வெளியிடப்பட்ட நேரம்: 10:13 (26/09/2017)

கடைசி தொடர்பு:14:35 (04/07/2018)

“ஷக்தியும், காயத்ரியும் எங்களைப் பிரிச்சிட்டாங்க!’’ - அனுபவம் பகிரும் ‘மிஸஸ் சின்னத்திரை’ நாயகிகள்

பிக் பாஸ்' வெற்றியைத் தொடர்ந்து விஜய் டி.வியின் அடுத்த அதிரடி, 'மிஸஸ் சின்னத்திரை.'  சின்னத்திரையில் பிரபலமாக மின்னிக்கொண்டிருக்கும் நடிகைகள் கலக்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு நேற்று வெளியானது. இது முழுக்க முழுக்க சின்னத்திரையில் ஜொலிக்கும் திருமதிகளுக்கான அழகுப் போட்டி. அழகோடு சேர்த்து, அவர்களின் தனித்திறமைகளின் வெளிப்பாட்டைப் பொறுத்து வெற்றி வாகை சூட்டப்படும். இதில் வெற்றிபெறுவர்களுக்கு லட்சக்கணக்கில் பரிசும் வழங்கப்பட இருக்கிறது. அவர்களின் திறமைக்கேற்ற மதிப்பெண்களை நடுவர்கள் வழங்குவார்கள். 'பிக் பாஸ்' போலவே இந்த நிகழ்ச்சியிலும் நேயர்களின் ஓட்டு முக்கியமானதாக இருக்கும். 

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகைகள் சிலர் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ம.கா.பா ஆனந்த் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். மொத்தம் 10 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து வழிநடத்தும் பொறுப்பு 'பிக் பாஸ்' ஷக்திக்கும், காயத்ரிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சில சின்னத்திரை நடிகைகளிடம் நிகழ்ச்சியின் அனுபவம் பற்றி கேட்டோம். 

சிந்து ஷியாம் (தெய்வ மகள்') :

 

சிந்து ஷியாம்

''நான் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பது பலருக்கும் தெரியாது. ஆனால், இந்த நிகழ்ச்சிமூலமா என்கிட்ட இவ்வளவு திறமை இருக்கானு நிச்சயம் நீங்க பிரமிப்பீங்க. இதில், என்னோடு போட்டி போடும் எல்லாருமே என் தோழிகள்தான். அதனால், ஈஸியா செட் ஆகிடுச்சு. இவ்வளவு நாள் சீரியல்களில் அந்தக் கதாபாத்திரங்களின் முகங்களாகவே பார்த்த நீங்க, இனிமே என் உண்மையான முகத்தைப் பார்க்கப்போறீங்க. எப்படியும் ஜெயிச்சு டைட்டில் வின் பண்ணும் ஆசை எல்லாரையும் மாதிரி எனக்கும் இருக்கு. கீப் வாட்சிங்... கீப் சப்போர்டிங்.'' 

வனிதா ஹரிஹரன் (தலையணைப் பூக்கள்) :

 

வனிதா ஹரிஹரன்

''நான் இந்த நிகழ்ச்சிக்குள்ளே நுழைஞ்சதுமே சகப் போட்டியாளர்கள் எல்லாரும் 'உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?'னு ஆச்சரியமா கேட்டாங்க. எனக்குத் திருமணமாகி மூணு மாசம்தான் ஆகுது. இந்த மாதிரி ரியாலிட்டி ஷோவில் ஃபர்ஸ்ட் டைம் கலந்துக்குறேன். அங்கே இருக்கும் எல்லாருமே எனக்கு முன்னாடியே தெரிஞ்சவங்கதான். அதனால், ஜாலியாப் போட்டி போடலாம். எனக்கு டான்ஸ், பாட்டு சுத்தமா வராது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்காக புதுசா டிரை பண்ணப்போறேன். எனக்கு என் ஃபேமிலி ஃபுல் சப்போர்ட். என்னால் முடிஞ்ச அளவுக்கு திறமையை வெளிப்படுத்துவேன்.'' 

ஶ்ரீவித்யா (கல்யாணப் பரிசு) :

 

ஶ்ரீவித்யா

“ ‘கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' நாடகத்துக்கு அப்புறம் விஜய் டி.வியில் எட்டு வருஷம் கழிச்சு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கேன். அதனால், ரொம்பவே ஹேப்பியா இந்த ஷோக்குள்ளே நுழைஞ்சேன். போட்டிப் போடும் பாதி பேர் என்னோடு ஏற்கெனவே நடிச்சிருக்காங்க. மீதி பேருடன் இனிமேதான் பழகணும். இந்த ஷோ முழுக்க முழுக்க திருமணமானவங்களுக்கான நிகழ்ச்சி. ஆனால், திருமணமானவங்களுக்கு தெரிஞ்சு இருக்கிற சமையல் எனக்குச் சுத்தமா தெரியாது. இந்த நிகழ்ச்சிக்காக, இப்போதான் சமைக்க ஆரம்பிச்சிருக்கேன். இந்த நிகழ்ச்சியில எங்களுக்கு வழிகாட்டியா பிக்பாஸ் ஷக்தியும், காயத்ரியும் வருவாங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை. நாங்க பத்து பேரும் ஒண்ணாதான் டிராவல் பண்ணப்போறோம்னு நினைச்சோம். திடீர்னு ஷக்தியும் காயத்ரியும் ரெண்டு குழுவா பிரிச்சதும் ரொம்பவே ஷாக்கிங்கா இருந்துச்சு. இந்த நிகழ்ச்சிக்காக வித்தியாசமா ஒரு திறமையை வெளிப்படுத்த திட்டம் போட்டிருக்கேன். அது என்னனு ஷோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க. ஹார்டு வொர்க் பண்ணி, டைட்டில் வின் பண்ணுவேன்.''

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்