லயோலா முன்னாள் மாணவர் மாநாட்டில் பங்கெடுக்கும் பிரபலங்கள் யார்யார்? #LoyolaAlumni

இன்று மாலை 5:30 மணிக்குத் தொடங்குகிறது, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மாநாடு. இம்மாநாட்டில் திரைப் பிரபலங்கள் பலர் கலந்துகொள்வதோடு, சின்னத்திரை நடிகர், நடிகைகள், குறும்பட, ஆவணப்பட, விளம்பரப் பட இயக்குநர்கள் எனப் பலரும் பங்கேற்கிறார்கள்.

லயோலா

விஜய் டிவியின் கன்டென்ட் ஹெட்  பிரதீப் மில்ராய் பீட்டர், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின்  கிரியேடிவ் ஹெட் ஆண்ட்ரூ, 'லைஃப் ஆஃப் பை', 'தி ஜங்கிள் புக்' படங்களில் பணிபுரிந்த சுரேஷ் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் கார்த்திக், ஆடை வடிவமைப்பாளர் அனுவர்தன், நடிகர் ஜான் விஜய், விளம்பரப் பட இயக்குநர்கள் சொக்கா, சுஜித், கார்த்திக் ஐயர், 'தெய்வமகள்' வனிதா ஹரி, நடிகர் லல்லு, நிர்மலா, சோமீதரன், இயக்குநர் அஹமத், யுவராஜ் தயாளன், நடிகர் 'மெட்ரோ' சிரிஷ், குருசோமசுந்தரம், மற்றும் 'மீசைய முறுக்கு' படக்குழுவினரும் கலந்துகொள்கிறார்கள்.

மிகப்பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சியை 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' டேனியல் தொகுத்து வழங்குகிறார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்களால் கலைகட்டவிருக்கிறது லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மாநாடு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!