வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (07/09/2017)

கடைசி தொடர்பு:13:40 (07/09/2017)

’’கும்கி-2 படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை..!’’ - இயக்குநர் பிரபு சாலமன்

'தொடரி' படத்துக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கவிருக்கும் திரைப்படம் 'கும்கி 2'.  விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த 'கும்கி' படம் வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

'கும்கி' படத்தில் புதுமுகங்கள் நடித்தது போலவே, இரண்டாம் பாகத்திலும் புதுமுகங்களையே நடிக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறார். அதுமட்டுமின்றி படத்துக்கான இசையும் இமானுக்குப் பதிலாக நிவாஸ் கே பிரசன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் பிரபுசாலமன். இவரது இசையில் 'தெகிடி', 'சேதுபதி', 'கூட்டத்தில் ஒருத்தன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. 

தற்போது 'கும்கி 2' படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது என்கிற செய்தியை கேள்விப்பட்டு, அதை உறுதிப்படுத்த இயக்குநர் பிரபு சாலமனைத் தொடர்புகொண்டோம். ''இன்னும் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. தற்போது படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில்தான் ஈடுபட்டு வருகிறேன். அதற்காகத்தான் தாய்லாந்தில் இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் படத்துக்கான நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை’’ என்றும் கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்