சிவகார்த்திகேயன் வெளியிட்ட ’ஒரு பக்க கதை’ படத்தின் சிங்கிள் ட்ராக்..! | Oru pakka kathai movie single track released

வெளியிடப்பட்ட நேரம்: 18:39 (11/10/2017)

கடைசி தொடர்பு:10:02 (12/10/2017)

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ’ஒரு பக்க கதை’ படத்தின் சிங்கிள் ட்ராக்..!

ஒரு பக்க கதை

’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இரண்டாவதாக இயக்கியுள்ள திரைப்படம் ’ஒரு பக்க கதை’. நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக கமிட்டான முதல் படம் இதுதான். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். இவர் கெளதம் மேனன் இயக்கத்தில் ’எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். 

இந்தப் படம் ரிலீஸுக்கு ரெடியாகி பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது இதன் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டுள்ளனர். கோவிந்த் மேனன் இசையில் கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் எழுத ஷான் ரோல்டன் மற்றும் ஆனந்தி பாடியிருக்கும் ’தானாய்’ பாடலைத் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 


டிரெண்டிங் @ விகடன்