``60 நாள்ல எடுத்த படத்தை ரிலீஸ் பண்ண ஒன்றரை வருடம் காத்திருந்தேன்!'' - 'புரியாத புதிர்' இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி | I have been waiting for long time to release my movie, says director Ranjit Jeyakodi

வெளியிடப்பட்ட நேரம்: 20:51 (05/09/2017)

கடைசி தொடர்பு:20:51 (05/09/2017)

``60 நாள்ல எடுத்த படத்தை ரிலீஸ் பண்ண ஒன்றரை வருடம் காத்திருந்தேன்!'' - 'புரியாத புதிர்' இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி

யக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வெளிவந்திருக்கும் திரைப்படம் 'புரியாத புதிர்'. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் பல இன்னல்களைக் கடந்து ரிலீஸாகியுள்ளது. தன்னுடைய முதல் படத்தின் ரிலீஸூக்குப் பிறகே இரண்டாம் படத்துக்கான அறிவிப்பை வெளியிடுவேன் என காத்திருந்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியிடம் படத்தின் வெளியீடு குறித்து பேசினோம்.

ranjt jeyakodi

''புரியாத புதிர் படத்தின் வெளியீடு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதைவிட, மிகுந்த ஆசுவாசமாக நிம்மதியாக உள்ளது. ஒரு சிறிய அறையினுள்  பெரிய யானையின் போராட்டத்தைப் போல்தான் படம் வெளியாகாமல் இருக்கும்போது உணர்ந்தேன்.

இந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகுதான் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளிவர வேண்டும் என்று நினைத்திருந்தேன். என்னுடைய அடுத்த படத்தின் ஜானர் க்ரைம் டிராவல் திரைப்படம். இந்தப் படம் பற்றிய முழு அறிவிப்பு விரைவில் வெளிவரும். ஏனென்றால் வியாபார ரீதியாக எல்லாமே மாறிவிட்டது. அதனால், ஒரு விளம்பரமாகப் படத்தின் பெயரும் வெளிவரும். 

'புரியாத புதிர்' படத்தின் வெளியீடு தள்ளிப்போனதற்கு காரணமாக நான் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. இந்தப் படம் எடுப்பதற்கு நான் செலவிட்ட நாள்கள் வெறும் 60 நாள்கள்தான். 48 நாள்களில் ஒரே ஷெட்டியூலில் படப்பிடிப்பு நடத்தினேன். ஆனால், ரிலீஸுக்காக மட்டும் ஒன்றரை வருடம் காத்திருந்தேன். பணம் இல்லாமல் எதுவும் பண்ணமுடியாது. நான் ஒரு தயாரிப்பாளராக இருந்து பார்த்தால் தயாரிப்பாளர் கஷ்டம் எனக்குப் புரியலாம். பெரும் பணம் புரட்டுவது என்பது எவ்வளவு கஷ்டம். என் கையில் இருந்தது ஒரு கதையும், ஒரு நடிகரிடமிருந்து வாங்கிய கால்ஷீட்டும்தான். 

புரியாத புதிர் படம் எடுத்து முடித்ததுக்குப் பிறகு, எனது அடுத்த படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலைகளில்தான் ஈடுபட்டிருந்தேன். நான் ரொம்பச் சோர்வாக இருந்தேன். அதற்காக அதிலேயே நான் மூழ்கிப்போகவில்லை. எனக்குப் பெரிய அக்கறையையும் ஆதரவையும் விஜய் சேதுபதி செலுத்திக்கொண்டுதான் இருந்தார். என்னைப் பெரிய தனிமைக்குள் அவர் விடவில்லை. சப்போர்ட் செய்துகொண்டுதான் இருந்தார். படம் ரிலீஸாவதற்கு அன்று காலை 4 மணிக்குகூட என்னுடன் உட்கார்ந்து டீ சாப்பிட்டுவிட்டு, பேசிவிட்டுதான் சென்றார். 

சினிமாவின் டைனமிக்ஸ் எனக்குத் தெரியும். எப்போது படம் ரிலீஸாகும் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், என்னைச் சுற்றியிருந்தவர்களுக்குதான் என்னால் பதில் சொல்லமுடியவில்லை. என்னைப் பார்த்தவுடன் பலர் நலம் விசாரித்தவுடன் அப்புறம் படம் எப்போது ரிலீஸாகும் என்றுதான் கேட்பார்கள். அது ஒண்ணு மட்டும்தான் எனக்கு கஷ்டமாகயிருந்தது. இந்தக் கேள்வி ஒன்றை எதிர்கொள்வதுதான் எனக்கான பிரச்னையாக இருந்தது. மற்றபடி வேறு எதுவும் எனக்கு பிரச்னையாகத் தெரியவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close