நயன்தாரா நடிக்கும் சைகலாஜிகல் த்ரில்லர் படம்! - இயக்குநர் அறிவழகன் சர்ப்ரைஸ்!

'குற்றம் 23' படத்துக்குப் பிறகு நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்குகிறார் அறிவழகன். இந்தப் படம் பற்றிய கூடுதல் விவரங்களை அவரிடம் கேட்டேன். 

நயன்தாரா

"ஆமாம் பிரதர். படம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு. நயன்தாராதான் பண்றாங்க. சைகலாஜிகல் த்ரில்லர். சில கதைகள் ஹீரோவை வெச்சு சொன்னா நல்லாயிருக்கும், சில கதைகள் ஹீரோயின் வெச்சு சொன்னாதான் நல்லாயிருக்கும். அந்த மாதிரி ஒரு கதை. `ஈரம்'க்குப் பிறகு கம்ப்ளீட்டா பெண்ணை மையப்படுத்தின கதை பண்ணிருக்கேன். ஷூட்டிங் டேட் இன்னும் முடிவாகல. ஏறக்குறைய டிசம்பர் அல்லது ஜனவரியில் தொடங்கும். அதுக்கு முன்னால ஸ்க்ரிப்ட் ரைட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கு. விஷுவல் எஃபக்ட்ஸுக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆடியன்ஸுக்கு இது ரொம்ப புது அனுபவமா இருக்கும். படத்தின் இன்னொரு ஜானர் ஃபர்ஸ்ட் லுக்லயும், டீசர்லயும் தெரியப்படுத்தலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். இப்போதைக்கு இசையமைப்பாளர் தமன் மட்டும் முடிவாகியிருக்கார். மற்ற எதுவும் முடிவாகலை".

"கதை கேட்டுட்டு நயன்தாரா என்ன சொன்னாங்க?"

Nayanthara

"அவங்களுக்கு கதை ரொம்பப் பிடிச்சது. எப்படிக் கதையை நம்புறாங்களோ, அதேமாதிரி என் முந்தைய படங்களால் ஓர் இயக்குநரா என் மீதும் நம்பிக்கை வெச்சிருக்காங்க. கதைசொல்லி முடிச்சதும், நான் இந்த ஹேர்ஸ்டைல் பண்ணிக்கட்டுமா, இந்த காஸ்ட்யூம் சரியா இருக்குமான்னு ஆர்வமா கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்த அளவுக்கு ஆர்வம், ஈடுபாடு உள்ள நடிகை.”

"முதலில் மஞ்சு வாரியர்க்கு பண்ணின கதையில்தான் நயன்தாரா நடிக்கறதா சொல்றாங்களே?"

"அது உண்மை கிடையாது. நான் மஞ்சு வாரியருக்கு பண்ணின கதை வேறு, அது ஒரு ஃபேமிலி த்ரில்லர் சப்ஜெக்ட். நயன்தாராவை நடிக்க வைக்கப்போறது வேறு கதை.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!