விஜய் சேதுபதி நடித்திருக்கும் ’கருப்பன்’ படத்துக்கு 'யூ' சான்றிதழ்..! | vijay sethupathi's movie karuppan gets U certificate from censor board

வெளியிடப்பட்ட நேரம்: 11:54 (13/09/2017)

கடைசி தொடர்பு:14:42 (04/07/2018)

விஜய் சேதுபதி நடித்திருக்கும் ’கருப்பன்’ படத்துக்கு 'யூ' சான்றிதழ்..!

’ரேணிகுண்டா’ படத்தின் இயக்குநர் பன்னீர்செல்வம், விஜய் சேதுபதியை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம், ’கருப்பன்’. கிராமத்துக் கதையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். இவர், சசிகுமார் நடித்த ’பலே வெள்ளையத்தேவா’ படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். நீண்ட நாள்களுக்குப் பிறகு நடிகர் பசுபதியும், பாபி சிம்ஹாவும் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளனர். 

ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் டீசர், சில நாள்களுக்கு முன் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. வரும் சரஸ்வதி பூஜைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் 'கருப்பன்' படத்துக்கு சென்சார் போர்ட் 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close