Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அம்மா எப்படி செத்தாங்க... ஓவியாவுக்கு ஏன் ஓட்டு?' - என்ன இருக்கிறது ஆர்.கே.நகரில்?

'மேயாதமான்' படத்துக்குப் பிறகு நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவரப் போகும் திரைப்படம் 'ஆர்.கே.நகர்'. படத்தின் பெயரே அரசியல் பேசுகிறதே என்றால் சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் முழுவதுமே அரசியல் மட்டும்தான் பேசுகிறது. 'ஆர்.கே.நகர்' படத்தில் என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள படத்தின் இயக்குநர் சரவண ராஜனைத் தொடர்புகொண்டு பேசினேன். 

ஆர்.கே.நகர்

''நான் பிறந்தது மும்பை. என் அப்பா அங்கியிருந்த மில்லில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தார். சின்ன வயசிலேயே தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டேன். பத்தாவது வரைக்கும் பன்ணைப்புரம் என்கிற கிராமத்தில் படித்தேன். அப்புறம் சென்னை வந்துவிட்டேன். சென்னையில் காலேஜ் படித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு டான்ஸ் மேல் பெரிய ஆர்வம் இருந்தது. முதலில் டான்ஸராகத்தான் வெங்கட்பிரபு சார் குரூப்பில் சேர்ந்தேன். டான்ஸ் மாஸ்டராக சில படங்களில் வேலைப் பார்த்திருக்கிறேன். விக்ரமின் 'கந்தசாமி' படத்தில் வரும் ’அலேக்ரா அலேக்ரா’  பாடலுக்கு நான்தான் டான்ஸ் மாஸ்டர். அந்த நேரத்தில் வெங்கட்பிரபு சார் அவருடைய 'கோவா' படத்துக்கு டான்ஸ் மாஸ்டராக என்னை கமிட் செய்தார். 'கோவா' படத்தின் ஷூட்டிங் முடிக்குறவரைக்கும் கோவாவில் வெங்கட்பிரபு சாருடன்தான் இருந்தேன். அப்போதுதான் எனக்கு டைரக்‌ஷனில் ஆர்வம் வந்தது. 

'கோவா' படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபுவின் 'பிரியாணி', 'மங்காத்தா' இரண்டு படத்துக்கும் அவருடன் உதவி மற்றும் இணை இயக்குநராய் வேலைப் பார்த்தேன். சின்ன வயதிலிருந்தே எனக்குக் கதைகள் எழுதப் பிடிக்கும். அப்போதிலிருந்தே நிறையக் கதைகள் எழுதுவேன். மங்காத்தா படம் முடிந்தபிறகு என்னுடைய முதல் படமான 'வடகறி' படத்தை இயக்க முடிவு செய்தேன். 2014ம் வருஷம் 'வடகறி' ரிலீஸானது. அதற்குப் பிறகு ஒரு ஸ்க்ரிப்ட் வைத்திருந்தேன். பட், தயாரிப்பாளர் கிடைக்காததால் தள்ளிப் போயிட்டே இருந்தது.

அதன்பிறகுதான் 'ஆர்.கே.நகர்' படம் எடுக்க ஆரம்பித்தேன். படத்தின் ஒன் லைன் சொன்னவுடனே வெங்கட்பிரபு சாருக்குப் பிடித்து விட்டது. உடனே படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து விட்டோம். படத்தில் நடித்திருக்கும் வைபவ், சம்பத், பிரேம்ஜி எல்லோரும் கோவா படத்தில் வேலைப் பார்த்த சமயத்தில் இருந்தே எனக்குப் பழக்கம். என்னிடம் நல்ல நட்பில் இருப்பவர்களை வைத்து படம் எடுக்கும் போது வேலை வாங்குவது சுலபமாக இருக்கும். அதனால்தான் வெங்கட் சாருடைய டீம்மில் இருந்தவர்களையே படத்தில் நடிக்க வைத்தேன். இந்தப் படத்தில் சம்பத்துக்கு ஒரு பவர்ஃபுல்லான கேரக்டர்'' என்றவரிடம் டீசரில் 'அம்மா எப்படிச் செத்தாங்க... ஓவியாவுக்கு ஏன் ஓட்டு?' எனப் பல அரசியல் வசனங்கள் வெச்சிருக்கீங்களே... படத்தில் என்ன இருக்கிறது என்று கேட்டோம்.

ஆர்.கே.நகர்

’’இந்தப் படம் ஆர்.கே.நகர் ஏரியாவில் நடக்கும் கதை என்பதால்தான் சில கரென்டான விஷயங்களை ஜாலியாக படத்தில் சொல்லியிருக்கிறேன். அது படம் பார்க்கும் போது தெரியும். அதே மாதிரி ஓவியா டயலாக்ஸ் எல்லாம் ஷூட் போயிட்டு இருந்தபோது வைரலாக இருந்தது. அதனால்தான் படத்தில் சேர்த்தேன். ஷூட்டிங் நடக்கும் போதே சில வசனங்கள் தோன்றும். அதையும் படத்தில் சேர்ப்பேன். படத்தில் அரசியல், காமெடி, ரொமான்ஸ் என எல்லாமே இருக்கும். படத்தின் இடம்பெற்ற காட்சிகள் யாரையும் குற்றம் சொல்வது போல் இருக்காது. இப்போது நடக்கும் விஷயங்கள்தான் படத்தில் இருக்கும். படம் முழுக்க நான் அரசியல் பேசவில்லை. ஆனால், படத்தில் கண்டிப்பாக அரசியல் இருக்கு.

படத்துக்கு ஆர்.கே.நகர்னு பேர் வைத்தபோதே முடிவு செய்துவிட்டேன், படம் முழுவதையும் ஆர்.கே.நகர் ஏரியாவில்தான் எடுக்க வேண்டுமென்று. அப்போதுதான் ஆர்.கே.நகர் ஏரியா மக்கள் படுகின்ற கஷ்டமெல்லாம் எனக்குத் தெரிந்தது. அந்த ஏரியா மக்கள் ரொம்ப நல்லவர்கள். அவர்கள் தங்குவதற்கு இடம் இல்லை என்றாலும் நமக்காக இடமெல்லாம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்’’.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்