விஷால் முதல் விஷ்ணுவர்தன் வரை... முன்னாள் மாணவர்களால் களை கட்டவிருக்கும் லயோலா! #loyolaalumni

சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அது சிறப்பான நிகழ்ச்சியாகத் தொடங்கவிருக்கிறது.

சென்னையின் முக்கியமான கல்லூரிகளில் ஒன்றான, நூற்றாண்டு விழாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிற கல்லூரி, லயோலா. இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் 52 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களைக் கொண்டது. உலகிலேயே சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கல்லூரி, தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கும் கல்லூரி... எனப் பல சிறப்புகளைப் பெற்ற லயோலா கல்லூரியில் படித்தவர்கள் பலர் அரசியல், சினிமா, ஊடகம், விளையாட்டு எனப் பல்வேறு துறைகளில் பிரபலங்களாக ஜொலிக்கிறார்கள்.

Loyola alumni

வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த முன்னாள் மாணவர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் லயோலா கல்லூரியில் படித்து திரைப்படத் துறையில் நடிகர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் எனப் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறார்கள். 

நடிகர்கள் ஜெயம்ரவி, விஷால், காளிதாஸ் ஜெயராம், இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், புஷ்கர் - காயத்ரி, கிருத்திகா உதயநிதி, ஒளிப்பதிவாளர்கள் செளந்தர்ராஜன், ரிச்சர்ட், எடிட்டர்கள் ரூபன், கெவின் மற்றும் புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம், ஃபேஷன் டிசைனர் சிட்னி ஸ்லேடன், நிகழ்ச்சித் தொகுப்பாளர்/நடிகர் ஜெகன்... எனத் தமிழ்சினிமாவின் முக்கிய முகங்கள் அனைவரும் இந்த லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இம்மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் லிங்குசாமி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, மாநாட்டில் விதவிதமான கலைநிகழ்ச்சிகளும், விவாதங்களும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திரைப்படப் பின்ணனிப் பாடகரான கெளசிக் கிருஷ்ணன், 'ஜம்ப் கட்ஸ்' ஹரி பாஸ்கி, 'சூப்பர் சிங்கர்' டீம், 'லயோலா ட்ரீம் டீம்' ஆகியோரது சிறப்பு நிகழ்ச்சிகளும் இந்த முன்னாள் மாணவர்கள் மாநாட்டில் நடைபெறும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!