Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘தொடர் உண்ணாவிரதத்துக்குத் தயாராகும் டெக்னீஷியன்ஸ் யூனியன்’ - மீண்டும் களேபர களத்தில் ஃபெப்சி

ஃபெப்சி

Chennai: 

தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றதில் இருந்து ஃபெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே தொடர் பிரச்னை நிலவி வருகிறது. இதன் உச்சமே ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஃபெப்சி அமைப்பினரின் வேலை நிறுத்தம். இந்த வேலை நிறுத்தத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்ட ‘தென்னிந்திய சினி மற்றும் டிவி அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன்ஸ் யூனியனை’ (டெக்னீஷியன்ஸ் யூனியன்) கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஃபெப்சியிலிருந்து நீக்கினார், அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திங்கள் முதல் டெக்னீஷியன்ஸ் யூனியன் தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்க உள்ளனர். இதனால், ஃபெப்சியில் மீண்டும் களேபரங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

ஃபெப்சி சினிமா தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இருக்கும் 23 சங்கங்களில் ஒன்றுதான் இந்த டெக்னீஷியன்ஸ் யூனியன். ஆனால், இந்த யூனியன் ஆகஸ்ட் 15-ல் தற்காலிகமாக நீக்கப்பட்டு, செப்டம்பர் 7-ம் தேதி ஃபெப்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது. இதற்கு காரணம், மதுரையில் நடந்த ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் டெக்னீஷியன்ஸ் யூனியனுக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்புக்கும் சம்பள விஷயத்தில் சில முரண்பாடுகள் எழுந்ததுதான் என்கிறார்கள். இரு தரப்புக்குமான முரண்பாடுகள்தான் ஆகஸ்ட் 1,2,3-ம் தேதிகளில் ஃபெப்சி வேலை நிறுத்தத்துக்கே வித்திட்டதாம். இதையடுத்து, தயாரிப்பாளர் தரப்புக்கும் ஃபெப்சிக்கும் இடையில் சுமுகமான நிலை ஏற்பட்டவுடன், டெக்‌னீஷியன்ஸ் யூனியன் நீக்கப்பட்டது. 

தனபால்தயாரிப்பாளர் சங்கத்தை திருப்தி படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டெக்னீஷியன்ஸ் யூனியன் தரப்பில் அப்போதில் இருந்தே கூறப்பட்டு வந்தது. இது குறித்து டெக்னீஷியன்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தனபாலிடம் கேட்டோம், ‘ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டம், எங்கள் யூனியன்தான் தூண்டிவிட்டது என்பது போல சொல்லப்படுகிறது. உண்மையில், ஃபெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையில் நிலவிய சம்பள பிரச்னைதான் போராட்டத்துக்கு காரணம். தயாரிப்பாளர் சங்கம் எங்களை ஒடுக்குவதற்கு காரணம், ‘துப்பறிவாளன்’ படப்படிப்பின் போது, எங்கள் யூனியன் சார்பில் வேலை செய்தவர்களுக்கு சம்பள பாக்கி வைத்தனர். பிறகு, படப்பிடிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக சம்பள பாக்கி பைசல் செய்யப்பட்டது. அப்போதிலிருந்தே தயாரிப்பாளர் தரப்புக்கு எங்கள் மீது புகைச்சல் இருந்தது. பின்னர், ஃபெப்சி வேலை நிறுத்தம் சுமுகமாக முடியும் போது, இந்த பகையின் காரணமாக எங்கள் அமைப்பை ஃபெப்சியில் இருந்தே நீக்கினர். இதற்கு ஃபெப்சி தலைவர் செல்வமணியும் உடந்தையாக இருந்தார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நாங்களும் அமைப்பை செயல்பாட்டுக்குக் கொண்டு வர எல்லா வழிகளிலும் முயன்றுவிட்டோம். ஆனால், எதுவும் அதிகாரத்தில் இருப்பவர்களின் காதுகளில் விழவில்லை. எங்கள் தரப்பு, ஃபெப்சியின் மூலம்தான் தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச முடியும். ஆனால், ஃபெப்சியின் அமைப்பாளர்கள் இது குறித்து பேச மறுக்கிறார்கள். நாங்கள் கேட்பதெல்லாம் இரண்டே விஷயங்களைத்தான். ஃபெப்சியில் மீண்டும் எங்கள் சங்கத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பழைய முறைப்படியே சம்பளத்தை வழங்க வேண்டும். பேச்சுவார்த்தை பயன் கொடுக்காததால், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை (23-1017) முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க உள்ளோம்’ என்றார் ஆதங்கத்துடன். 

ஒரு வேளை, டெக்னீஷியன் யூனியன் மீண்டும் சேர்க்கப்பட்டால், தயாரிப்பாளர் சங்கத்தை பகைத்துகொள்ள வேண்டியிருக்கும். டெக்னீஷியன் யூனியனின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஃபெப்சி அமைப்புக்குள்ளே பல சச்சரவுகள் கிளம்பும். திங்களன்று மீண்டுமொரு பிரச்னை வெடிக்கும் என்கிறார்கள் தமிழ் சினிமா வட்டத்தினர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்