`மெர்சல்’ படத்தின் ட்ரெய்லர் வருமா..? - படக்குழுவினரின் பதில்!

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா எனப் பல நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு ரிலீஸாகயிருக்கிறது மெர்சல். 'தெறி' படத்துக்குப் பிறகு, 'மெர்சல்' மூலம் இரண்டாவது முறையாக விஜயை இயக்கியிருக்கிறார், இயக்குநர் அட்லி. 

மெர்சல் ட்ரெய்லர்

’உதயா', 'அழகிய தமிழ் மகன்' படங்களுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. மெர்சல்' படத்தின் டீசர் வெளியாகி செம ட்ரெண்ட் அடித்ததால், ட்ரெய்லர் ரிலீஸை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில் படத்துக்கான இரண்டு புரொமோ வீடியோக்களை மட்டும் படக்குழு வெளியிட்டிருந்தது. 

அந்த இரண்டு புரொமோக்களையும் ஹிட்டாக்கிய விஜய் ரசிகர்கள், ’ட்ரெய்லர் எங்க பாஸ்...’ என வெறித்தனமான வெயிட்டிங்கில் இருக்கின்றனர். இதற்கிடையில், ’மெர்சல் படத்தின் ட்ரெய்லர் வராது’ எனச் சில தகவல்கள் வருகின்றன. அதை உறுதிசெய்ய படக்குழுவினரைத் தொடர்பு கொண்டபோது, ‘’ட்ரெய்லரை ரிலீஸ் செய்யும் ப்ளானே இல்லை. மேலும் ஒரு ப்ரொமோ வீடியோ மட்டும் வெளியிட ப்ளான் செய்திருக்கிறோம். அதுவும் உறுதியாக வரும் எனச் சொல்ல முடியாது’’ என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!