Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’’கார்த்திக்கு இருந்த வித்யா கர்வம் அவர் பையன் கெளதம் கார்த்திக்கு இல்லை..!’’ - ’இந்தரஜித்’ விழாவில் தாணு

நடிகர் கெளதம் கார்த்திக்கு இந்த வருடத்தில் நான்கு படங்கள் வெளியாகி ஐந்தாவது படமும் வெளியாகவிருக்கிறது. அதற்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தை 'சக்கரகட்டி' படத்தை இயக்கிய கலாபிரபு இயக்கியுள்ளார். இவர் பிரபல தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ். தாணுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத்திடம் உதவி இசையமைப்பாளராக இருந்த கிருஷ்ண பிரசாத் முதன்முதலாக இசையமைத்துள்ளார். படத்தொகுப்பாளராக கணேஷ் பாபுவும் , ஒளிப்பதிவாளராக பாடலாசிரியர் அறிவுமதிவின் மகன் ராசாமதியும் பணியாற்றி உள்ளனர். கதாநாயகியாக அஷ்ரிதா ஷெட்டி நடித்துள்ளார். இந்த விழாவின் முதல் நிகழ்வாக படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஒரு பாடலும் திரையிடப்பட்டது. படக்குழுவும் சிறப்பு விருந்தினரான இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத்தும் மேடைக்கு அழைக்கப்பட்டு ஒவ்வொருவராகப் படத்தைப் பற்றி பேசினர். 

இந்திரஜித்  

முதலில் பேசிய தேவி ஶ்ரீபிரசாத், 'ரொம்ப சந்தோஷமா இருக்கு. கே.பி (கிருஷ்ண பிரசாத்) என் சொந்தத் தம்பி மாதிரி. ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம்.  அப்போ நான் கீ போர்ட் ப்ளே பண்ணும்போது என்கிட்ட மியூசிக் பத்தி ரொம்ப ஆர்வமா கேட்பான். இப்போ அவன் ஒரு படத்துக்கு இசையமைக்குற அளவுக்கு வளர்ந்து அந்தப் படத்தை தாணு சார் தயாரிக்கிறார்னு நினைக்கும்போது ரொம்ப ஹாப்பி. என் பாட்டு ஹிட் ஆச்சுனா அதுல கண்டிப்பா கே.பி யின் பங்கு இருக்கும். உன் கூட எப்பவும் நாங்க இருப்போம் கே.பி. உன் மியூசிக்ல பாட ஒரு வாய்ப்பு இருந்தா கொடு நான் பாடுறேன்' என்றார்.

எம்.எஸ்.பாஸ்கர் பேசுகையில், ' எங்க அண்ணன் தாணுதான் எனக்கு ராமர். அவர் புள்ள கலாபிரபு படத்தை ரசிச்சு ரசிச்சு செதுக்கியிருக்கார். ஜாலியா பேசிட்டே அவருக்குத் தேவையானதை வாங்கிடுவார். படம் அருமையா வந்திருக்கு' என்றபடி முடித்தார். 

'முதல் முறை மேடையில் நிக்குறேன். அதுக்கு தேவி அண்ணாதான் காரணம். அதேபோல படத்துல எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தாங்க. அவர் தம்பி மாதிரிதான் என்னை நடத்தினார். அந்த அளவிற்கு ஆதரவா இருந்தார். ஹீரோ ஃபுல் எஃபோர்ட் போட்டுருக்கார். படம் பார்த்துட்டு எப்படி இருக்குனு நீங்கதான் சொல்லணும்' என்று எமோஷனோடு பேசினார் அறிமுக இசையமைப்பாளர் கிருஷ்ண பிரசாத்.

அடுத்ததாகப் பேசிய கெளதம் கார்த்திக், 'முதலில் இந்த படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்துக்கு நன்றி. உண்மையாகவே நிறைய அனுபவம் கிடைச்சுது. ஸ்டன்ட் மாஸ்டர்ஸ் என்னை அவ்ளோ அன்பா பார்த்துகிட்டாங்க. கடைசி வரை கே.பி யாருனு சொல்லவே இல்லை. ஒரு வேளை கலாபிரபு தான் கே.பி.னு சுருக்கமா சொல்றாங்களோனு நினைச்சேன்' என்று கூறினார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் ராசாமதி, ' எனக்கு கலாபிரபுவை பன்னிரண்டு வருஷமா தெரியும். அவனுக்கு வீடு, சினிமாதான் தெரியும். நிறைய கனவோடு இருப்பான். அவனுக்கு இந்தப் படத்தில் எல்லோருடைய பாராட்டும் கிடைக்கும்னு உறுதியா நம்புறேன்' என்றார். 
  

இசை 

அடுத்து பேசிய நடன இயக்குநர் ஷோபி, 'கலாபிரபு எனக்குச் சகோதரன் மாதிரி. 'சக்கரக்கட்டி' படத்துக்கும் இந்தப் படத்துக்கும் அவ்ளோ வித்தியாசம். தாணு சார் நான் பாட்டுக்கு என்ன கேட்டாலும் செஞ்சு கொடுக்கும் மனசுடையவர். கெளதம் எப்பவும் முழு எனர்ஜியுடனே இருப்பார். அவரோட க்ராஃப் இப்படியே தொடரணும்னு வேண்டிக்கிறேன்' என்றார்.

பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து பேசும்பொழுது, 'பிரபுவுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும். இந்தப் படத்தில் நான் நாலு பாடல் எழுதியிருக்கேன். ஒரு பாடலாசிரியருக்கே மியூசிக் டைரக்டர் யாருனு சொல்லவே இல்லை. நான் ஒரு வேலை கலைப்புலியைத்தான் சுருக்கமா கே.பினு சொல்றாங்களோனு எல்லாம் நினைச்சேன். இந்தப் படத்துக்குப் பிறகு முக்கியமான இசையமைப்பாளர்களில் கே.பி. நிச்சயம் இருப்பார்னு நம்பிக்கை இருக்கு. அனைவருக்கும் நன்றி' என்றபடி விடைபெற்றார். 

'இவன் டைரக்டர் ஆகுறேன்னு சொன்னபோது என் குடும்பத்துல இன்னொருத்தர் சினிமாவுக்கு போறது தேவையானு நினைச்சேன். அப்புறம் இவனோட ஈடுபாடை பார்த்துட்டு ஓகே சொல்லிட்டேன். இந்தப் படத்தைப் பத்தி என்கிட்ட சொல்லும்போது, 'கெளதமோட அப்பா கார்த்தியை வச்சு படம் பண்ணமுடியாம நான் மிஸ் பண்ணிட்டேன். நீ மிஸ் பண்ணிடாத' னு சொன்னேன். ராசாமதி சாதாரண கேமராவுலயே வித்தை காமிக்கிறார். தேவி ஶ்ரீ பிரசாத்தையும் ஷோபியையும் வெச்சு படம் பண்ணணும்னு நினைச்சேன் தேதி கிடைக்கலை. 'அப்பாவுக்கு வித்யா கர்வம் இருக்கலாம். ஆனால், அது கெளதம் கார்த்திக்கு இல்லை. கே.பி. அருமையா இசையமைச்சிருக்கார். 'செம்பருத்தி' பாடலுக்கு நிச்சயம் விருது கிடைக்கும்னு நம்புறேன். என் பையனு நான் சொல்லலை. உண்மையில் கடுமையான உழைப்பாளி. இது பட்ஜெட் கம்மியா இருக்கலாம். ஆனால், நூறு கோடி பட்ஜெட்ல ஒரு படம் நிச்சயம் பண்ணுவான் கலாபிரபு. பிரபுவின் உதவி இயக்குநர்களோட படத்தை நானே தயாரிப்பேன் ' என்று உறுதி கொடுத்தார் கலைப்புலி எஸ்.தாணு.
  

இசை

படத்தின் இயக்குநர் கலாபிரபு பேசும் போது, ' கே.பி என்னைவிட ரெண்டு மடங்கு அதிகமா உழைச்சார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிச்ச சுதான்ஷு பாண்டே தமிழே தெரியாமல் ரொம்ப அழகா ப்ராம்ட் பண்ணினார். படத்துல வேலை பார்த்த எல்லோருக்கும் நன்றி. நான் படத்தைப் பற்றி பேசமாட்டேன். 'இந்திரஜித்' எனக்காகப் பேசும்’' என்று பேசினார். இறுதி நிகழ்வாக, சிறப்பு விருந்தினர் தேவி ஶ்ரீ பிரசாத் குறுந்தகடை வெளியிட மூத்த பத்திரிகையாளர் கே.பி. மணி பெற்றுக்கொண்டார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்