வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (12/09/2017)

கடைசி தொடர்பு:18:15 (12/09/2017)

’’மீண்டும் சின்னத்திரையில் என்னைப் பார்க்கலாம்..!’’ - அனுஹாசன்

''லண்டனிலிருந்து சென்னை வர வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் சென்னையில் இருக்கும் என் அக்கா சுஹாசினி மற்றும் சித்தப்பா கமல் மற்றும் அத்தை நளினிக்கு போன் பண்ணினேன். எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம். 'உடனே கிளம்பி வா' என்று மூன்று பேரிடமிருந்தும் பதில் வந்தது. இதோ வந்துட்டேன்” - அனுஹாசன் சென்னை வந்துள்ளதை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

anu hasan

''நான் சென்னைக்கு வந்து 10 நாள்களாகிவிட்டது. இனிமேல் இங்கேதான் இருக்கப்போகிறேன். கூடிய விரைவில் நான் நடித்த 'வல்லதேசம்' படம் ரிலீஸாகப்போகிறது. இந்தப் படம் ஒரு நல்ல ரிலீஸ் தேதிக்காகதான் காத்திருக்கிறது. இதில் என்னுடைய கேரக்டர் ரொம்ப வலிமையானது. இந்தப் படத்தில் ஓர் அம்மாவாக நடித்திருக்கிறேன். எதற்காகவும் தன்னுடைய ஒரிஜினாலிட்டியை விட்டுக்கொடுக்காத ஒரு பெண்ணாக நடித்துள்ளேன். இதுவரை நான் நடித்த படங்களில் எனது எல்லா கேரக்டரும் பார்த்திருப்பீங்க. ரொம்ப சமத்து பொண்ணா, அடக்கமான பொண்ணா நடிச்சிருப்பேன். இந்தப் படத்தில் நிறைய ஆக்‌ஷன் சீக்வென்ஸ் செய்திருக்கிறேன். அடிதடி, துப்பாக்கி இதோடு எல்லாம் நடித்தது எனக்கு ஹாப்பியாகயிருந்தது. 

'இந்திரா' படத்துக்குப் பிறகு, இந்தப் படத்தில்தான் நாசர் சார்கூட நடித்திருக்கிறேன். ஒரு ஆர்மி ஆஃபிஸராக இந்தப் படத்தில் நாசர் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் எனக்கும், நாசர் சாருக்கும் இடையில் ஓர் அழகான எமோஷனல் பாண்டிங் இருக்கும். 'இந்திரா' படத்தில் இருந்த அனுஹாசனுக்கும் இந்தப் படத்தில் இருக்கும் அனுஹாசனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். படத்தின் ஷூட்டிங் யுகேவிலும் நடந்தது. பைட் சீக்வென்ஸில் யுகே பைட்டர்ஸ் கூடவும் பைட் பண்ணினேன். இது ரொம்ப பெருமையான ஒரு விஷயமாக கருதுகிறேன். ஒரு பெண் ஆர்ட்டிஸ்ட் யுகே ஃபைட்டர்ஸுடன் அங்கே பைட் பண்ணது பெரிசுதானே! 

anuhassan

ஏற்கெனவே எனக்கு களரி மற்றும் பேஸிக்கான சில ஃபைட் டெக்னிக்ஸ் தெரியும். அதனால் இந்தப் படத்தில் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் செய்யும்போது எளிதாக இருந்தது. எப்போதும் என் உடம்பை நான் பிட்டாகத்தான் வைத்திருப்பேன்'' என்றவரிடம் ’தொடர்ந்து படத்தில் நடிக்கும் எண்ணமுள்ளதா’ என்று கேட்டோம். 

’’கண்டிப்பா. இனி சென்னையில்தான் இருக்கப் போகிறேன். அதனால், தொடர்ந்து நடிப்பேன். நெகட்டிவ் ரோல் செய்வதற்குகூட கேட்டுள்ளார்கள். வல்ல தேசம் படம் ரிலீஸூக்குப் பிறகுதான் எந்த மாதிரியான ரோல் செய்யலாம் என்று முடிவு செய்வேன்'' என்றவர், ’லண்டனில் இருக்கும்போது தமிழ் படங்கள் பார்த்தது உண்டா...’ என்று கேட்டதற்கு, ''எனக்கு சினிமா பார்க்கும் பழக்கமே இல்லை. டிவி நிகழ்ச்சிகள்கூட பார்க்க மாட்டேன். என் சித்தப்பா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் பார்க்கவில்லை. திரும்பவும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி செய்ய கேட்டுள்ளார்கள். ‘காஃபி வித் அனு’ மாதிரி ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியில் உங்களைக் கண்டிப்பாக சந்திப்பேன்'' என்று சிரிக்கிறார் அனுஹாசன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்