இயக்குநர் நலன் குமரசாமிக்கு நவம்பரில் திருமணம்..! | Nalan kumarasamy to tie the knot soon

வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (13/09/2017)

கடைசி தொடர்பு:16:23 (13/09/2017)

இயக்குநர் நலன் குமரசாமிக்கு நவம்பரில் திருமணம்..!

 நலன் குமரசாமி

‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி மூலம் சினிமாவுக்கு வந்தவர் இயக்குநர் நலன் குமரசாமி. ’சூதுகவ்வும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அடுத்து ’காதலும் கடந்து போகும்’ படத்தை இயக்கினார். இவை தவிர  ’தீயா வேலைசெய்யணும் குமாரு’, ’மாயவன்’ படங்களின் திரைக்கதை உருவாக்கத்திலும் இவரின் பங்கு உண்டு. இவருக்கு விரைவில் திருமணம் நடக்கப்போவதாக நடிகர் கருணாகரன் நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

அந்த ட்வீட் சம்பந்தமாக நடிகர் கருணாகரனை தொடர்புகொண்டு பேசியபோது, “நான் பதிவிட்டிருந்த ட்வீட் உண்மைதான். நலனுக்கும் புதுகோட்டையைச் சேர்ந்த சரண்யாவுக்கும் வருகிற 15-ம் தேதி வெள்ளிக்கிழமை புதுகோட்டையில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. நவம்பர் மாதம் 9-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இது நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான்” என்றார். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close