Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’’கல்யாணம் கன்ஃபர்ம்.. நடிப்பும் கன்ஃபர்ம்!’’ - ’எரும சாணி’ ஸ்டார் ஹரிஜா

சமூக வலைதளங்களில் பல இளைஞர்களின் புலம்பலை நேற்று   பார்க்க முடிந்தது. இந்த புலம்பலங்களுக்கு பின்பு இருந்தவர் எருமை சாணி புகழ் ஹரிஜாதான். எருமை சாணி மூலம் பலரின் இதயங்களில் குடியேறிய ஹரிஜாவுக்கு நேற்று நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இதனால் சோகத்தில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு ஹரிஜா என்ன சொல்ல போகிறார் என்று தெரிந்து கொள்ள ஹரிஜாவிடம் பேசினோம். 

எருமை சாணி ஹாரிஜா

’’சாரிங்க நேற்று முழுக்க கொஞ்சம் பிஸி அதுதான் பேச முடியவில்லை. இப்போ சொல்லுங்க’’ என பேட்டிக்கு உற்சாகமாக தயாரானார் ஹரிஜா. ''பல பேர் நான் சென்னை பொண்ணுனு நினைச்சுட்டு இருக்காங்க. நான் பக்கா கோவை பொண்ணு. குன்னூரில்தான் எங்க வீடு இருக்கு. அப்பா பிஸ்னஸ் பண்ணுறாரு. அம்மா ஹெல்த் டிபார்ட்மெண்ட் ஹெட். எனக்கு ஒரு அண்ணன் இருக்கார். எனக்குச் சின்ன வயசிலயிருந்து மீடியா மேல ஆர்வம் இருந்தது. அதனாலேயே விஸ்காம் பண்ணினேன். இப்போ மாஸ் கம்யூனிகேஷன் முடிச்சிருக்கேன். 

காலேஜ் படிக்கிறதிலிருந்தே ஷார்ட் பிலிம் பண்ணிட்டு இருந்தேன். அதற்கு அப்புறம்தான் 'எருமை சாணி' டீம் மெம்பர்ஸ் எல்லாம் சேர்ந்து நாங்களே ஸ்க்ரிப்ட் எழுதி ஷார்ட் பிலிம் டைரக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டோம். எனக்கு எருமை சாணி விஜய்யை விஸ்காம் படிக்குறதிலிருந்து தெரியும். நாங்க இரண்டு பேரும் ஒரே க்ளாஸ் மேட்தான். எருமை சாணியில் இருக்கிற எல்லோரும் ஒரே க்ளாஸ் மேட்தான். எங்க ஒளிப்பதிவாளர் மட்டும்தான் எங்களோட சீனியர் செட். ஃபர்ஸ்ட் வீடியோ எருமை சாணியில் வெளியானயுடன் நிறைய லைக்ஸ், ஷேரிங்ஸ் கிடைத்தது. எதிர்பார்க்கவே இல்லை. மில்லியன் வியூவிஸ் எல்லாம் இருந்தது. நம்பவே முடியவில்லை'' என்றவரிடம் எருமை சாணி பெயர்க் காரணம் கேட்டோம்.

’’அச்சசோ இந்தப் பெயருக்கு பின்னாடி நிறைய கதையிருக்கு. அதை எப்படி சொல்லணும்னுதான் தெரியலை. முதலில் 'ஜிகர்தண்டா'னு தான் பேர் வைக்கலாம்னு இருந்தோம். ஒரு நாள் எல்லோரும் நடந்து போயிட்டு இருந்தப்போ ரோட்டுல கெடந்த சாணியை ஃப்ரெண்ட் ஒருத்தன் மிதிக்கப் போனான். அந்த நேரத்தில் ''டேய் எருமை சாணிடா'' அப்படினு எல்லோரும் கத்தினோம். அப்போதுதான் எருமை சாணினு பேர் வைக்கலாம்னு தோணுச்சு. அப்படியே பேரும் வைச்சாச்சு. காலேஜ்யில் எல்லார் மத்தியிலும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. எல்லோரும் காலேஜ் படித்து முடித்துவிட்டு வெளியே போய் பண்ணுறதை நாங்க காலேஜ்யில் இருக்கும் போதே பண்ணினோம் . அதனால் காலேஜ்ல நாங்கதான் கெத்து.

எருமை சாணி ஹரிஜா

வீட்டில் அம்மா, அப்பா ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. எருமை சாணி வீடியோஸ், ஷார்ட் பிலிம் எல்லோத்துக்கும் அவங்க பெரிய பலமாகயிருந்தாங்க. அண்ணாவும் கூட சப்போர்ட் பண்ணினார். பட், என் சொந்தகாரங்க யாருக்கும் இது பிடிக்கவில்லை. அதனால், அவங்க யாருக்கும் இதில் இஷ்டமில்லை. பட், அதற்காக அப்பாவும், அம்மாவும் என்னை எதுவும் சொல்லவில்லை'' என்றவரிடம் வருகால கணவர் பற்றிக் கேட்டோம்.

''அவர் பெயர் அமர். நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ். அவரோடும் ஷார்ட் ஃப்லிம் நடிச்சிருக்கேன். ஒரு சில ஷார்ட் ஃப்லிமில்தான் இருவரும் ஜோடியாக நடித்தோம். மற்றபடி நான் நடித்த ஷார்ட் பிலிம் எல்லாத்திலேயும் அவர் நெகட்டிவ் ரோல்தான் பண்ணியிருப்பார். நிறையப் பேர் எங்க திருமணம் லவ் மேரேஜ்னு நினைச்சிட்டு இருக்காங்க. பட், இது பக்கா அரேஜ் மேரேஜ். அமர் வீட்டிலிருந்து ஃபர்ஸ்ட் எங்க வீட்டில் பொண்ணு கேட்டாங்க. வீட்டில் அம்மாவும், அப்பாவும் என்கிட்ட கேட்டாங்க. உங்களுக்கு ஓகேனா எனக்கு ஓகேனு சொல்லிட்டேன்.

ஹரிஜா

அமரை வீட்டில் எல்லோருக்கும் நல்லாவே தெரியும். அவரும் ஷார்ட் ஃப்லிம் மேக்கிங் பண்ணுவார். என் காலேஜில் எனக்கு அவர் சீனியர். எனக்கும் அமரைப் பிடிக்கும். ரொம்ப வருஷமாகவே நாங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். நண்பர்களாக இருந்தவரைக்கும் நிறைய பரிசு கொடுத்திருக்கிறார். இப்போ என்ன பரிசு கொடுக்க போகிறார் என்று தெரியவில்லை.  நிச்சயதார்த்தம் நேற்று முடிந்தது. எங்க திருமணம் அடுத்த வருடம்தான் நடக்கும். இன்னும் திருமணதேதி முடிவாகவில்லை. என் திருமணத்துக்கு பிறகும் என் ரசிகர்களுக்காக தொடர்ந்து நடிப்பேன். அவருடைய இயக்கத்தில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை’’ என்றவரிடம் சினிமா பக்கம் வருவீங்களா என்று கேட்டோம்.

''நிறைய சினிமா வாய்ப்புகள் வந்திட்டு இருக்கு. பட், எதை செலக்ட் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். ஹீரோயினாதான் நடிப்பேனு அடம் பிடிக்க மாட்டேன். நல்ல கேரக்டர் ரோல் எதுவாகயிருந்தாலும் பண்ணுவேன்’’ என்றவரிடம் எதிர்காலம் திட்டம் என்ன என்று கேட்டால், ''எருமை சாணிக்கு முன்னாடியே நிறைய டாக்குமென்ட்ரி ஃபிலிம்ஸ், சீரியஸ் ஷார்ட் ஃபிலிம் எல்லாம் பண்ணியிருக்கேன். பட், எருமை சாணிதான் ரசிகர்களிடம் நல்ல ரீச். அதனால், தொடர்ந்து நடிப்பேன். அதுமட்டுமில்லாமல் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ இருக்கு. அதையும் கவனித்துக் கொள்வேன்’’ என்றபடியே டாட்டா சொல்லி விடைபெற்றார் எருமை சாணி ஹரிஜா. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்