’காக்கா முட்டை’ பாய்ஸ் ஆர் பேக்..! | Kaaka muttai boys are back

வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (12/09/2017)

கடைசி தொடர்பு:13:53 (12/09/2017)

’காக்கா முட்டை’ பாய்ஸ் ஆர் பேக்..!

மணிகண்டன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'காக்கா முட்டை'. இந்தப் படத்தில் பெரிய காக்கா முட்டை கதாபாத்திரத்தில் விக்னேஷ் நடித்திருப்பார். பெரிய ஹீரோக்கள் யாரும் இல்லாத இந்தப் படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டினார்கள். இந்தப் படத்துக்கு பிறகு விக்னேஷ், 'அப்பா' படத்தில் சமுத்திரக்கனியின் பையனாக நடித்திருப்பார். தற்போது கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ' அறம்' படத்தில் நடித்திருக்கும் விக்னேஷிடம் பேசினோம்.

kaaka muttai

''காக்கா முட்டை படத்திற்குப் பிறகு 'அறம்' படத்தில் நானும் சின்ன காக்கா முட்டை ரமேஷூம் மீண்டும் சேர்ந்து நடித்திருக்கோம். அவனுக்கு இந்தப் படத்தில் நல்ல ரோல். இந்தப் படத்திலும் நாங்க அண்ணன் - தம்பியாகத்தான் நடித்திருக்கோம். இதற்கு அடுத்து 'கத்திரிக்காய் வெண்டைக்காய்' படத்திலும் நாங்க சேர்ந்து நடிக்கிறோம். 

அறம் படத்தில் நயன்தாராவை பார்த்தவுடன் ஷாக் ஆகிட்டேன். நயன்தாராவின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரிடம் இதுவரை பேசவில்லை. அதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா இருந்தாலே கூட்டத்தில் ஒரு ஆளாக நின்று அவரை பார்த்துக்கொண்டிருப்பேன். அவருடன் இந்தப் படத்தில் நடித்தது ரொம்ப ஹாப்பி’’ என்றார் விக்னேஷ். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்