சிம்பு இசையில் சந்தானம் நடித்திருக்கும் ’சக்கபோடு போடு ராஜா’ பட ட்ரெய்லர்..! | Sakka Podu Podu Raja trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (14/10/2017)

கடைசி தொடர்பு:12:35 (14/10/2017)

சிம்பு இசையில் சந்தானம் நடித்திருக்கும் ’சக்கபோடு போடு ராஜா’ பட ட்ரெய்லர்..!

சக்கபோடு போடு ராஜா ட்ரெய்லர்

சந்தானம், வைபவி நடிக்க சேதுராமன் இயக்கும் திரைப்படம், ’சக்கபோடு போடு ராஜா.’ வி.டி.வி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க முதல் முறையாக சிம்பு இசையமைக்கிறார். இசையமைப்பாளராக சிம்பு அறிமுகமாகும் படம் என்பதால், அதன் அறிவிப்பு வந்ததிலிருந்தே பாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

சமீபத்தில்தான் இந்தப் படத்தின் ’கலக்கு மச்சான்’ பாடல், சிங்கிள் ட்ராக்காக வெளியிடப்பட்டது. சிம்பு மற்றும் ரோகேஷ் எழுத அனிருத் பாடியிருந்த ’கலக்கு மச்சான்’ பாடல், ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் அண்ட் ஷேர்களைப் பெற்றது. அதன் பிறகு ’காதல் தேவதை’ பாடலின் டீசரை வெளியிட்டிருந்தது படக்குழு. அந்தப் பாடலை வைரமுத்து எழுத யுவன்ஷங்கர் ராஜா பாடியிருந்தார். தற்போது இந்தப் படத்தில் ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close