'சமுத்திரகனியும் கெளதம் மேனனும் ஒன்றாக நடிக்கிறார்கள்' - 'கோலி சோடா 2' அப்டேட்ஸ் சொல்லும் விஜய் மில்டன்

ளிப்பதிவாளராக தன் சினிமா பயணத்தை தொடங்கிய விஜய் மில்டன் 2006 ம் ஆம் ஆண்டு 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பிறகு 'கோலி சோடா', '10 எண்றதுக்குள்ள', 'கடுகு' ஆகிய படங்களை இயக்கியவர் தற்போது 'கோலி சோடா' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் வெளிவந்த இந்தப் படத்தின் டீசர், படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் கௌதம் மேனனின் வாய்ஸ் ஓவரில் அமைக்கப்பட்டு இருந்தது அதற்கு முக்கிய காரணம். ‘கோலிசோடா-2’ அப்டேட்ஸ் பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் விஜய் மில்டனிடம் பேசினேன். 

கோலி சோடா 2

“கோலிசோடா முதல் பாகம் எடுக்கும் முன்பே இந்தக் கதையை எழுதிட்டேன். ஆனால், இந்தக் கதைக்கு பெரிய பசங்க நடிச்சாதான் சரியா இருக்கும். அதனால முதல் பாகத்தில் சின்ன வயசு பசங்களை வெச்சு எடுத்துட்டேன். இது முதல் பாகத்தின் தொடர்ச்சியா இருக்காது. ஆனால், எமோஷன் மட்டும் ஒண்ணா இருக்கும். 'கோலி சோடா'வில் அந்தப் பசங்க எப்படி தங்களோட அடையாளத்தை தேடினாங்களோ, அதேமாதிரி இதிலும் மூன்று இளைஞர்கள் தங்களோட அடையாளத்தைத் தேடுவாங்க. முதல் பாகத்தில் கோயம்பேடு மார்கெட்டுக்குள்ள நடக்குற ஒரு விஷயத்தை சொல்லியிருந்தேன். இதில் மார்க்கெட்டை தாண்டி நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கேன். முதல் பாகத்தைவிட அந்த ஃபீலிங், கோவம் இதில் அதிகமா இருக்கும். படம் 70 சதவிகிதம் முடிஞ்சுது.”

கோலி சோடா

“முதல் பாகத்தில் நடிச்ச அதே பசங்க இதிலும் நடிக்கிறாங்களா?”

“இல்லை. இதில் நடிக்கிறவங்க புதுமுகங்கள். முதல் பாகத்தில் நடிச்ச பசங்க யாருமே  இதில் இல்லை. இந்தக் கதைக்கு 20 வயசை தாண்டிய பசங்களா தேவைப்பட்டாங்க. ஏன்னா படத்துல காதல், சண்டைனு நிறைய காட்சிகள் இருக்கு. அதனாலதான் இந்த மாற்றம். ஆனால் முதல் பாகத்துல நடிச்ச பசங்களை வெச்சு வேறொரு படம் பிளான் பண்ணிட்டு இருக்கேன்.”

விஜய் மில்டன்

“டீசரின் முடிவில் வெள்ளை தாடியுடன் வரும் சமுத்திரகனி, கெளதம்மேனனின் வாய்ஸ் ஓவர்... படத்தில் வேறென்ன சர்ப்ரைஸ்?” 

“ ‘கோலி சோடா'வில் வில்லனுக்கு சமுத்திரகனி சார்தான் டப்பிங் பேசினார். ஆனால் இதில் முக்கியாமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார். அவர் இதுக்கு முன் நடிச்சமாதிரி இந்த கேரக்டர் இருக்காது. படத்தில் பசங்களை கனெக்ட் பண்ற முக்கியமான கதாப்பாத்திரம். அவருக்குனு ஒரு தனிக் கதை இருக்கும். கௌதம் சாரோட வாய்ஸ் தனித்தன்மையா இருக்கும். இதில் அவர் வாய்ஸ் ஓவர் கொடுத்தால் நல்லா இருக்குமேனு தோணுச்சு. போய் கேட்டதும் உடனே ஒத்துக்கொண்டார். அதுக்கு நல்ல ரெஸபான்ஸ் கிடைத்திருக்கிறது. நீங்க கேட்ட சர்ப்ரைஸ்னா, இதில்,  ஒரு முக்கியமான கேரக்டரில் கெளதம் சாரும் நடிக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!