’’மாதவனுடன் நடிக்க ஆசை..!’’ - சுனைனா

''என்னுடைய முதல் படம் 'காதலில் விழுந்தேன்'. அந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனிதான் இசையமைப்பாளர். பாடல்கள் அனைத்தும் நல்ல ஹிட் ஆனது. எனக்கு ''காதலில் விழுந்தேன்' படத்தில் நல்ல பெயர் கிடைத்ததுக்கு விஜய் ஆண்டனி இசையும் ஒரு முக்கிய காரணம். இப்போ அவருக்கு ஜோடியா 'காளி' படத்தில் நடிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு...” - விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் நடிகை சுனைனா. 

sunaina

’’விஜய் ஆண்டனிக்கு  நிறைய பேன் ஃபாலோயர்ஸ் உண்டு. இப்போது விஜய் ஆண்டனிக்கு நான் ஜோடியாக நடிப்பது ஹாப்பியாகயிருக்கிறது. அவர் நன்றாக நடிக்கவும் செய்கிறார். அவருடன் நடிப்பதே ஒரு பியூட்டிஃபுல்லான விஷயம்தான். அதையும்தாண்டி இந்தப் படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கு. ஒரு நல்ல கதையுள்ள  திரைப்படம்தான் 'காளி'. ஆனால், அதைப் பற்றி பெரிதாக என்னால் இப்போது சொல்ல முடியாது. இந்தப் படத்தில் மொத்தம்  நான்கு கதாநாயகிகள் இருக்காங்க. எல்லோருக்கும் சமமான கேரக்டர்தான். 

படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டருக்காக என்னை அணுகியபோது ரொம்ப சந்தோஷமாக ஃபீல் பண்ணினேன். எனக்கு ஒரு வலுவான கேரக்டரை கிருத்திகா கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கிருத்திகாவை எனக்கு ஏற்கெனவெ தெரியும். எங்களுக்குள் ஓர் அறிமுகம் இருந்தது. சீனுராமசாமியின் 'நீர்ப்பறவை' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, கிருத்திகா உதயநிதி என்னை சந்தித்துப் பேசியுள்ளார். ஒரு பெண் இயக்குராக அவரைப் பார்த்து மிகவும் பெருமைப் படுகிறேன். ஏனென்றால்  தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் குறைவுதான். ஒரு பெண் இயக்குநரால் எமோஷனல் சீக்வென்ஸை அழகாக எடுக்க முடியும். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது'' என்றவரிடம், ’யாருடன் நடிக்க ஆசை’ என்று கேட்டதற்கு, “நடிகர் மாதவனின் ஆக்டிங் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய ஸ்டைல் பிடிக்கும். அவருடன் நடிக்க ஆசை'' என்று கூறினார் நடிகை சுனைனா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!