’’சின்ன ரோலா இருந்தாலும் யோசிக்காமல் மெர்சலில் நடித்தேன்” - நடிகர் காளி வெங்கட் | Actor kaali venkat speaks about his role in Mersal

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (07/09/2017)

கடைசி தொடர்பு:13:35 (07/09/2017)

’’சின்ன ரோலா இருந்தாலும் யோசிக்காமல் மெர்சலில் நடித்தேன்” - நடிகர் காளி வெங்கட்

'இறுதிச்சுற்று, மிருதன், கொடி' எனப் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் காளிவெங்கட்.  அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரிடம் பேசினோம்.

காளி வெங்கட்

’’தற்போது ஜி.வி.பிரகாஷின் ஐங்கரன் படத்தில் நடித்திருக்கிறேன். முதல் முறையாக இந்தப் படத்தில் அவருடன்  கைகோத்திருக்கிறேன். படம் முழுக்க அவருடன் வரும்படியான கதாபாத்திரம். இந்தப் படத்தில் எங்கள் காம்போ நன்றாகயிருக்கும். அதேபோல் 'வேலைக்காரன்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் என் கேரக்டர் காமெடியன் என்று சொல்லவிட முடியாது. அது படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும்’’ என்றவரிடம் விஜய்யின் 'மெர்சல்' படத்தைப் பற்றிக் கேட்டோம்.

’’அட்லியை எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும். அவரின் 'தெறி' படத்திலும் ஒரு ரோல் செய்திருப்பேன். அதனாலேயே, 'மெர்சல்' படத்திலும் ஒரு சின்ன ரோல் செய்திருக்கிறேன். ஆட்டோ டிரைவராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். பெரிய ஸ்டார் நடிக்கும் படத்தில் ஒரு சின்ன சீனில் நடித்தாலும் நல்ல ரீச் கிடைக்கும். அதுவும் இது விஜய் சார் படம் வேற. அதனால்தான் நடித்தேன்” என்றவரிடம் காளிவெங்கட் ஹீரோவாக நடிப்பாரா என்றால், ‘’அப்படி ஒருகதை அமைந்தால் பண்ணலாம். ஆனால், அதையெல்லாம் தாண்டி நான் ஹீரோக்கான மெட்டீரியல் இல்லை. அது எனக்கே தெரியும்’’ என்று கலகலப்பாக முடித்தார் காளி வெங்கட். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close