வளவு முக்கியமான கேரக்டருனு. இந்தப் படத்தில் அவர் வழக்கமான ஒரு கதாநாயகியாக மட்டும் இருக்க மாட்டாங்க. இந்தப் படத்துக்காக மஞ்சிமா மோகனை உதயநிதிதான் சிபாரிசு பண்ணினார். ஆல்ரெடி உதயநிதியும் மஞ்சிமா மோகனும் ஒரு படம் பண்ண வேண்டியது, அது ட்ராப் ஆகியிருந்தது. இந்தப் படத்தில் புத்திசாலியான ஒரு பெண்ணாக மஞ்சிமா வருவாங்க. மஞ்சிமா நடித்த எந்தப் படத்தையும் அதுவரை நான் பார்க்கவில்லை. அதன்பிறகுதான் பார்த்தேன். எப்படி அவர் நடித்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ள.

அடுத்ததாக ராதிகா மேம் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அவர் நடித்த நிறைய படங்களில் உதவி இயக்குநராய் ஒர்க் பண்ணியிருக்கேன். அப்போது எல்லாம் ராதிகா மேம் சொல்லுவாங்க. 'நிறைய படங்கள் நடித்துவிட்டேன். ஆனால், வித்தியாசமான ஒரு ரோல் பண்ணவே இல்லைனு. அது எனக்கு நினைவு இருந்தது. அதனால் இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதும்போதே, இந்தப் படத்தில் அவருக்கு ஒரு வித்தியாசமான ஒரு கேரக்டர் வைத்துதான் எழுதினேன். இந்தப் படத்தில் ராதிகா மேம் பஸ் டிரைவராக நடித்திருக்கிறார். இதற்காக உண்மையாகவே பஸ் ஓட்டினார். திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி வரக்கூடிய ஒரு பேருந்தை மக்களுடன் வைத்து நிஜமாக ஓட்டிவந்தார். அதை அப்படியே ரியலாக ஷூட் பண்ணினோம். முக்கியமான கீ ரோல் இந்தப் படத்துக்காகச் செய்திருக்கிறார். முதலில் இந்த ஸ்க்ரிப்ட் சொன்னவுடன், ஒரு வாரம் என்னிடம் டைம் கேட்டாங்க. பஸ் ஓட்டி பிராக்டிஸ் எடுப்பதற்காக, வெறும் ஆறு நாள்களிலேயே பஸ் ஓட்டக் கற்றுக்கொண்டார். அவங்க பெயர் படத்துக்கு மிகவும் தேவைப்படும் ஒரு பெயராகயிருக்கும். 

என் வாழ்க்கையில் சின்ன வயதிலிருந்தே, நான் பார்த்து வியந்த பெண் டிரைவர்களை மனதில் வைத்துதான் ராதிகா மேம் கேரக்டர் உருவாக்கியிருக்கேன். ராதிகா மேமின் பாஸிட்டிவ் எனர்ஜி ரொம்ப பிடிக்கும். அதனால்தான் அவரைப் பண்ண வைத்தேன். டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷூம் இந்தப் படத்தில் செம்மையான ஒரு ரோலைப் பண்ணியிருக்காங்க. அதைப் பற்றி விரிவாகச் சொன்னால், கதையைச் சொல்ல வேண்டியதாக இருக்கும். 

விஜய் சேதுபதி

இந்தப் படம் உதயநிதி ஸ்டாலின் படமாக இருக்காது. முழுக்க முழுக்க இதுவரை அவர் பண்ணிய படங்களிலிருந்து மாறுபட்ட ஒரு படமாகத்தான் இருக்கும். உதயநிதியின் ஒரு நியூ அவதார்தான் இந்தப் படம். படத்தின் ஸ்க்ரிப்ட்டுக்காக இந்தியா முழுக்க டிராவல் பண்ணியிருக்கோம். இது எல்லாம் தயாரிப்பாளர் லைகா நிறுவனத்தால்தான் முடிந்தது. உதயநிதியை இந்தப் படம் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும். இந்தப் படத்தின் ஒரு  முக்கிய கட்டத்தில் வாய்ஸ் ஓவர் ஒன்று தேவைப்பட்டது. அதற்காக விஜய்சேதுபதியிடம் கேட்டேன். எனக்கு அவரை ரொம்ப நாளாகத் தெரியும்.  உடனே ஓகே சொன்னார். அவருடைய ஸ்டைலிலேயே இந்தப் படத்துக்கு வாய்ஸ் கொடுத்தார்'' என்றார் படத்தின் இயக்குநர் கெளரவ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்