“வீடியோ மூலமா கதை சொல்லப் போறேன்!” - கஸ்தூரியின் புது முயற்சி

கஸ்தூரி

ந்த ஒரு விஷயத்திலும் தன்னை, தனித்துக் காட்டுபவர் நடிகை கஸ்தூரி. கடந்த விநாயகர் சதுர்த்தியிலிருந்து தன் ட்விட்டர் பக்கத்தில் புராணக் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தவர், தற்போது ஒவ்வொரு நாளும் நவராத்திரி கதைகளை 'கீப் தி கல்ச்சர் கமிங்' (keep the culture coming) என்கிற பெயரில் தன் ட்விட்டர் பக்கத்தில் ஐந்து நிமிட வீடியோக்களாகப் பதிந்து வருகிறார். இதுகுறித்து அவரிடம் பேசியபோது... 

“சின்ன வயசுல பாட்டியிடம் நிறைய கதைகள் கேட்டு வளர்ந்தவள் நான். அந்தக் கதைகள் நிறைய கற்பனை செய்யவைக்கும், நிறைய கேள்விகளை எழுப்பும். அறிவுப்பூர்வமான பல விஷயங்களும் அவற்றில் இருக்கும். ஆனால், இப்போதைய குழந்தைகளுக்கு டி.வி, கேம் ஷோ, கதைகள் என்றால், 'ஹாரி பாட்டர்', 'கேம் ஆஃப் த்ரோன்' போன்றவையே பரிட்சயமா இருக்கு. நம் கலாசாரத்தில் கொட்டிகிடக்கும் அழகழகான கதைகள் அவங்களிடம் போய்சேரணும்னு நினைச்சேன். அப்படி ஆரம்பிச்சதுதான், 'keep the culture coming'. என் அப்பா, அம்மா ரெண்டு பேரும் இறந்து சில வருஷங்கள் ஆயிடுச்சு. அமெரிக்காவில் இருக்கும் என் மாமனார், மாமியாருக்கும் கதை சொல்லும் சூழல் அமையறதில்லே. அதனால், என் குழந்தைகளும் கதைகளைப் பற்றி தெரிஞ்சுக்காமலே வளர்ந்துடுவாங்களோ என்கிற பயம் இருந்துட்டே இருக்கு. அந்த எண்ணமும் இந்த மாதிரி வீடியோவில் கதை சொல்லத் தூண்டிச்சுன்னு சொல்லலாம். 

கஸ்தூரி

நாங்கள் இந்தியா வந்ததற்கு முக்கியக் காரணம், என் பொண்ணும் பையனும்தான். என் பொண்ணுக்குப் பரதநாட்டியம்னா உயிர். கிளாஸிகல் டான்ஸைக் கத்துக்கணும் இவ்வளவு நாளா இங்கே இருந்தபடி பிராக்டீஸ் பண்ணியிருக்கோம். இந்த நவராத்திரியில் அவளுக்கு டான்ஸ் ஆடணும்னு ஆசை. என் மகன் வெள்ளைக்காரனாகவே வளர்ந்துட்டான். அவனுக்குத் தமிழ் மரபு, கலாசாரம் போன்றவை தெரியாமலேயே போயிடுமோனு கவலை வந்துச்சு. அதை மாற்றவும் பல விஷயங்களை சொல்லிக் கொடுத்துட்டிருக்கேன். அதில், இந்த நவராத்திரி தினமும் ஒன்று. ஒவ்வொரு பிள்ளையார் சதுர்த்தியிலும் அமெரிக்காவில்தான் இருப்போம். இந்த வருஷம்தான் எல்லா கமிட்மென்களையும் ஒதுக்கிவெச்சுட்டு சென்னைக்கு வந்துட்டோம்'' என்று ஆச்சரியப்படுத்தி தொடர்கிறார். 

கஸ்தூரி

கதை படிக்காத பசங்களுக்கு எப்படி பஞ்சதந்திரக் கதைகளைச் சொல்லிக்கொடுத்தோமோ, அதேமாதிரி என் பையனுக்கும் கதை சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். இப்போ, பலரும் அடுத்த கதையை எப்போ சொல்வீங்கன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. சில குழந்தைகளே வீடியோவைப் பார்த்துட்டு பெரியவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. குழந்தைகளுக்கு ஈஸியாக புரிகிற மாதிரி குட்டிக் குட்டி தகவல்களையும் அதில் சேர்த்து சொல்றேன். இந்த ஐந்து நிமிடத்தில் என் பொண்ணும் பையனும் என்கிட்ட சில சந்தேகங்களை கேட்பாங்க. அதற்கும் எளிமையான முறையில் பதில் சொல்ற மாதிரி இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கு. 'இந்த வருஷம் எங்கள் வீட்டிலும் கொலு வெச்சிருக்கோம். இந்த வருஷம் நான் பார்த்த கொலுவில் என்னை ரொம்பவும் கவர்ந்தது, என் சித்தி வீட்டு கொலு. ஒரு கிராமத்தை முழுமையாக தங்கள் கொலுவில் காண்பிச்சு இருந்தாங்க. கடந்த சனிக்கிழமையிலிருந்து என் ஃபிரெண்ட்ஸ் வீடு, உறவுக்காரங்க வீடுகளுக்குப் போய் சுண்டல் கலெக்‌ஷனையும் பண்ணிட்டிருக்கோம்'' என்று சிரிக்கிறார் கஸ்தூரி.

....

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!