’’எனக்கு விருது கிடைத்ததற்கு செல்வராகவன்தான் காரணம்..!’’ - நெகிழும் நடிகை நந்திதா

'அட்டகத்தி' படத்தின் மூலமாகத் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை நந்திதா, தற்போது செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூரியாவுக்கு ஜோடியாக 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் இரண்டு இயக்குநர்களுடன் பணிபுரிந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் நந்திதா. 

nandhitha

''செல்வராகவன் சார் செம கேரக்டர். அவருடைய படத்தில் நடிக்கப்போகிறேன் என்று கேள்விப்பட்டு பலர், 'அய்யோ, அவர் படத்திலா நடிக்கப்போறீங்க. ரொம்ப ஸ்ரிக்ட்டான டைரக்டர் ஆச்சே' என்றெல்லாம் பயமுறுத்துனாங்க. நானும் பயந்துகொண்டேதான் நடிக்கப்போனேன். ஆனால், செல்வராகவன் நம்முள் இருக்கும் நடிப்பு திறமையை அழகாக வெளியே கொண்டுவருவார். இந்தப் படத்துக்குப் பிறகு, ஒரு தெலுங்கு படத்தில் நடித்தேன். அந்தப் படத்துக்காக எனக்கு அவார்ட் கிடைத்தது. அதற்கு காரணம் செல்வராகவன்தான். என்னிடம் அழகாக வேலை வாங்கினார். நடிப்பு சொல்லிக்கொடுத்தார். எப்போதும் நான் இயக்குநர்களின் நாயகிதான். 

எஸ்.ஜே.சூர்யா சாரின் படங்களை நான் இதுவரை பார்த்ததில்லை. அதனால், அவருடன் நடிக்க எனக்கு பயமில்லை. இந்தப் படத்தில் அவரின் மனைவி கேரக்டர்தான் செய்திருக்கிறேன்.  நான், எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா மூன்று பேர்தான் படம் முழுக்க வருவோம்.  இந்தப் படம் ஹாரர் மூவியா, இல்லை த்ரில்லர் மூவியா என்பது சஸ்பென்ஸ். நிறைய திருப்பங்கள் படத்தில் இருக்கும். 

nandhitah

'வணங்காமுடி' படத்தில் இயக்குநர் செல்வா எனக்கு ஒரு வித்தியாசமான கேரக்டர் கொடுத்திருக்கிறார். 50 ஸ்க்ரிப்ட் கேட்டிருப்பேன், எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. அப்போதுதான் ’வணங்காமுடி’ படம் வந்தது. இது ஒரு கமர்ஷியல் படம். இதில் போலீஸ் கேரக்டர் பண்ணியிருக்கிறேன். படத்தில் ஃபைட் பண்ணியிருக்கிறேன். நிஜ வாழ்க்கையில் நான் ஒரு கெளவ் பாய் மாதிரி. என் ஒரிஜினல் கேரக்டருக்கு ஏற்ற மாதிரி ஒரு தைரியமான பெண்ணாக நடித்திருக்கிறேன். இதுவரை பார்க்காத நந்திதாவை இந்தப் படத்தில் பார்க்கலாம். அரவிந்த் சாமி ரொம்ப அழகு, மேன்லி. அவருடன் நடிப்பது செம ஹாப்பி. சிம்ரன் இந்தப் படத்தில் என்னை போலீஸ் கெட்டப்பில் பார்த்தவுடன், ’உனக்கு இந்த கெட்டப் நன்றாகயிருக்கு’ என்றார். ரொம்ப கூலான ஃபெர்ஷன் சிம்ரன். டேக் சொன்னவுடன் நடிப்பில் அசத்துவாங்க. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கு'' என்று சொல்லி முடித்தார் நந்திதா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!