Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“நான் ஐ லவ் யூவே சொல்லாத நவலட்சுமிக்கும் எனக்கும் ஜனவரியில் கெட்டிமேளம்!” - புது மாப்பிள்ளை ரமேஷ் திலக் #VikatanExclusive

Chennai: 

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில், தன் நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருபவர் ரமேஷ் திலக். தற்போது ரஜினியுடன் 'காலா', நயன்தாராவுடன் 'இமைக்கா நொடிகள்', விஜய் சேதுபதியுடன் 'ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்' போன்ற படங்களில் இவர் பிஸியோ பிஸி. 'காலா' பட ஷூட்டிங்கில் இருந்தவரிடம் ஒரு ஸ்வீட் சாட்.

ரமேஷ் திலக்

சின்ன வயதில் இருந்தே நடிப்பதில் ஆர்வம் இருந்ததா? ஆர்ஜே என்ட்ரி எப்படி நடந்தது?

“சின்ன வயசுல இருந்தே இப்படித்தான் ஆகணும்னு எல்லாம் நினைக்கலை. பி.எஸ்.சி முடிச்சிட்டு ஒரு கம்பெனியில எக்ஸிக்யூட்டிவ்வா வேலை செஞ்சேன். அந்த டைம்ல அப்படியே இடையில் படிக்கலாம்னும் ப்ளான் பண்ணி மெட்ராஸ் யுனிவர்சிட்டியில மீடியாவைத் தேர்ந்தெடுத்துப் படிச்சேன். அந்தச் சமயத்துல எங்க பசங்க எல்லோரும் சினிமா சினிமானு ஓடிட்டு இருப்பாங்க. எனக்கு விஷூவல் மீடியாவுல கேமரா முன்னாடி நிக்கக் கொஞ்சம் கூச்சமா இருக்கும். அதனாலதான், ஆர்.ஜே முயற்சி பண்ணேன். சூரியன், ஆஹானு ரெண்டு எஃப்.எம் களில் வேலை கிடைச்சுது. காலையில காலேஜ், ஈவ்னிங் வேலை, நைட் ஆர்ஜேனு ஜாலியா ஓடிட்டு இருந்தேன். அப்படித்தான் நான் ஆர்ஜே ஆனேன்.’’

ஆர்ஜே டு சினிமா பயணம் எப்படி இருக்கு? 

’’நான் மீடியா படிச்சதுனால என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் ஏதோ ஒரு மீடியாவுல எடிட்டிங், கேமரா வொர்க்னு வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. அப்போ என் நண்பர் சவுண்ட் இன்ஜினீயர் டாம்னிக்தான் நலன் குமரசாமியை அறிமுகப்படுத்தி வெச்சார். அப்போதான் ஷார்ட் ஃபிலிம் எடுக்கிறது பீக்ல இருந்துச்சு. அவரோட 'தோட்டா விலை என்ன' படத்துல ஒரு முக்கியமான ரோல் கொடுத்தார் நலன். அதைப் பார்த்துட்டு, சினிமாத் துறை சார்ந்தவங்க நிறையப் பேர் எனக்கு போன் பண்ணிப் பேசுனாங்க. அப்பதான் ஓகே நமக்கு இது வருது, இதையே தொடர்ந்து செஞ்சா என்னனு பண்ண ஆரம்பிச்சேன். நேத்து ரேடியோ இன்னிக்கு சினிமா நாளைக்கு எப்படி வேணாலும் மாறலாம். இப்ப இப்படி இருக்கறதை வாழ்க்கையின் ஒரு பகுதியாகத்தான் நான் பார்க்குறேன்.’’

தீவிர ரஜினி ரசிகரான நீங்க முதன்முதலில் ரஜினியைப் பார்த்தபோது எப்படி உணர்ந்தீங்க?

’’நான்தான் ரஞ்சித் சார்கிட்ட 'கபாலி' படத்துல ஒரு ரோல் கேட்டேன். ரஜினி சார் இருக்க ஃப்ரேமில் ஒரு ஓரத்துல நான் வந்தாப் போதும்னு சொன்னேன். கேட்டதுபோல் கபாலியில் ஒரு சின்ன சீனில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார் ரஞ்சித். ரெண்டு பேரும் ஒரே ஃப்ரேமில் இருந்தது மறக்கவே முடியாது. அவர் என்னை 'ஹே... காக்கா முட்டை'னு கூப்பிட்ட உடனே அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு. ஒரு நிமிஷம் என்ன பண்றதுனே தெரியலை.

ஆனா, 'காலா' படத்துக்கு ரஞ்சித் போன் பண்ணி என்னை நடிக்கச் சொன்னார். இதுல 'கபாலி' மாதிரி இல்லாம ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறேன். இப்போ கூட அவரோட ஒரு ஷாட்டை முடிச்சுட்டுத்தான் உங்ககிட்டப் பேசுறேன் ப்ரதர். ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்று புன்னகைத்தபடியே சொன்னார்.

ரமேஷ் திலக்

நயன்தாராவுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

''இமைக்கா நொடிகள்' ஷூட் பெங்களூரில் நடந்துச்சு. அவங்க ரொம்ப ப்ரொஃபஷனல் பாஸ். அடுத்து என்ன அடுத்து என்னனு போய்கிட்டே இருப்பாங்க. பயங்கர சின்சியராக இருப்பாங்க. அவங்க இருந்தாலே வேலை வேகமா நடக்கும். யூனிட்டே சுறுசுறுப்பா இருக்கும்னா பாத்துக்கோங்க’’.

நலன், விஜய் சேதுபதி, அல்போன்ஸ் புத்திரன்னு உங்க ஃப்ரெண்ட்ஷிப் பத்தி சொல்லுங்க ப்ரோ...

’’அவங்க எல்லோருமே என் நலம்விரும்பிகள். என்னைவிட வயசுல பெரியவங்க. அவங்க எல்லோரும் சினிமாதான் எல்லாமேனு இருந்தவங்க. நலன் என் குரு மாதிரி. எனக்கு எதாச்சும் குழப்பம் இருந்தாலோ மனசு சரியில்லைனாலோ இவர்கிட்டதான் பேசுவேன். ஆனா, இனி நான் ஒரு படத்துல நடிச்சு அந்த படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனாலும், 'சூது கவ்வும்' படத்துல கிடைச்ச சந்தோஷம் மாதிரி இருக்காது. அது என் முதல் வெற்றி. அதுல கிடைச்ச சந்தோஷம் வேற லெவல் ப்ரதர்.’’

ஆரம்பத்துல உங்க கேரக்டர் எல்லாப் படங்களையும் ஒரே மாதிரி இருந்துச்சே... 

’’ஆமா ப்ரதர். ஆரம்பத்துல வர படங்கள் எல்லாமே கையில பாட்டிலோட குடிகாரன் கெட்டப்லதான் இருக்கும். எனக்கே போகப்போக ஒரே மாதிரி பண்றோமானு தோண ஆரம்பிச்சிருச்சு. அப்புறம்தான் கதையைத் தேர்தெடுத்து நடிக்க ஆரம்பிச்சேன். அதே கேரக்டரில் வந்த 17 படங்களைத் தவிர்த்து இருக்கேன். இப்போ நான் பண்ற படங்கள் அதிகமா அந்த மாதிரியான ரோல் இருக்காது.’’

ஆர்.ஜேவா சினிமாவானு கேட்டா எதைச் சொல்லுவீங்க?

’’கண்டிப்பா சினிமாதான். ஏனா, நான் ஆர்ஜேவா 10 வருஷம் இருந்திருக்கேன். ஆனா, நான் ஒரு ஆர்.ஜேவா என்கிற டவுட் எனக்கு இன்னும் இருக்கு. என் ஷோ மக்களுக்குத் தெரியுமானு தெரியலை. ஆனா, சினிமாவை ரொம்பப் பிடிச்சிருக்கு. என்னை யோசிக்க வைக்குது, நிறையப் பொறுப்புகளைக் கொடுக்குது. எல்லாத்தையும் விட, சினிமாதான் என்னை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்திருக்கு. சோ, சினிமாதான் என் சாய்ஸ்.’’

திலக்

என்னென்ன படங்கள் கைவசம் இருக்கு?

’’பீச்சுவாகத்தி', '12.12.1950', 'இமைக்கா நொடிகள்', 'ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்' படத்துல சேது அண்ணா அப்புறம் கெளதம் கார்த்திக் கூட நடிக்கிறேன். தலைவரோட 'காலா', ஜெயம்ரவி சாரோட 'டிக் டிக் டிக்'. உடல் உழைப்பைப் போட்டு நான் நடிச்சது இந்தப் படத்துலதான்.''

உங்க லவ் ஸ்டோரி பத்தி சொல்லுங்க ப்ரோ... கல்யாணம் எப்போ?

''நானும் நவலட்சுமியும் சூரியன் எஃப்.எம்ல ஒன்னாதான் வேலை செஞ்சோம். ஆர்.ஜேயிங்ல இவங்களைவிட நாலு வருஷம் ஆஃபீஸ்ல சீனியர். அப்படித்தான் எங்களுக்கான பழக்கம் ஏற்பட்டுச்சு. ரெண்டு பேருமே நல்ல ஃப்ரெண்ட்ஸாகத்தான் இருந்தோம் . இந்த 'ஐ லவ் யூ' மாதிரியான டெம்ளேட் வார்த்தைகளை நாங்க பயன்படுத்தவே இல்லை. நேரா கல்யாணப் பேச்சுதான். எனக்கு சர்ப்ரைஸ் பண்றதுன்னா அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படிதான் ஒரு முறை நைட் 12 மணிக்கு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் எனக்குத் தெரியாம வரவழைச்சி இன்ப அதிர்ச்சி கொடுத்தாங்க. விஜய் சேதுபதி அண்ணாவும் அப்போ வந்தார். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ரெண்டு பேருமே அவங்கவங்க வீட்ல சொல்லிட்டோம். அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க. இப்போ எங்க கல்யாண வேலைகள் தீவிரமா நடந்திட்டு இருக்கு. ஜனவரியில் கெட்டி மேளம்தான்.’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement