ரஜினியுடன் 'காலா', நயன்தாராவுடன் 'இமைக்கா நொடிகள்'..! - ரமேஷ் திலக் செம ஹாப்பி

தமிழ் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்களில் நடிகர் ரமேஷ் திலக்கும் ஒருவர். ரஜினியுடன் 'காலா', நயன்தாராவுடன் 'இமைக்கா நொடிகள்' மற்றும் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என பலருடன் ரவுண்ட் கட்டி நடித்துக்கொண்டிருக்கும் ரமேஷிடம் பேசினோம். 

'' நல்ல படங்களில் நடிப்பது ரொம்ப சந்தோஷமாகயிருக்கு. 'கபாலி' படத்தில் ரஜினியுடன் ஒரு சின்ன சீனில் மட்டும் நடித்திருப்பேன். இப்போது 'காலா' படத்தில் ஒரு ரோல் செய்கிறேன். ரஜினி ரசிகருக்கு அவரைப் பார்த்தாலே சந்தோஷம். நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரோட நடித்தது ரொம்ப சந்தோஷம். 

'கபாலி' படம் பண்ணும்போது 'காக்கா முட்டை' படத்தில் நான் நடித்ததை ஞாபகம் வைத்து என்னிடம் அதைப் பற்றி கேட்டார் ரஜினி. அதே போல் காலா பட ஷூட்டிங்கில் அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது 'கபாலி' படத்தில் ஒரு சின்ன சீனில் நடித்தைக்கூட ஞாபகம் வைத்து கேட்டார். அவரது தன்னடக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் கூட தலைக்கணம் இல்லாமல், ரியலாகவே ஒரிஜினல் தன்மையுடன் இருக்கக்கூடியவர். அவருடன் நடிப்பது செம ஹாப்பி என்றவரிடம், 'இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாராவுடன் நடிப்பது பற்றி கேட்டோம்.

’’அவருடன் நடிப்பதில் இதுதான் முதல் படம். அஜய் ஞானமுத்துவின் 'டிமாண்டி காலனி’ படத்தில் ஒரு முக்கியமான ரோல் செய்திருப்பேன். அந்தப் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதே போல் இந்தப் படத்திலும் என் கேரக்டர் ரசிகர்களுக்கு பிடிக்கிறமாதிரி இருக்கும்.  இதைத் தவிர இந்தப் படத்தைப் பற்றி தற்போது எதுவும் கூறமுடியாது என்றவரிடம், விஜய் சேதுபதியுடனான நட்பு பற்றிக் கேட்டோம். 

’’ 'சூது கவ்வும்' படத்திலிருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. மிகவும் நேர்மையான மனிதர் விஜய் சேதுபதி. 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் சேது அண்ணாவுடன் நடித்து வருகிறேன். நிறைய படங்கள் அண்ணாவுடன் நடித்துவிட்டேன். எவ்வளவு பெரிய இடத்துக்குச் சென்றாலும் எப்போதும் போல்தான் பழங்குவார். சமீபத்தில் அவர் புதிதாக கார் எடுத்த போது ஈ.சி.ஆரில் ஜாலியாக ரைட் போனோம்'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் ரமேஷ் திலக்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!